வணக்கம் நண்பா..நலமா..? என்று வந்தார் நண்பர். வந்தவர் என்னருகில் அமர்ந்து
ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு சரியான பதிலை கூறு என்று விட்டு கேள்வியைக் கேட்டார்.
தமிழ்நாட்டில் “அம்மா”ன்னு அழைக்காத உயிரினம் எது ? என்று நண்பர் கேட்டபோது
நானும் சட்டென்று ஒரு கேள்வியைக் கேட்டேன். இரண்டுகால் உயிரினமா? நாலுகால்
உயிரினமா? என்று...
நான் கேட்டதும் கெக்கே பிக்கே..ன்னு சிரித்தார். சிரித்து முடித்தப் பின்,
அம்மான்னு அழைக்காத இரண்டு கால் உயிரினம் தமிழகத்தில் இல்லையே நண்பா...என்றார்
நான் என் புருவத்தை உயர்த்துவதைக் கண்டதும்.“பாரு..புரட்சிப் படகரான மகஇக
தோழர் கோவன் கூட அம்மான்னு அழைக்காம பாடல் பாடியதாக இல்லீயே நண்பா....நீங்க
படிக்கும் வினவு தளம் கூட அம்மான்னு எழுதாம விட்டதில்ல நண்பா.... அதனால ரெண்டு கால் உயிரினத்தில் அம்மான்னு
கூப்பிடாத உயிரினம் இல்லை. அதனால ரெண்டுகால் உயிரினத்த விட்டுட்டு நாலுகால்
உயிரினத்தை சொல்லுங்க என்றார்.
நானும் “புருவத்தை நெரித்தால் புதிய உபாயம் தென்படும்” என்று தோழர் சொன்ன மாதிரி சிறிது நேரம் யோசித்தேன் சாராய ராணியை அம்மான்னு கூப்பிடாத நாலுகால் பிராணி எது என்று..
சிறிது நேரங்கழித்து
சிறிது நேரங்கழித்து
நண்பரே, என் அறிவுக்கு எட்டிய வரையில் யோசித்து பார்த்த வரையில் “அம்மா”ன்னு கூப்பிடாத நாலுகால் உயிரினத்தில் முதலில் வருவது “நாய்”தான் என்றேன்.
அடித்தாலும் மிதித்தாலும், கல்லைக் கொண்டு எறிந்தாலும். அது..தன்னை பெற்ற
அம்மாவைக்கூட “அம்மா”ன்னு கூப்பிடாது நண்பரே...
நண்பர் அடுத்து கேட்டார் அம்மான்னு கூப்பிடாது என்றால் பின் எப்படி கூப்பிடும் என்று கேட்டார்.
நண்பர்க்கு ரியலாக காட்டுனால்தான் புரியும் போல என்று நிணைத்து, லொள்....லொள்...லொள் என்று கத்தி நடித்துக் காண்பித்தேன்.
அட, ஆமா.... நாயி அம்மான்னு கூப்பிடாதுல்ல உண்மையிலே மனிதர்களைவிட நாய்தான் சுயமரியாதை உள்ளது என்று சொல்லிவிடலாம் போல என்று விட்டு அவரும் கத்தி பார்த்து, லொள்ளு...லொள்ளு லொள்ளு ..ன்னுதான்
கூப்பிடுது என்றார்.அடுத்து எது என்றபோது..
பன்னி என்று நான் சொன்னபோது..“அவரே பன்னி மாதிரி உறுமி காண்பித்தார். வந்த
சிரிப்பை அடக்கிக் கொண்டேன.
ஆக, தமிழ்நாட்டுல “அம்மா”ன்னு கூப்பிடாத உயிரினம் இந்த ரெண்டு மட்டும்தானா..?
என்று கேட்டார்.
எனக்கு தெரிந்து இதுதான். நண்பரே...மற்றும் ஆங்கிலம், இந்தி படித்த
பெரிய அறிவாளிகளிடம் கேட்டால்..அவர்கள் கண்டு பிடித்து அவைகள் ஏன்? அம்மான்னு கூப்பிடவில்லை என்று ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பிறகு முடிவுகளை தெரிவிப்பார்கள்.நண்பரே.என்றபோது...
“அய்யோ, அவிங்க ஆய்வுக்கு உட்படுத்தவே ஐந்து வருடத்துக்கு மேல் ஆகுமே
நண்பா....என்றார்
அடுத்த அய்ந்து வருடம் கழித்து நாயும் பன்னியும் ஓட்டு போட்டு மீண்டும அவர்களே ! ஆட்சிக்கு வந்த பின் நாயும் பன்னியும் “அம்மா”ன்னு
கூப்பிட்டதாக ஆய்வில் கண்டுபிடித்ததாக தெரிவிப்பார்கள் என்றபோது
நண்பர் ..., “அடடா.....வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டோமே” என்று......பேந்த பேந்த முழித்தார்..
நண்பர் ..., “அடடா.....வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டோமே” என்று......பேந்த பேந்த முழித்தார்..
ஹாஹாஹா நல்ல ஆய்வுதான் நண்பரே...
பதிலளிநீக்குஅம்மான்னு கூப்பிடாத உயிரினங்கள் பற்றி நல்ல ஆய்வு.
பதிலளிநீக்கு//லொள்ளு லொள்ளு ..ன்னுதான் கூப்பிடுது// - மிகவும் லொள்ளுதான் உமக்கு!
பதிலளிநீக்குநல்லாத்தான் ஆராய்ச்சி பன்றீங்க
பதிலளிநீக்குஇந்த ஆய்வுக்காக , உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலாம் :)
பதிலளிநீக்குஹா ஹா
பதிலளிநீக்கு:))))))
பதிலளிநீக்கு