என்றைக்கு அரசாங்கம் சாராயம் விற்க
ஆரம்பித்ததோ, அன்றையிலிருந்து தான் சாராய வடிக்கையாளன் என்று பெருமையாக தன்
குடிகார நண்பர்களிடம் பீற்றிக் கொள்வான் அந்தக் குடிகாரன்.
அந்தக் குடிகாரனின் குடிகார நண்பர்களும்
தங்கள் பங்குக்கும் சில அருமை பெருமைளை கூறி அரசாங்க சாராயத்துக்கு
வாடிக்கையாளர்கள் என்று அவர்களும் பீற்றிக் கொள்வார்கள்.
பெருமை பேசியே நிரந்தர
குடிகாரனாக போய்விட்ட அந்தக் குடிகாரன் வேலை கிடைக்கும் நாட்களில் வேலை செய்து
கிடைக்கும் கூலியில் பெரும்பகுதியை அரசாங்க சாராயக் கடைக்கு கொடுத்து. கடைக்கு
சற்று அருகில் உள்ள இடத்தில் அமர்ந்து அரசு சாராயத்தை உள்ளே இறக்கிவிட்டு தள்ளாடிய
படியே தன் வீடு வந்து சேர்வான்.
வீடு வந்து சேர்ந்தவுடன். தன்
மனவியிடம் கேடுகெட்ட வசவுகளுடன் தன்
வீரத்தை காட்டுவான். குடிவெறியில் இருப்பவனிடம் எதுவும் பேசாமல் அவன் தெறிக்க
விடும் வசனங்களையும் விழும் அடிகளையும் உதைகளையும், பொருத்தார் பூமியை ஆள்வார்
என்பது போல் வாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பாள். பக்கத்து வீட்டீல்
உள்ளவர்களுக்கும் நிரந்தர நிகழ்வாக போய்
விட்டதாலும் அவர்களின் வீடுகளிலும் இந்தக் கூத்துகள் நடப்பதால் எதுவும் கண்டு
கொள்வதில்லை. எதிர்த்து எந்த முனு முனப்பும் செய்வது இல்லை
அரசாங்க சாராயத்தை குடித்துவிட்டு
குடிவெறியில் வருபவன்களை கேட்க நாதியற்று போனதாலும் சனியன்களை தலைமுழகிவிட்டுச்
செல்ல வேறு போக்கிடம் இல்லாத்தால். அடி உதை வாங்கி விதி வந்தால் சாவோம் என்று
குடிகாரன்களின் மனைவி மார்கள் காத்திருந்தார்கள்.
அப்படி காத்திருந்தாள் அரசு சாராயக் கடையை
திறந்த்திலிருந்தே தான் வாடிக்கையாளன் என்று தற்பெருமை பேசித் திரிந்த குடி
வெறியனின் மனைவி.
பல நாளில் ஒரு நாள் அந்த நாளும் வந்தது
போதை வெறியுடன் வந்தவன். வழக்கம் போலவே தன் மனைவியை வசவுகளுடன் அடித்துவிட்டு
உதைத்துவிட்டு, போதையிலே அவள் அருகிலேயே படுத்து தூங்கியும்விட்டான்.
காலை. போதை தெளிந்து எழுந்தவன். தன் மனைவி
எழுந்திருக்காமல் படுத்திருப்பதைக் கண்டான். அவள் பெயரைச் சொல்லி திட்டி
எழுந்திருக்கச் சொன்னான். அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதினால் கோபத்துடன்
எழுந்து. அவளை காலால் எத்தினால். அவள் அசைவற்று கிடந்தாள்.
பதறிப்போன அவன் அவளை தொட்டு தூக்கி
பார்த்தபோதுதான் அவனுக்கு உரைத்தது. தான் குடிவெறியில் அவளை அடித்து உதைத்த்தினால் இறந்து போனது தெரியாமல்
அவள் அருகில் படுத்திருந்த்து எல்லாம். தன் இரண்டு குழந்தைகளை பார்த்தான்
அதுகள் இரண்டும் இரவில் நடந்த்து தன தாய் இறந்து போனது எதுவும்
தெரியாமல் பக்கத்து குழுந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த்து.
குடிவெறியில் வரும்போது எதிரில் வரும்
போலீசைக் கண்டு பயப்படாமல் வந்த குடிவெறியனுக்கு இப்போது போலீசை நிணைத்து பயவெறி
தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என்றே தெரியாமல். ஒரு முடிவுக்கும் வரமுடியாமல்
தவித்தான்.கைகள் கால்கள் நடுங்கின. தன் மனைவி முகத்தைப் பார்த்தான். இரவில் சத்தம்
போட்டு வசவுகளை ஏசியவனுக்கு நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது. அழ முடியவில்லை. பேச
முடியவில்லை...பய வெறியால தவித்தான்.
விளையாடிய குழந்தைகள் வீட்டுக்குள்
நுழைந்தபோது. அப்பன்தூக்கில் தொங்குவதைக் கண்டு வெளியில் வந்து உடன் விளையாடிய
பிள்ளைகளிடம் சொல்ல... தீயாக பரவியது. அக்கம்பக்கம் எல்லோரும் குடிவெறியன்
தூக்கில் தொங்குவதையும் அதன் கீழே அவன் மனைவி பிணமாக கிடப்பதையும் பரிதாப்ப் பட்டு
வேடிக்கை பார்த்தனர்.
அரசாங்க சாராய கடைக்கு காவல் காக்கும்
போலீஸ் வந்தது. கூட்டத்தை விரட்டியது. சாராய வடிக்கையாளனின் பொணத்தையும்,
குடிவெறியால் கொன்ற வாடிக்கையாளனின் மனைவி பொணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு
சென்றது.
அந்தத் தெரு கூட்டத்தோடு குடிவெறியனின் இரு
குழந்தைகளும். தன் தாய் தகப்பனை தூக்கி, வண்டியில் ஏற்றிச் சென்றதை பார்த்த வண்ணம் நிர்க்கதியாய் நின்றது.
இந்தக்குழந்தைகளின் வாழ்வுக்கு இந்த அரசு பொறுப்பு ஏற்குமா ? மக்கள் இப்பொழுதாவது உணரவேண்டும் நாளை நமக்கும் இதே கதி என்பதை
பதிலளிநீக்குவாக்கு சோர்க்கப்பட்டுள்ளது என்று வருகின்றது நண்பரே ஆனால் நம்பர் கூடவில்லை
பதிலளிநீக்குகொடுமை ? கொடுமை
பதிலளிநீக்குஇது ஒரு உதாரணம்தான் ,பாவம் இப்படி எத்தனைக் குழந்தைகளோ ?
பதிலளிநீக்குஅந்தக் குழந்தைகளின் கதி...
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குதொடருங்கள்
பாவம் குழந்தைகள்....நல்ல அரசு ஹும்! ஒன்ரும் சொல்வதற்கில்லை..
பதிலளிநீக்குஉள்ளம் நெகிழ்தது! குழந்தகளின் எதிரஃ காலம் ?
பதிலளிநீக்குஅரசின் அசூரவளர்ச்சி அனாதைகள் ஆகும் பிள்ளைகள்.
பதிலளிநீக்கு