ஞாயிறு 30 2016

கோமாதா மூத்திரத்தின் விலை 12 ரூபாய்.....

மாப்ளே..தீபாவளிய கொண்டாடிட்டியா... என்று , குரல் கேட்டு “யாருடா நம்மள மாப்ளேன்னு கூப்பிடதுன்னு”  அவர் திரும்பி பார்த்தபோது ஒரு பெரிசு தனக்கு பின்னால் வந்தவரை  பார்த்து விசாரித்தது. பின்னால் வந்தவரை பார்த்தபோது....

அவர் இவரை பார்த்து புன்புருவலோடு இரு கை கூப்பி வணக்கம் சொன்னார்..அவருக்கு இவர் தெரிந்தவர். இவருக்கு அவர் தெரிந்தவர். அவர் வணக்கம் சொன்ன மறுநிமிடமே  மாப்ளே என்றவர்க்கு ..“இல்ல மாமா  ” என்று பதில் சொல்லபடி அவருக்கு அருகில் சென்றார்.. வணக்கம் சொன்னவருக்கு இவரும் பதில் வணக்கம் சொன்னார்.

பெரிசு திரும்பவும்.... பேசினார். சரி, தீபாவளி கொண்டாடவில்லை என்றால் போகுது எனக்கு தீபாவளி காசு கொடு என்றார். அதெப்படி மாமா..தீபாவளி கொண்டாடுறவங்கதானே   தீபாவளி காசு கொடுக்கனும்.   நீங்கதான் எனக்கு கொடுக்கனும் என்ற போது....

நீ...யாருக்கும் தீபாவளி காசு கொடுக்கவே இல்லீயா  என்றார். அவரும் யாருக்கும் கொடுக்கவில்லையே என்றார்.  ஏய்....மாப்ளே  பொய் சொல்லாதே.. என்றபோது.... உங்கிட்ட நான் ஏன் பொய் சொல்லப்போறேன்.

பெரிசு பக்கத்தில் நின்றவரை பார்த்து “ நீங்கள்  என்றபோது... எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கொண்டாடியது இல்லை என்றதும்  பெரிசு அவர் மாப்பிள்ளையை பார்த்து விட்டு பின் சொன்னார். மாப்பிள்ள கருப்பு சட்டைக்காரன். என்பது எனக்கு தெரியும்... மாப்பிள என்ன சொல்லுவார்ன்னு ஒரு டெஸ்டிங் என்றார்.

அந்த மாப்பிளகாரர் விஸ்ணு அன்டு நரகாசுரன் கதையை சொன்னார். கேட்டுக் கொண்ட பிறகு இவரும்   சொன்னார்.அந்தக் கதை அப்படியா... இப்ப  ஒரு லேட்டஸ்டா கதைய அவுத்து விட்டு இருக்காங்கே... அந்தக் கதைய இதுதான்..

மாட்டுக்கறிய திண்ணுறவன  கீழ்சாதின்னு  சொல்றாங்கே.... மாட்டு மூத்திரத்த குடிக்கிறவன மேல்சாதின்னு சொல்றாங்கே...  ..மாட்டு மூத்திரத்துக்கு அறிவியல் சாயம் பூசி   மாட்டு மூத்திரத்தில அந்த சத்து இருக்கு இந்த சத்து இருக்குன்னு மாட்டு கோமியத்த குடிக்கிறாங்கே... அதே மாட்டு மூத்திரத்த டாப்பல பேக் பண்ணி  கோமியம்,ன்னு விக்கிறாங்கே

இதப் பாருங்கன்னு தன் செல்போனில் சேமித்து வைத்த படத்த காண்பித்தார்...

அந்தப் படத்த பார்க்க சிறு கூட்டமே... கூடிவிட்டது...பெரிசு மாப்பிளக்கு பின் பார்த்துவிட்டு ரெம்பவும் வசச் சொற்களால் கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்துவிட்டார் அது அன்றைக்கு  அது   தீபாவளி பிரச்சாரமாகிவிட்டது.

அந்தப்படத்தை தாங்களும் பார்க்க...




நன்றி!..வினவு...

6 கருத்துகள்:

  1. காணொனியை கண்டேன் இந்த நாடு என்ன நிலைக்கு போகப் போகின்றதோ....

    பதிலளிநீக்கு
  2. இது உண்மை என்றால் பாலின் விலையை விட மூத்திரத்தின் விலையல்லவா கூடியிருக்கும் :)

    பதிலளிநீக்கு
  3. Maattaik kontru athan kariyai sappiduvathai vida, , kollaamal mooththirathai kudippathil enna thappu

    பதிலளிநீக்கு
  4. எங்கிருந்துதானோ இப்படிக்காட்சிகள் எடுக்கின்றீங்களே)))

    பதிலளிநீக்கு
  5. இந்திய திருநாட்டை உலகத்தில் கேவலப்படுத்தாமல் விடமாட்டார்கள்.....ஏமாளிகள் கோமாளிகளால் ஆட்சி செய்யப்படுகிறார்கள் என்று மாத்திரம் என்னால் சொல்லமுடியும்....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....