திங்கள் 14 2016

தொடரும் அவதியும்..வில்லனின் கொடூரமும்........


.......................
.....................
..................








என்னங்க  பிரதர்...இப்படி சலிச்சுகீறிங்க.....ஒருநாள்ல வந்து நிக்கிறதுக்கே..இப்படின்னா... பிறந்ததிலிருந்து சாகுர வரைக்கும் காத்திருப்பேதே பொழைப்பா போன.. நாங்களெல்லாம் எங்கே போயி யாரிட்ட போயி சலிச்சுகிறது  பிரதர்.....

வரிசையிலே நிக்கிறதப் பத்தி சலித்துக் கொள்ளவில்லை பிரதர்....இப்படி என் பொழப்ப அந்தர கோலமாகிவிட்ட சன்டாளப்பயல்கள நிணச்சு பொருமுறேன் பிரதர்......

நிஜமாகவா..பிரதர்...

ஆமாம் பிரதர். இந்தப் பேப்பரை பாருங்கள் பிரதர்.


மக்களுக்காக உயிர் தியாகம் செய்யத் தயார் மோடி ஆவேசப்பேச்சு.......இந்த பேச்சு அந்தாளுக்கு கைவந்த கைலையாச்சே பிரதர்...


அது இல்ல பிரதர்... நம்ம உயிர வாங்கிபுட்டு இவரு பெருசா உயிர்விடத்தயார்ன்னு ஆவேசமா பேச்சு-இத படிச்சுபுட்டுத்தான் பொருமினேன்...பிரதர்.

உண்மைதான் பிரதர்..உங்க வாயிலிருந்தே...அந்த நாறுன கெட்ட கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்திருக்கன்னா.....நீங்க திட்டுன அந்த ஆளு மகா கொடூரமானவன்தான்.. பிரதர்.


இன்னொன்னு பிரதர்.. இந்தக் கொடுமை இன்னும் நீடிக்குமாம் பிரதர்.....


கள்ள பணத்த...கருப்பு பணத்த ஒழிக்கிறாங்கோலோ இல்லீயோ.... அந்த ஆளு சொல்லிக்கிற இந்துக்களையும் சேர்த்து ஒழிப்பாங்க பிரதர்...


புலம்பாத என்னையே புலம்ப விட்டவரு...வில்லாதி வில்லன் பிரதர்.

அந்த வில்லாதி வில்லனும் ஒருநாள் துண்டக் காணோம் துணியக் காணோம்முண்ணு ஓடுற காலம் ஒன்று வரும் பிரதர்....



அந்தக் காலம் எப்போ வருமோ...பிரதர்...


அந்தக் காலம் வர லேட்டாசுன்னா... நாமெல்லாம் கூடி தேர் இழுத்து வருகிற மாதிரி இழுத்து கொண்டு வருமோம் பிரதர்.


11 கருத்துகள்:

  1. அது எந்த வார்த்தைனு தெரியலையே பிரதர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வாயிலிருந்து வந்தவைகள் ரெம்பவும் புனிதமான வார்த்தைகளா இருப்பதால் என்னலா எழுத முடியல..நண்பரே..

      நீக்கு
  2. கெடுதேதி டிசம்பர் 3௦ ,அதுவரை இப்படித்தான் அலைய வேண்டும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  3. இந்த தொல்லை டிசம்பர் வரை தொடருமாமே :)

    பதிலளிநீக்கு
  4. இப்படியான இந்த சமயத்தில் நமது தமிழக முதல்வர் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இல்லாமல் இருந்து இருந்திருந்தால் வலிப்போக்கனின் பிரதரின் சலிப்புக்கு கண்டிப்பாக ஒரு நடவடிக்கை எடுத்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட....! வேகநரி....! நீங்க எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க....!

      நீக்கு
    2. யாருமே தமிழக முதல்வரை பார்க்க முடியாதபோது.. நம்ம வேகநரியார்.. அவுக காய்ச்சல் வந்து படுத்து இருந்ததை பார்த்து இருந்ததை சொல்லியிருக்காருன்னா..அதுவே அவருடைய திறமையை தெரிஞ்சியிருக்கனும் திரு. இருதயம் அவர்களே..

      நீக்கு
  5. வலிப்போக்கரே,
    அப்பல்லோவின் உயர் மருத்துவர், காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தமிழக முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, காய்ச்சல் மாறி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,வழமையான உணவு சாப்பிடுகிறார் என்றும் தெரிவித்தாரே!
    விரைவில் மறந்துவிட்டீர்களே!

    //இருதயம்December 1, 2016 at 7:18 PM
    நீங்க எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க....!//
    என்ன செய்வது தமிழக குண இயல்பு. நடக்கவே முடியாதவைகளை பற்றியே யோசிப்பது.

    பதிலளிநீக்கு
  6. சென்னை வந்த சென்றபோது மிகுதி கொஞ்சப்பணம் எடுத்து வந்தேன் மீண்டும் உதவும் என்று இப்ப செல்லாத பணத்தை எண்ணி வெளிநாட்டிலும் புலம்பும் நிலையில் நானும் ))))

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....