பக்கங்கள்

Thursday, March 02, 2017

வேறு இடம் தேடி....????

வெகு நேரமாக அந்த கிணற்றின் திண்டின் மேல் அமர்ந்து காலை கிணற்றுப் பக்கமாக தொங்கப் போட்டுக் கொண்டு... அடர்த்தியாக வளர்ந்திருந்த தலை முடியை ஒரு ப்க்கமாக கோதிவிட்டுட்டு தாடியை தடவியபடியே யோசித்து கொண்டு இருந்தார் அந்த மனிதர்.

அந்த மனிதரை அந்த நிலையில்  பார்த்தால் தற்கொலை செய்து கொள்வதற்க்கான முன்னேற்பாடு  மதிரியே தெரியும்.. அது உண்மையும் கூட... அதற்கு காரணமும் இருந்தது.

அவரை உயிர்க்கு உயிராய் காதலித்த அவர் மனைவியும் இறந்துவிட்டார்.. அவரின் காதல் மனைவி வேற்று சாதி பெண் என்பதால்... அவர் தந்தை மற்றும் சகோதரர்களால் துரத்தியடிக்கப்பட்டார். 

அவரின் காதல் மனைவியின் தைரியத்தால்  தன் சாதி வெறி குடும்பத்தை ஒதுக்கிவிட்டு  அவர்களுக்கு தெரியாத ஊரில் வசித்து இரண்டு பெண்களை பெற்றெடுத்து அவர்களுக்கு மணம் முடித்துவிட்டு, மனைவிக்கு ஒத்தாசையாக... வலது கரமாக இருந்து வந்த நிலையில் திடிரென்று ஒருநாள் காப்பற்ற எந்த வாய்ப்பும் சிரமும் அவருக்கு கொடுக்காமல் அவரை பரிதவிக்கவிட்டு மனைவி இறந்துவிட்டார்.

வெளியூர்களில் வசிக்கும் மகள்கள் தங்களோடு வந்து இருக்கும்படி ஒப்புக்கு கேட்டாலும் . மருமகன்களின் குணத்தை.அறிந்து அவர்களுடன் செல்லாமல் சாக்கு போக்கு சொல்லி மகள்களைஅனுப்பி வைத்தார்..

மனைவியின் சேமிப்பு பணத்தை வைத்து.. மூன்று மாதத்தை ஒரு நொடிபோல் கழித்துவிட்டார். வேலைக்குச் சென்றாலும் அவரின் காதல் மனைவியின் பேச்சும் அரவணைப்பும்  நிணைவலைகளில் வந்து மோதியதால்  வேலை செய்யமுடியாமல் தவித்தார். தப்பித்தவறி  அவர் இயந்திரங்களில் சிக்கவிடக்கூடாது என்பதால் தெழிலகத்தின் கண்காணிப்பாளர்... லாங் லீவு கொடுத்து அனுப்பிவிட்டார்.

காதல் மனைவியின் நிணைவால் தூக்கத்தையும் இழந்து பைத்தியக்காரனைப்போல் வீதி வீதியாய் ஊர் ஊராய் சுற்றிக் கொண்டு இருந்தவர். கடைசியாக.ஒரு கிராமத்தின் .வயல் வெளியில்  ஊரை ஒட்டியள்ள இந்தக் கிணற்றில் வந்தமர்ந்தார்.

கிணற்றில் அமர்ந்து இவரின் செயல்களை வீட்டில் இருந்து கவனித்து வந்த கிணற்றுக்கு சொந்தக்கார பெண்  உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு இவரை நோக்கி  வந்தார்.

 வந்தவர் ..அய்யா... யாரு..நீங்க...? இங்கு என்ன செய்யிறீங்க..? தப்பித்தவறி இந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திடாதிங்கய்யா..... தண்ணீருக்காக ஃபோர் போடுவதற்க்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால்.... கிணற்றையும் வயலையும் விற்பதற்க்காக ஏற்பாடு செய்து கிட்டு இருக்கோம்....

நீங்க விழுந்து எதாவது ஆச்சுன்னா.... விற்கிற விலையை அடிமட்டமாக குறைப்பாங்க அய்யா..... அத.வாங்கிட்டு கடனை அடைக்க முடியாதுங்கய்யா.. நாங்க சாகிறத தவிர வேறு வழி இல்லங்கய்யா... என்று அழமாட்டாத குறையாக  சொல்லி முடித்தபின்  உடன் வந்த ஒருவர்.... நாங்களே சாக வழியில்லாம கிடக்கோம்.இதுல நீங்க..வேறையா.....என்றவுடன்....

தாடியை தடவுவதை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்தார்....  அந்தப் பெண்ணை பார்த்து கும்பிட்டபடியே அவ்விடத்தை  விட்டு நகர்ந்து வேறு இடம் தேடி தன் பயணத்தை தொடர்ந்தார்...


4 comments :

  1. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  2. மனித உயிர் தான் எத்தனை மலிவு...!

    ReplyDelete
  3. கொடுமை கொடுமைன்னு கிணத்துலே விழப் போனா அங்கேயும் .....:(

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com