பக்கங்கள்

Friday, February 24, 2017

நக்கலுக்கு நக்கல்.....

என்ன கணேஷ்   பத்து மணிக்கே வந்தே..மணி ஒன்னாகப் போகுது.. இங்க ஒக்காந்து காலாட்டிகிட்டு இருக்கே...வாய் பாக்குற பழக்கம் இன்னும் போகல போலிருக்கே என்று வந்த நண்பர் கேட்டது.வங்கியில் இருந்த அனைவரும்.. நண்பர் சொன்ன அந்த கணேசை எல்லோரும்  தங்கள் வேலையினுடே அந்த கணேசை பார்த்தார்கள்

தலையில. அதிகமான நரைத்து தாடியும் மீசையும் வளர்ந்திருந்ததும் அதை மறைக்க கண்ணாடி அணிந்திருந்த அந்த முகத்தை ஒரு கனம் பார்த்துவிட்டு திரும்பவும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தினர்.

கண்ணாடி அணிந்திருந்த அந்த முகம்.. நண்பரின் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னது... ஆமா.. நகையை அடமானம் வச்சு கடன் வாங்க வந்தேன். நான் வந்த நேரம் எனக்கு முன்பே..மூன்று பேர்கள் வந்துவிட்டார்கள். நகை மதிப்பீட்டாளர் அந்த மூவர்க்கு முடித்துவிட்டு என் கணக்கை முடித்தார். நான் பணம் வாங்க வந்த நேரம்  கேசியர்  அக்கா.. காபி குடிக்க போயிட்டாங்க..சரி காபி குடிச்சுட்டு எனக்கு முதல் ஆளா  பணத்தை தருவாங்குன்னு  பார்த்தா... சரி பார்க்கும இந்த தமிழ் தெரியாத அதிகாரி அந்த கேசியர் அக்க வைத்துள்ள எனது பண்ம் எடுபு்பு சிட்டை சரி பார்த்து கையெழுத்து போடாம.. அவர் இருக்கைக்கும் மேலாளர் அறைக்கு போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்காரு..

அவரும் ஒருவழியாக.. எனது பணம் எடுப்பு சீட்ட எடுத்து  பார்த்துவிட்டு போட்டோ..போட்டோ..என்று சொல்ல.... நான் ஒன்னும் புரியாமல் விழிக்க.. அருகில் பாஸ் புத்தகத்தில் வரவு செலவு பதிந்து கொடுக்கும் அக்கா வந்து
புதிதாய் போட்டோ கொண்டு வாங்க என்று சொல்ல.. நான்  அடுத்து வரும்போது போட்டோவுடன் வருகிறேன் என்று சொன்ன பிறகு எனது பணம் எடுப்பு சீட்டில் கையெழுத்து போட்டு கொடுக்க... கேசியர் அக்கா எப்ப கூப்பிடுவாங்கன்னு உக்காந்து இருக்கேன்... நா... ஒன்னும் காலாட்டிகிட்டு இருக்கலப்பா.... இங்க காலாட்டிக்கிட்டு இருக்கிற மாதிரியா சேர் போட்டு இருக்காங்க..உட்காந்தா சட்டுபுட்டுனு எழுந்திருக்க முடியாதாளவுக்கு அல்லவா சேர் போட்டு இருக்காங்கே  என்று சொல்லி முடித்தார்...

வந்த நண்பர்...ஆகா..வென.. வாயைப் பொளந்தார்.. கடைசியாக முடிந்ததா... இன்னும் இருக்கா என்றார்....

இன்னும் முடியவில்லை.. பணத்தைப் பெற்றுக் கொண்டு  இவ்விடத்தை விட்டு சென்ற பிறகுதான் முடியும் எனற் போது.... பக்கத்தில் அமர்திருந்த பெண்மணியைப் பார்த்து இது  யாரு? என்று கண்களால் கேட்டார்.

அதற்கும் அந்த கணேஷ் நண்பர் பதில் சொன்னார் “ யாரென்று தெரியவில்லை கையேழுத்து போட பேணா வாங்கினார். இன்னும் கையேழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் என் பேனா என்னிடம் வந்த பாடில்லை என்றதும்.... நண்பருடன் சேர்ந்து  சில சிரிப்பொலி கேட்டதும்தான் தாமதம்

பணம் எடுப்பு சீட்டில் கையெழுத்து போடுவதற்கு போர் புரிந்து கொண்டு இருந்த பெண் மணி. தலை நிமிர்ந்து இரு நண்பர்களையும் ஏறிட்டு பார்த்துவிட்டு மீண்டும்  போர் புரியத் தொடங்கினார்.....

ஒரு வழியாக நகை அடமானக் கடன் பெற்றுக் கொண்டு..நண்பரை பார்த்தபோது... நண்பர் ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைத்துவிட்டு பணம் கட்டும்  வரிசையில் நின்று கொண்டு இருந்தார்....

5 comments :

 1. யம்மாடி...! எவ்வளவு சிரமம்...!

  ReplyDelete
 2. வர வர வங்கிகளில் வடஇந்திய ஆதிக்கம் அதிகமாகி விட்டது :)

  ReplyDelete
 3. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

  ReplyDelete
 4. அருமையாகச் சொன்னீர்கள்
  கையெழுத்துப் போட
  பேனா கொடுத்தவர்களைப் பற்றி...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com