இட்லரது எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா நிலைகுலைந்தது என்னவோ உண்மை தான். எங்கும் குழப்பம் நிலவியது. ஒரு சில புல்லுருவிகள் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டனர். புதிய புரளிகள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் நாட்டைவிட்டி ஓடிவிட்டார் என்ற வதங்திகள் கூட பரப்பப்பட்டன. செம்படையின் தொடந்த பின்வாங்கல் மக்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. தோல்வி மனப்பான்மை வளரத் தொடங்கியது.
மக்களின் பயத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்ட வேண்டும். சோர்ந்து போனவர்களுக்குத் தெம்பூட்ட வேண்டும். பின்வாங்கும் செம்படைகளின் கட்டுப்பாட்டை மேலும் உயர்த்த வேண்டும். அதன் தொடக்கக் கட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். புதிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் ஆயுதத் தளவாடங்களைப் பல நூறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். செம்படை வீரர்களின் மன உறுதி மேலும் வலிமையாக்கப்பட வேண்டும். பீதியை கிளப்பும் எதிரிகளின் எடுபிடிகளையும். உளவாளிகளையும் தனிமைப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உழைக்கும் வர்க்க முன்னணிப் படையாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் ராணுவக் கட்டுபாட்டை ஏற்படுத்த வேண்டும். இவ்வேலைகளைச் செய்யாமல் போனால் நாடு அடிமைப்படுத்தப்படும்.
இந்த வேலைகள் எளிமையானவை அல்ல. அதுவும் நாடு முழுவதும் எரிந்து கொண்டும், வெடித்துச் சிதறிக் கொண்டும் இருந்த நேரத்தில் இது மேலும் கடினமானது. சாத்தியம் அற்றது என்று கூட சொல்லலாம். சாதாரண மனிதர்களாலோ, தலைவர்களாலோ செய்யவே முடியாத காரியம். ஆனால் இதை ஸ்டாலினால் சாதிக்க முடுயும் என உணர்ந்த மக்கள் அவரை செம்படையின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் ரஷ்யா தன் எதிரியை வீழ்த்த தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. தேசத்தின் மேற்குப் பகுதி எதிரியால் அச்சுறுத்தப்பட்டதால், அங்கிருந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்க்க உத்திரவிட்டார் ஸ்டாலின். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிரம்மாண்டமான எந்திரங்களின் பிரிக்கப்பட்டப் பாகங்களைச் சுமந்து சென்றனர் தொழிலாளர்கள். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள், காடுகள், மலைகள், பனிப்பாலைவனங்கள் என எல்லா இடர்பாடுகளையும் கடந்து லட்சக்கணக்கான தொழிலாளார்கள் தங்களின் எந்திரங்களோடு நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
எந்திரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. பெரும் ஆலைகள் எழுந்தன. அவை ஆயுதத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன. எந்திரத் துப்பாக்கிகள், டாங்குகள், போர்விமானங்கள் முதலிய நவீனரக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
சோசலிசத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களை செம்படையில் சேருமாறு அறைகூவல் விடுத்தார் ஸ்டாலின். அதை ஏற்று 50 லட்சம் கம்யூனிஸ்டுகள் செம்படையில் சேர்ந்தனர். அபாயகரமான போர்முனைகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். தங்கள் வீரத்தாலும் தியாகத்தாலும் மற்ற வீரர்களுக்கு உணர்வூட்டினர்.
எப்போது வேண்டுமானாலும் மாஸ்கோவை எதிரிகள் கைப்பற்றக்கூடம். அதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாஸ்கோவை விட்டு வெகு தொலைவிற்கு மாற்றப்பட்டன. அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கு குடிபெயர்ந்தனர். ஸ்டாலினையும் மாஸ்கோவையும் விட்டு வெளியேற அனைவரும் நிர்பந்தித்தனர். ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை. இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார்.
இதுவே மக்கள் மனவலிமை இழக்காமல் இருந்ததற்கு காரணம், சோதனைகளை வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உண்டு என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர். சோவியத் ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருந்தார். தான் மட்டும் பாதுகாப்பாக மாஸ்கோவைவிட்டு வெளியேறினால், அது மக்களின் மன உறுதியைக் குலைக்கும் என்று உணர்ந்தார். ஆகவே பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலின் செம்படையுடன் உழைக்கும் மக்களுடன் மாஸ்கோவில் தங்கினார்.
இரவு பகலாக பல மாதங்கள் தொடர்ச்சியாக மாஸ்கோ தாக்கப்பட்டது. எப்போதும் அதன் மீது குண்டு மழை பெய்தது. செம்படை கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு நிர்வாகம் முதலியவற்றை இயக்கும் பொறுப்பை இதன் நடுவே தான் அவர் நடத்த வேண்டியிருந்தது. அவரது இந்த வீரச் செயல் நாட்டு மக்களுக்கு உத்வேகமூட்டியது.
இதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார். அதில் பெரிய சொல் அலங்காரம் இல்லை எளிமையாக பேசினார். சக தோழனிடம் பேசுவதைப் போல பேசினார். தங்கள் நட்டை மட்டுமல்ல, உலகத்தையே காப்பாற்றும் வரலாற்றுக் கடமை சோவியத் மக்களுக்கு இருக்கிறது என்றார். உலகையே அழிக்க வந்த பாசிஸ்டுகளை கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஒழிக்க முடியும் என்ற உணர்வை ஊட்டினார். "இனி ஒரு அடி பின் வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரைப் போராடுவோம்" என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்றுக் கட்டளையிட்டார். உரையைக் கேட்ட அனைவரையும் அந்தக் கட்டளை தீப்பொறி போல் பற்றிக் கொண்டது. மக்கள் மனதில் அந்த தீப்பொறி எரிமலையானது. அது போர்களத்திலும் வெளிப்பட்டது.
செம்படை உறுதியுடன் எதிர்த்தாக்குதல் தொடுத்தது. உயிரைத் துச்சமென மதித்து செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாவெலின் படைப்பிரிவு முற்றுகை இடப்பட்டது. 500 பேர் இருந்த படைப்பிரிவில் 60 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சியிருந்தனர். ஐந்து நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் பாவெல் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனது தலையிலும் தொடையிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் துப்பாக்கியால் எதிரிகளின் டாங்கிகளை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான். அவனது சிந்தனையில் ஒரு முழக்கம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. "ஒரு அடி பின்வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம்".
ஜெர்மானிய போர் விமானங்கள் தாக்கத் தொடங்கின். எங்கும் கருப்புகையும் தூசியும் சூழ்ந்தது. செம்படை இருந்த அகழிகளில் பிணக்குவியல். விமானத்தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மானிய டாங்கிகள் சுட்டபடி செம்படையின் அகழிகளை நோக்கி முன்னேறின. படைப்பிரிவின் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்பாளர் கையில் ஒரு எறிகுண்டை எடுத்தார். உரக்க முழக்கமிட்டார். "கம்யூனிஸ்டு கட்சி வாழ்க! தோழர் ஸ்டாலின் வாழ்க! என்னைப் பின் தொடருங்கள் தோழர்களே."
அகழியின் மீது ஏறினார். ஜெர்மன் டாங்குகளை நோக்கி வேகமாக ஓடினார். பாவெலும் இதர வீரர்களும் எறிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து ஓடினார். முன்னால் ஓடிய கட்சி அமைப்பாளரை ஒரு பீரங்கி குண்டு சிதறடித்தது. பாவெல் ஒரு டாங்கியின் மீது தன் எறிகுண்டை வீசினார். டாங்கி வெடித்து சிதறியது. பாவெலின் தோழர்களும் இதே காரியத்தைச் செய்தனர்.
ஜெர்மானியர்களின் டாங்கிகள் தகர்க்கப்பட்டன. ஏராளாமான இழப்புகள் இருந்தாலும் அன்றைய சண்டையில் செம்படையின் கை ஓங்கியிருந்தது. ஜெர்மானியர்கள் மாஸ்கோவை விட்டு 100 கீலோ மீட்டருக்கு அப்பால் பின்வாங்கினர். முதல் முறையாக பாசிஸ்டுகளுக்கு பலத்த அடி விழுந்தது.
உலகப் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலக மக்களுக்கு இட்லரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை சுடர்விட்டது. பிரிட்டன் - அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்கள் கொடுத்த நெருக்குதலின் காரணமாக அந்த நாடுகள் சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு ஒப்பந்தம் செந்து கொண்டன. ஜெர்மனியில் தலைமறைவாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாசிச எதிர்ப்புப் போராளிகள் மாஸ்கோ சண்டையின் வெற்றியைக் கொண்டாடினர். ரூடி தன் தோழர்களிடம் சொன்னார்
"சோவியத் ரஷ்யா வெற்றி பெறும் - உலக
உழைக்கும் மக்களுக்கு விடிவு வரும்!
தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!"
செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!
போர் இழுத்துக் கொண்டே சென்றது. இட்லர் சோவியத்தின் மீது படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செம்படை வீரர்கள் ஒரு கோடிக்கும் மேல் உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டைக் காத்தனர். செம்படையின் வீரம் இட்லருக்கு ஆத்திரமூட்டியது. தான் கைபற்றிய மேற்கு ரஷ்யப் பகுதி மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பாசிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். ஒவ்வொருவராக கொலை செய்யக் கூட இட்லருக்கு பொறுமையில்லை.
எனவே விஷ வாயுக் கொட்டடிகள் என்ற ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தான். கொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு பெரிய கொட்டடியில் அடைக்கப்படுவர். காற்றோடு விஷ வாயு கலந்து செலுத்தப்படும். ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் மடிந்து போவார்கள். இதே போல பல கோடி மக்களை இட்லர் கொலை செய்தான்.
சோவியத்தைத் தோற்கடிக்க தன் போர்த்தந்திரத்தை மாற்றினான். இட்லர் தெற்கே அமைந்திருந்த ஸ்டாலின்கிராடு என்ற நகரத்தைத் தாக்கினான். அதைக் கைப்பற்றுவதன் மூலம் மேற்காசிய நாடுகளைப் பிடிக்க முடியும். அவற்றின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி புதிய பலத்துடன் சோவியத் ரஷ்யாவைத் தாக்கி அழிக்க முடியும் என திட்டமிட்டான். (இந்தியாவை கைபற்றுவது கூட அவனுடைய திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.)
1942 செப்டம்பரில் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. தன்னுடைய மிகச்சிறந்த படைகளை இந்த போருக்கு அனுப்பி வைத்தான் இட்லர். தான் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் படைகளையும் திரட்டி ஸ்டாலின்கிராடின் மீது ஏவினான்.
நாலாபுறங்களில் இருந்தும் ஸ்டாலின்கிராடு சூழப்பட்டது. கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத கோரத்துடன் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. ஜெர்மானிய விமானப்படை நகரைத் தரைமட்டமாக்கியது. மண்மேடுகளுக்குப் பின்னால் இருந்து செம்படை தாக்கியது. ஸ்டாலின்கிராடின் உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களும் செம்படையுடன் சேர்ந்து போரிட்டனர். தங்களின் தலைவரின் பெயரில் அமைந்த நகரைக் காக்க ஒப்பில்லாத தீரத்துடன் அவர்கள் சண்டை செய்தனர்.
இந்த உக்கிரமான சண்டை 200 நாட்கள் நீடித்தது. பல லட்சம் செம்படை வீரர்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
பாசிஸ்டுகளுக்குப் பாடம் புகட்டப் புதிய திட்டமொன்றை ஸ்டாலின் வகுத்தார். முற்றுகையிடப்பட்ட செம்படையைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தி ஜெர்மானிய படையை சுற்றி வளைத்து கொள்வது என்பது தான் அந்த திட்டம். இதை செய்து முடிக்க வீரர்கள் அசாத்தியமான உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் போரிட வேண்டியிருக்கும். எதிர்த் தாக்குதல் குறித்த அறிக்கை ஒவ்வொரு செம்படை வீரனுடைய உள்ளத்திலும் ஊடுருவியது.
செம்படையின் எதிர்தாக்குதல் தொடங்கியது. எதிரியின் படைகளை ஊடுருவிச் சென்றது செம்படை. எதிரியை சுற்றி வளைத்தது. சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்ட நரியைப் போல ஜெர்மானியப் படை அல்லல்பட்டது. ஸ்டாலின்கிராடின் மீது படையெடுத்து வந்த 35 லட்சம் பேர் கொண்ட படை தோற்று ஓடியது. ஜனவரி 31, 1943-இல் ஜெர்மானிய தளபதியான பௌலுஸ் என்பவன் 4 லட்சம் பாசிஸ்டுகளுடன் சரணடைந்தான்.
மற்ற நாடாக இருந்தால் சரணடைந்த பாசிஸ்டுகளை ஒரே நொடியில் கொன்றிருக்கும். அவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் அப்படிப்பட்டவை. ஆனால், சோவியத் ரஷ்யா அப்படி செய்யவில்லை. அவர்களை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது. அங்கு அவர்களுக்கு மனிதர்களாக வாழ்வது எப்படி என்று கற்றுத் தரப்பட்டது. காரணம், இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய உயர்ந்த பண்பு.
ஸ்டாலின்கிராடு சண்டை வரை, பாசிஸ்டுகள் மற்றவர்களை அடிக்கத்தான் பழகியிருந்தனர். ஸ்டாலின்கிராடில் முதன்முறையாக அவர்கள் அடிவாங்கினர். இட்லரின் அழிவு காலம் ஸ்டாலின்கிராடு சண்டையில் இருந்து தொடங்கியது. இந்த வெற்றிக் கிட்டிய பிறகும் செம்படைகளுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை. இது ஆரம்பக்கட்ட வெற்றிதான். இன்னும் ஒரு கோடி ஜெர்மானியப் படைகளை சோவியத் ரஷ்யாவை விட்டு விரட்ட வேண்டியப் பணியும் இருந்தது.
ஸ்டாலின்கிராடு சண்டையில் ஏராளமான முன்னணி தளபதிகளை இட்லர் இழந்தான். அவர்களில் பலர் செம்படையல் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது இழப்பு இட்லருக்குப் பேரிடியாக இருந்தது. அதில் ஓரிருவரையாவது மீட்டுவிட முயன்றான். சண்டையிட்டு அவர்களி மீட்க முடியாது. ஆகவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தான் இட்லர்.
ஸ்டாலினுடைய மூத்த மகன் யாக்கவ். சாதாரண சிப்பாயாக செம்படையில் பணியாற்றி வருபவன். ஸ்டாலினும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாக்கவுக்கு எந்த சலுகையும் வழங்கியதில்லை. சாதாரண சோவியத் குடிமகனாகவே யாக்கவ் வாழ்ந்தான்.
எல்லைப்புறத்தைக் காவல் காத்த யாக்கவ் போரின் முதல் நாளில் இருந்தே சண்டையில் ஈடுபட்டான். அவனுடைய படைப்பிரிவு சுற்றி வளைக்கப்பட்டது. இறந்தவர்கள் போக மற்றவர்கள் சிறைபிடிக்கபட்டனர். யாக்கவும் அவர்களில் ஒருவன்.
யாக்கவ் ஸ்டாலினுடைய மகன் என்பதைத் தெரிந்து கொண்ட இட்லரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சோவியத் ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஜெர்மானிய தளபதியை விடுதலை செய்தால், தான் யாக்கவை விடுவிப்பதாக பேரம் பேசினான். இதை ஏற்காவிட்டால் யாக்கவைக் கொன்று விடுவதாக மிரட்டினான்.
தன் மகன் மீது பாசம் கொண்ட ஸ்டாலின் அவனுடைய நிலையை எண்ணி வருந்தினார். ஆனால் தன் மகனுடைய மகனுடைய உயிரை காப்பாற்ற வேண்டி இட்லரின் தளபதியை விடுவிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார். அந்த ஜெர்மானிய தளபதி விடுவிக்கப்பட்டால், அவன் வகுக்கும் திட்டங்களின் மூலம் பல லட்சம் செம்படை வீரர்கள் கொல்லப்படுவர். ஆகவே அவனை விடுதலைச் செய்வதற்கு பதிலாகத் தன் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு தியாகியாவதே மேல் என்ற முடிவு செய்தார்.
எந்த நேரத்திலும் மக்களை நேசித்தவர் தோழர் ஸ்டாலின். அவர்களுக்கா தன் உழைப்பையும் வாழ்வையும் மட்டுமல்ல தன் அருமை மகனையே தியாகம் செய்தவர் தோழர் ஸ்டாலின். அதனால்தான் அவர் சோவியத் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.
ஸ்டாலின்கிராடில் இருந்து செம்படையின் வெற்றிப்பயணம் தொடங்கியது. எதிரியின் படை, படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. இட்லரின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பாசிசப் படை விரட்டியடிக்கப்பட்டது.
சோவியத் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உலகம் இதுவரை கண்டிராத வக்கிரமாக போருக்குப் பின்னால் கிடைத்த வெற்றி இது. உலகத்தின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திய இட்லரின் படை ஸ்டாலினுடைய செம்படை முன்னால் மண்டியிட்டது.
இருப்பினும் செம்படைக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. இட்லரின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த ஐரோப்பாவையும் செம்படை நிச்சயம் மீட்கும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தையே விடுவிக்கும் வரலாற்றுக் கடமையை செம்படைக்கு சுமத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.
1945 ஜனவரியில் இருந்து அதை நிறைவேற்றும் பணியில் செம்படை இறங்கியது. இதுவரை தன் நாட்டு மக்களுக்கானப் போராடிய செம்படை பிறநாட்டு மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியது. இந்தப் போரில் அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களும் செம்படையுடன் இணைந்துப் போரிட்டனர்.
பாசிஸ்டுகள் தோற்று ஓடினர். ஒவ்வொரு நாடாக விடுவிக்கப்பட்டது. பல்கேரியா, போலந்து, ஹங்கேரி, கிரேக்கம், அல்பேனியா, ருமேனியா, செர்பியா, யூகோஸ்லாவியா, செக்கஸ்லோவாகியா, ஆஸ்திரியா என்று பட்டியல் நீண்டபடி இருந்தது. பாசிஸ்டுகளின் கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் செம்படையின் வீரத்தையும் ஸ்டாலின் தலைமையையும் நெஞ்சாரப் பாராட்டினார்கள்.
ஐரோப்பாவை விடுவித்த செம்படை ஜெர்மனியின் எல்லையை நெருங்கியது. சோவியத் ரஷ்யா வெற்றி பெறுவது உறுதியானவுடன் அதுவரை பயந்துக் கிடந்த பிரிட்டனும், அமெரிக்காவும் போரில் குதித்தன. அவர்களின் படைகள் பிரான்சில் இறங்கின.
இட்லருக்குத் தன்னுடைய தோல்வி துல்லியமாகத் தெரிந்தது. இருந்தாலும் சோசலிச சோவியத் ரஷ்யாவிடம் தோற்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அமெரிக்க பிரிட்டன் படைகளிடம் தன் நாட்டை ஒப்படைக்கத் திட்டமிட்டான். ஆகவே தன்னுடைய படைகள் அனைத்தையும் செம்படைக்கு எதிராக குவித்தான். பிரிட்டன் - அமெரிக்க படைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் (பயத்துடன்) ஜெர்மனியை நோக்கி முன்னேறின.
இதைப் புரிந்து கொண்ட தோழர் ஸ்டாலின் "இந்த மே தினத்திற்குள் பெர்லினை செம்படை பிடிக்கும், ஜெர்மன் பாராளுமன்றத்தின் மேல் செங்கொடிப் பறக்கும்" என பகிரங்கமாக சவால் விடுத்தார்.
இந்த சூளுரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்ட செம்படை வீரர்கள் உணவு, உறக்கம் மறந்துப் போரிட்டனர். வர்க்க உணர்வு கொண்ட ஜெர்மனியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். பாசிஸ்டுகளின் உறுதிக் குலைந்தது. செம்படை முன்னேறியது.
இட்லரின் கொடுங்கோன்மயில் இருந்து தங்களை மீட்ட செம்படையை வாழ்த்தி வரவேற்றனர் ஜெர்மானிய மக்கள். சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன. சிறை முகாம்களில் வாடிய மக்களுக்கு விடுதலை கிடைத்தது. 14 ஆண்டுகளில் சிறை முகாம்களில் கசக்கிப் பிழியப்பட்ட ஆல்பிரடு சுதந்திர காற்றை சுவாசித்தார். தங்களை விடுவித்த செம்படைக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். உழைக்கும் மக்கள் ஸ்டாலினுடைய படம் மற்றும் செங்கொடியை ஏந்தி முழக்கமிட்டபடிச் சென்றனர். ஆல்பிரடும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். பலம் அனைத்தையும் திரட்டி உரக்க முழக்கமிட்டான்.
"தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!
செம்படை நீடூழி வாழ்க!"
30 ஏப்ரல் 1945 செம்படை பெர்லினின் வாசலில் சண்டையிட்டது. கடுமையான சண்டை. விடிந்தால் மே தினம். மே தினம் முடியும் வரை மிச்சமிருக்கும் பலமனைத்தையும் திரட்டிப் போரிட இட்லர் உத்திரவிடுகின்றான்.
. ஸ்டாலினுடைய சூளுரையும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் செங்கொடியும்
அன்றைய இரவு பெர்லினின் மூலை முடுக்குகளில் எல்லாம் சண்டை நடந்தது. நள்ளிரவில் பெர்லினுடைய மையப் பகுதியை அடைந்தது செம்படையின் முன்னணிப் படை. தோல்வி தன் வீட்டு வாசலைத் தட்டியவுடன் குப்புற விழுந்தான் இட்லர். ஒரு கோழையைப் போல தற்கொலை செய்து கொண்டான். கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற பாசிஸ்டு ஒழிந்தான்.
அவன் தற்கொலை கொள்ளும் முன் தன் பாசிஸ்டு படைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தான். "எக்காரணம் கொண்டும் செம்படையிடம் மட்டும் மண்டியிடாதீர்கள்". இதுவே இந்த உத்தரவு. இட்லர் இறந்த பின்னும் பாசிஸ்டுகளின் படை சண்டையிட்டது.
முன்னணிப் படையில் குறைவான எண்ணிக்கையிலே வீரர்கள் இருந்ததால் செம்படையின் பணி கடினமாகியது. இருந்தாலும் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து விடிவதற்குள் பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டது. கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பொழுது ஏறிக் கொண்டே இருந்தது. பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது செங்கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற தோழர் ஸ்டாலினுடைய கட்டளையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதை நிறைவேற்ற யெகராவ், கண்டாரியா என்ற இரு செம்படை வீரர்களும் முன் வந்தனர். கையில் செங்கொடியுடன் குண்டு மழைக்கு நடுவே பாய்ந்தோடி பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இதற்குள் கட்டிடத்தில் இருந்த பாசிஸ்டுகள் அதற்கு தீ வைத்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய புகையானது கண்களை மறைத்தது. தகிக்கும் வெப்பமும் கடுமையாக இருந்தது. இதற்கிடையில் உச்சிக் கோபுரத்திற்கு செல்லும் படிக்கட்டைக் கண்டுப்பிடித்து மேலே ஏறினர் யெகராவும், கண்டாரியாவும்.
சிறிது நேரத்தில் அவர்கள் அந்த மிக உயர்ந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றார்கள். வழுக்கும் உச்சி கோபுரத்தின் மீது உறுதியாக ஏறத் தொடங்கினார்கள். பக்கத்துக் கட்டிடத்தின் மதில் சுவருக்கு பின்னால் இருந்து இயந்திரத் துப்பாக்கியால் அவர்களை சுடத் துவங்கினான் ஒரு ஜெர்மானியன்.
இதைப் பார்த்து கொண்டிருந்த பாவெல், அவர்களுக்கும், செங்கொடிக்கும் ஸ்டாலினுடய சூளுரைக்கும் நேரவிருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டான். தன் துப்பாக்கியால் சுட்டபடி எதிரியின் எந்திரத் துப்பாக்கியை நோக்கி ஒடத் தொடங்கினான். எந்திரத் துப்பாக்கி தன் திசையை மாற்றியது. பாவெலைக் குறி வைத்து சுட்டது. குண்டுகள் பாவெலுக்குள் ஊடுவருவி வெடித்துச் சிதறின.
பாவெலோ தான் வைத்திருந்த எறிகுண்டை வீசியெறிந்தான். எந்திரத் துப்பாக்கி நொறுங்கியது. கீழே விழுந்த பாவெல் அண்ணாந்து பார்த்தான். ஜெர்மானிய பாராளுமன்றத்தின் மேல் செங்கொடி பறந்துக் கொண்டிருந்தது. பாவெலின் தோழர்கள் ஸ்டாலினுடைய சூளுரையை நிறைவேற்றி விட்டனர். இரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பாவெலின் முகம் புன்னகைத்தது. செங்கொடியைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.
பாசிச எதிர்ப்புப் போரில், எதிரியை வீழ்த்த உயிர்நீத்த கோடிக்கணக்கான தியாகிகளில் ஒருவனாக பாவெல் மாறினான். அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கொடி ஏறியவுடன் பாசிசக் படைகள் சரணடைந்தன. 14 ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைத்த பாசிசக் கூட்டம் உழைக்கும் மக்கள் படையிடம் மண்டியிட்டது.
உலகின் உழைக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர். சோவியத் ரஷ்யாவிற்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உழைக்கும் மக்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். எங்கு பார்த்தாலும் செங்கொடிகள், ஸ்டாலின் படங்கள். பாசிசத்தை கம்யூனிசம் வென்றது. எதிர்காலம் கம்யூனிசத்திற்கே என்பது நிரூபணமானது.
இரண்டாம் உலகப் போரை முறியடித்தப் பெருமை தோழர் ஸ்டாலின் தலைமயிலான செம்படைக்கே!
உலகையே அச்சுறுத்தியப் பாசிசத்தை ஒழித்து இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தனர் சோவியத் மக்கள். இதற்கு அவர்கள் புரிந்த தியாகம் ஈடு இணையற்றது. பாசிஸ்டுகளை வீழ்த்த் 3 கோடி ரஷ்யர்கள் உயிர் துறந்தனர். 1710 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் முற்றாக எரிக்கப்பட்டன. 32,000 பெரிய ஆலைகளும் 98,000 கூட்டுப் பண்ணைகளும் அழிக்கப்பட்டன.
இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் அவர்கள் மனம் தளராமல் போராடினார்கள். இட்லரின் பெயரைக் கேட்டதும் அஞ்சி நடுங்கின மற்ற நாடுகள். அமெரிக்காவும், பிரிட்டனும் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டன. இப்படி எல்லோரையும் பயமுறுத்திய இட்லரை சோவியத் ரஷ்யா வீழ்த்தியதன் ரகசியம் என்ன? சோதனைகளைத் தாங்கி கொண்டு எதிரிக்கு பதிலடிக் கொடுக்கும் மன உறுதியை சோவியத் மக்கள் பெற்றதன் மர்மம் என்ன?
இதற்கெல்லாம் ஒரே பதில் பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலினும், சோவியத் செம்படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான். சோவியத் மக்களின் பலத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஸ்டாலின்,
இவ்வளவு பெரிய தியாகத்தில் உருவான ரஷ்யா பல நாடாக பிரிந்து போனதில் எனக்கு வருத்தமுண்டு !
பதிலளிநீக்குஸ்டாலின் போற்றதலுக்கும்
பதிலளிநீக்குவணங்குதலுக்கும் உரியவர்