பக்கங்கள்

Tuesday, May 22, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-27

அதிகாலையிலே  அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார்.  தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந்த  அடையான கையிலியால் துடைத்துக் கொண்டு நடப்பு நிதானத்துக்கு வந்து. வந்த நண்பரை பார்த்து வணக்கம்,சார் என்று சொல்லி விட்டு , தங்கள் வேலை முடிந்து விட்டது என்று சொல்லியபடி எழுந்து கட்டி வைத்திருந்த ஒரு பெட்டகத்தை எடுத்து அதன் மேல் சொருகி வைத்திருந்த விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு ஆகியவற்றை வந்தவரிடம் நீட்டினார்.

வந்தவர் அதை வாங்கி பார்த்தவாறே..பல தடவை போ ன் அடித்தேன் சொன்னவரிடம் யாரும் எடுக்கவே இல்லையே என்று சொன்னவரிடம் கை சாடையால் காது போச்சு என்றுவிட்டு. தூங்குவதற்க்கு எப்படியும் பனிரெண்டு மணி ஆகிவிடுகிறது.. நீங்கள் வந்து எழுப்பி விடுகிற நேரமம்தான் நல்லா தூங்குகிற நேரம்..அதோடு போன் சத்தமும் எனக்கு கேட்பபதில்லை போனை மாத்தனும் என்றார்

அப்போ..என்னை அதிகாலை இம்சைன்னு பதிவிட்டுவிடுங்களோ...? என்றபோது அடுத்து அந்த பதிவு அதுதான்  என்றார். வந்தவர் கூலித் தொகையை கொடுத்துவிட்டு...ஆமா...தூத்துக்குடிக்கு போகலையா? என்றார்.

எப்படி போவது.்சார... நீங்க அதிகாலையில வந்துடுவிங்கன்னுதான் போகல சார். நீங்களே  போயிருந்தா.....நானும் வந்திருப்பேன்ல சார்,.... 

நல்லா சாக்கு சொல்றீங்களே....என்ன காரணமா.காட்டுறீங்க..... 

நல்லா யோசிங்க... புரூப்பு  கொடுத்து ஒரு வாரமா தலைக்கு வச்சு படுத்துவிட்டு பிறகு ஒரே நாள்ல வேணும்முனு கேட்டது யாரு சார்,

என் நிலைமை அப்படி....

உங்க நிலமை.அப்படி...என் நிலம  இப்படி.... தூத்துகுடி மக்களோட நிலம  எப்படி.. ஒவ்வொருத்தருடைய நிலைமையையும் ஒரே நிலைமையாக மாறனும்முன்னா........

சரிங்க...நேரம் ஆகிவிட்டது..... பிறகு பேசிக் கொள்ளலாம் வருகிறேன். என்றவர் விடை பெற்றார.

பிறகு அவர் மீண்டும் தூங்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே இருந்த போது மணி  ஏழரையைத் தாண்டி சென்று கொண்டியிருந்தது.

2 comments :

  1. காலையில் வந்த இம்சையா ?

    ReplyDelete

  2. தூத்துக்குடி சாவுகள்
    தமிழக மக்கள் விழித்தெழவே!

    ReplyDelete

.........