எப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த பிரசுரத்தை கொடுத்தார்கள்
எவன் செத்தாலும் சரி... என்ன நடந்தாலும் சரி ,வைகாசி பொறந்தாலே..ஊறு ஊறுக்கு தெரு தெருவுக்கு உள்ள கோயில வச்சவுன்கள் எல்லாம் சாமி கும்பிட பொறோம் வரி, கொடுங்க, நண்கொடை கொடுங்க என்று வந்துவிடுவார்கள். எ
தெருப்பாதையையே மறித்து கல்யாண மகால் மாதிரி மேற்கூரை அமைத்து அடுத்தவன் பிடிக்காதவன் எவனும் தெருவுக்கு அங்கிட்டுயிருந்து இங்கிட்டோ...இங்கிட்டுயிருந்து தெருவுக்கு அங்கிட்டோ போகமுடியாதவாறு வரிசையாக உட்கார்ந்து இம்சை செய்யும் என் தெரு வாசிகள் கும்மிடும் கோயிலுக்கு வரியும் கொடுப்பதில்லை , நண்கொடையும் கொடுப்பதும் இல்லை. ஏன்? என்று என் பதிவை படித்து வரும் அன்பர்களுக்கு வெள்ளிமடையாக தெரிந்திருக்கும் என்று நிணைக்கிறேன்.
வந்திருப்பவர்கள்.. அடுத்த ஊர்காரர்கள்.. என்னிடம் காதுகுத்து, கல்யாணம், கருமாதிக்கு எல்லாம் வேலை கொடுத்தவர்கள்... நண்கொடை ரசீது புத்தகத்தை நீட்டி எழுதச் சொன்னார்கள்.ரூ200 என்று எழுதினேன். என் தகுதிக்கு இது கம்மி...ரூ 500யை எழுதச் சொன்னார்ள்...
யோவ்..நான்...உங்க சாமிக்காக எழுதவில்லைய்யா...தங்களின் நட்புக்காக எழுதுகிறேன்.... நீங்க சாமி கும்முட்டா மட்டும் ..நாட்டுல இருக்கிற எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்மாய்யாா... ஸ்ரீ..ஸ்ரீ.ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் போட்டா மட்டும் கவலை எல்லாம் பறந்து போயி..நாட்டு மக்கள விடு ..உங்க தெரு மக்கள் சந்தோசமா இருப்பாங்களா.....
சொன்னதுதான் தாமதம்..வந்திருந்த எனது பால்ய வகுப்பு நண்பன் சட்டென்று என் வாயைப் பொத்தி.... போதும்ம்டா சாமி.... நீ இதுக்குமேல எதுவும் பேச வேணாம்டா...சாமி... கொண்டா இரநூரை என்று வாங்கிக் கொண்டு எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு போனார்கள்... ஸ்கூட்டி வண்டிக்கு பெட்ரோல் போட வச்சிருந்தது... காலையில போகுமுன்னு தெரியல....... போன மாசம் போட்ட பில் பணம் எதுவும் வரவில்லை... ஜிஎஸ்டி பணம் வேறு கட்ட வேண்டும் என்னடா செய்வது என்று யோசணையில் ஆழ்ந்தபோது....
என் அக்கா..வீட்டுக்காரர் அதாவது அத்தான்் வந்து செய்முறை பத்திரிக்கை அய்ந்தாரை என்னிடம் நீட்டினார்... அவரிடம்... அய்யா... அவற்றை எல்லாம் பத்திரமா...தலைக்கு வச்சு படத்துக்க.... உன் மகன் கல்யாணத்தைில மொய் வாங்காம...ரெம்ப சிக்கனமா நடத்தலாம்முன்னு சொன்னப்பபோ..... என் கௌவரம் என்னாவது... என்பெருமை என்னாவது... பொண்டாட்டி, புருசனும் சேர்ந்து இல்லாத எதுக்கும் உதவாத கௌவரத்த தூக்கி வச்சு எந்த குதி குதிச்சிங்க இப்ப பாருங்க..... என் சக்திக்கு மீறி உங்களலா..பத்து லட்சத்துக்கு கடனாளியா இருக்கேன்.. அந்தக் கடன நீங்களா கட்டப்போறீங்க...உங்களுக்கு இரக்கப்பட்டதுக்கு இதுதான் தண்டனையா..??என்று.. படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டேன்.....ஒரு மூச்....சின்ன சத்தம் எதுவுமே கேட்கவில்லை..(அதான் காது கெட்டு போச்சே .பிறகு எப்படி கேட்கும்..நானா நிணைத்துக் கொண்டது)
அன்று முழுவதும் ஏனோ தெரியவில்லை ...நான் பொழம்பியபடியே இருந்தேன்...... புன்பட்ட மனத..புகைய விட்டு ஆத்தாலாம்முன்னு நெணச்சா..அந்த பழக்கமும் இல்லாம போச்சே.....ஒரே புலம்பல்தான்.....
புகைப்பழக்கம் இல்லாததும் பிரச்சனையோ...
பதிலளிநீக்குபுகை பழக்கம் இருந்தால் புலம்புவது வரதாம்ன்னு ஒரு புகை போக்கி நண்பர் சொன்னது நண்பரே..
நீக்கு