பக்கங்கள்

Sunday, May 27, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-29
Image result for பஸ் நிறுத்த நிழற்கூடை
என்  தொழில் வேலையாக  நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக  பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. 

பெட்ரோல் விலை உயர்வை கணக்கில் கொண்டு பொதுப் பேருந்தை பயன் படுத்தி வந்த நான்.. பொதுப் பேருந்தின் கட்டண உயர்வால் பேருந்தில் செல்வதை தவிர்த்துவிட்டு , இளைய மருமகன் ஓட்டிக் கொண்டிருந்த ஸ்கூட்டி வண்டியை  நான்வாங்கிக் கொண்டு, அவருக்கு ஜீபிடர்வண்டியை வங்கி கடனில் வாங்கிக் கொடுத்துவிட்டு..முன் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு,அதாவது பொதுப் பேருந்தை பயன்படுத்துவதை.... எங்கு சென்றாலும் ஸ்கூட்டி வண்டியை பயன்படுத்தி சென்று வந்து கொண்டிருந்தேன்.

அப்படியான ஒரு தருணத்தில்தான். கீழமாசி வீதிக்கு சென்று அப்படியே தெற்கு வாசல் வழியாக வந்து டிவிஸ் பெட்ரோல் பங்கில் ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கிளம்பி பெரியார் பேருந்து நிலையத்தை கடந்து பாலத்தில் வந்து கொண்டியிருக்கும்போது பெரும் மழை பெய்தது. பாலத்திலிருந்து அரசரடி செல்லும் திசையில் திரும்பி மாப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்தும் ஒதுங்குவதற்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை...மழையில் தொப்பமாக நணைந்துவிட்டேன்.

பெரு மழையில் நணைந்துவிட்டோம் இப்படியே வீடு சென்று விடுவோம் என்று நிணைத்தால் காற்றில் வண்டியை ஓட்ட முடியவில்லை. காற்றும் மழையும் சேர்ந்து ஒதுங்குடா என்றது.. மெதுவாக வந்தபோதுதான் தொகுதி எம்ஏல்ஏ ஆபிஸ் முன் பஸ் கூடாரம் ஒன்று இருந்ததை கவனித்து வண்டியை அதன் ஓரம் நிறுத்திவிட்டு.. பேருந்து நிறுத்த கூடாரத்தில் தஞ்சம் புகுந்து நணைந்து போன செல்போனை கைக்கட்டையால் துடைத்துக் கொண்டிருந்தேன்.

நான் மட்டுமே நின்றிருந்த பஸ் நிறுத்தகூடாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட நாலு ஆண்கள் படிப்படியாக வந்து சேர்ந்தார்கள். காற்றும் மழையும் விடாமல் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் நின்றிருந்த ஒருவன் என் பேண்ட் பையையும் சட்டை பையையும் சொதனை செய்தான். அவனை தடுத்து என்னடா..செய்யிற என் அனுமதி பெறாமல் ....சவுண்டு கொடுத்தபடி அவன் கைகளை தடுத்துவிட்டேன்...பின் சொன்னான்.. என் பர்ஸ்சை காணவில்லை அதான் சோதனை செய்கிறேன் என்றான்...

நின்றிருந்த மூவரைத்தவிர.. ஒரு பெண். மற்றும் நான் உள்பட இரண்டு ஆண்களை சோதனை செய்தான். அவர்களில் நான் ஒருவன் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். நீ... எந்த எரியாடா..என்றேன் சொல்ல மறுத்துவிட்டான்... உனது பெயெரென்ன..என்ன செய்கிறாய் என்று விபரம் கேட்டேன்

அவன் சொல்ல மறுத்துவிட்டு அவன் பேச்சாக  மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்..அந்த பர்சில் ஒன்னுமே...இல்லை என்று திரும்பத் திரும்ப ஒப்பித்துக் கொண்டிருந்தான்.. அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெண்.. இரண்டு ஆண்களை அவன் சோதனை செய்யாமல் விட்டதை.. ஏண்டா வெண்ண ..என் மூஞ்சிய பாத்தா திருட்டு மூஞ்சியா..இருக்கு.... மத்தவிங்க மூஞ்சி நல்ல மூங்சியாடா. சோதனை செய்தால் எல்லாரையும் அல்லாட நீ சோதனை செய்து இருக்கனும் என்ற போது என்னை முறைத்தான்...அவன் முறைப்பை கண்டு கொள்ளாமல் ஏன்டா.. பர்சுல ஒன்னுமே இல்லேன்ற அப்புறம் ஏன்டா , என் அனுமதி இல்லாம சோதனை செய்யிற காலையில் தெருக்கார பூசாரி, அவன் மருமகள். பேரன்களிடம் போடாத சன்டையை இவனுடன் போடுவதற்கு .. அடக்க முடியாமல் கோபம் வந்தது.

அவன்  தனியா வருவதற்க்காக..அவனை திட்டிக் கொண்டே, மழைக்கு ஒதுங்கினது குத்தமாடா.... ..அட ..நாதாரி பயலே... கூட்டத்தை விட்டு தனியாக வந்து நின்றேன்..  காற்று ஓய்ந்தது. மழை ஓயவில்லை....


அவன் எப்படா வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே...இருந்தேன்.. .எப்படித்தான்.. எஸ்கேப் ஆனானோ என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கோபச்சிதறலா என்று தெரியவில்லை...

..மழை குறையவில்லை என்றாலும். ஒவ்வொருத்தராக  நகர்ந்தார்கள்.... மீண்டும் நான் மட்டும் தனியாக நின்றிருந்தேன் மின்சாரமும் தடைபட்டது கார்களின் முகப்பு வெளிச்சத்தில் மழையின் வேகம் தெரிந்தது.....நீண்ட நெடுநேரத்திற்கு பிறகு மழை சற்று குறைந்தது. .. கோபமும் எரிச்சலும் அடங்காமல் மீண்டும் நணைந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்..

தெரு முகப்பு கோயிலில் அமர்ந்திருந்தவர்கள் என் முகத்தை கண்டோ..இல்லை  மழையில் நணைந்து விட்டதைக் கண்டோ. நகராதவர்கள் எல்லாம் ..சட்டென்று நகர்ந்து வண்டி செல்ல வழி விட்டனர்..

2 comments :

  1. மழை விட்டாலும் தூறல் விடாது போலயே...

    ReplyDelete
  2. நன்று பாராட்டுகள்

    ReplyDelete

.........