புதன் 30 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-30



Image result for ஜலதோசம்





மழை பெய்த ஒவ்வொரு
நாளும் நணையாத நாளில்லை
நணைந்த ஒவ்வொரு நாளும்
ஜல தோசம் பிடிக்கவில்லை

சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால்
 கோபமும் ஆத்திரமும் ஏற்பட
 செய்யாத செய் வினையால்
மீண்டும் தொடரும் இம்சைகள்

பல நாளில் தப்பித்த
நான் மொத்தமாய் ஒரு
நாளில் மாட்டிக் கொண்டேன்

புகை பிடிக்கா நெஞ்சில்
அவதி இருமலும் சளியும்
மூச்சு திணறலுடன் மூக்கடைப்பும்“
கூடவே நச்..நச் தும்மல்.
ஓய்வறியா உழைப்பாளனுக்கு தலை
வலியும் உடல் வலியும்

நேரம் தவறாமல் உணவு
உண்டவனுக்கு உணவைக் கண்டால்
வெறுப்பு ..மீறி உள்ள
இறக்கினால் கடுங் கோபத்தில்
வாய் வெளியே தள்ளல்.....


மூன்று நாள் இம்சைகள்.
சற்று குறைந்து உள்ளது.



5 கருத்துகள்:

  1. உடல் நலம் பெற நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உடலையும் மனதையும் கவனித்துக் கொள்ளவும். உங்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை.. தமிழகத்தில் பெரும்பாலான தமிழர்களுக்கு பெரும் மன உலைச்சலும் உடல் நலக் குறைவும் இருக்கு... இங்கு நடந்தேறும் நிகழ்வுகளால்..

    பதிலளிநீக்கு
  3. மிக நல்ல வரிகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் உங்க மாதிரி தான், இந்திய மழையில் நனைந்தால் ஜலதோசம் பிடிப்பதில்லை. எதுவும் நடப்பதில்லை. வெளிநாட்டு மழையில் நனைந்தால் ஜலதோசம்,காய்ச்சல் மாத்திரை சாப்பிட வேண்டி வரும்.
    //புகை பிடிக்கா நெஞ்சில்
    அவதி இருமலும் சளியும்
    மூச்சு திணறலுடன் மூக்கடைப்பும்“
    கூடவே நச்..நச் தும்மல்.
    ஓய்வறியா உழைப்பாளனுக்கு தலை
    வலியும் உடல் வலியும்
    நேரம் தவறாமல் உணவு
    உண்டவனுக்கு உணவைக் கண்டால்
    வெறுப்பு ..மீறி உள்ள
    இறக்கினால் கடுங் கோபத்தில்
    வாய் வெளியே தள்ளல்.....//
    படிக்கும் போது வேதனையாக இருந்தது பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...