ஞாயிறு 13 2018

அதிகாலை கனவு-6


Image result for இருட்டு


கிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கின அவர் கனவை  சொன்னார். அவர் கண்ட கனவை  என்னிடம் சொல்லி அந்தக் கனவுக்கு பரிகாரம் என்ன என்று  என்னிடம் கேட்டார். நான் அவருக்கு என்ன பரிகாரம்  கூறியிருப்பேன் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

நான் கண்ட. அந்தக் கனவுக்கு  என்ன பரிகாரம்  என்பது எனக்கு தெரிந்துவிட்டதால்  உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.

அது மரமா 
என்று எனக்கு 
தெரியவில்லை இரண்டு 
உயர்ந்த கிளைகள்
ஒரு கிளையில்
பறவை ஒன்று
மறு கிளையில்
 நான்..நானேதான்..

பறவை  வந்தமர்ந்ததும் கிளை வளைகிறது..காற்றில் ஆடுகிறது.. நான் இருக்கும் கிளையோ வளையவில்லை... காற்றில் ஆடவில்லை.. அந்த சிறிய கிளையின் உச்சத்திற்கு ஏறுகிறேன்.. ஏன் ? ஏறுகிறேன் என்று எனக்கும் புரியவில்லை.... உச்சிக்கு சென்று கீழே பார்க்கிறேன்...  எல்லாமே இருட்டாக காட்சியளிக்கிறது... வானத்தை பார்க்கிறேன். அதுவும் இருட்டாக தெரிகிறது. அய்யோ..அம்மா என்னாது எல்லாமே இருட்டாக இருக்கிறது என்று நான் ஏறிய கிளையை பார்க்கிறேன்... அய்யோ.. அதைக் காணவில்லை... கீழே விழுகிறேன்.

அடிபட்டு முழித்து பார்த்த போதும் இருட்டாகத்தான் தெரிந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்று நிணைத்து விடாதீர்கள்.. எங்கே  வந்து இருட்டில் விழுந்திருக்கோம் என்று ஒவ்வொன்றாக நிணைத்து பார்த்த போது. கட்டிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறேன் என்று தெரிந்தது....   காலையில் கன்னம் வீங்கியிருந்தது. .வலது கை தோள்பட்டையில் வலி ...எ.... எனக்கே  வலியா?. எவனாயிருந்த எனக்கென்ன என்றது. வலி.  என்ன.. செய்ய. கனவில் கூட இம்சைகள் தொடரும்போல் தெரிகிறது... 

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....