பக்கங்கள்

Friday, June 22, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-37

Image result for கால்டுவெல்
நடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா  ...? அவர் அதை வைத்து  இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா? பிறகு எப்படி அவர் அவர் இன்ன சாதி என்று தமிழகம் முழக்க தெரிந்தது.

இதே போல் எடப்பாடி பழனிச்சாமியின் சாதிச் சான்றிதழை யாரும் பார்த்தீங்களா? அவர் இட ஒதுக்கீடு அடிப்படையில்தான் முதலைமைச்சரா பதவி பெற்று வந்தாரா..? பின்ன எப்படி அவர் இன்ன சாதின்னு அனைவருக்கும் தெரிந்தது. இப்படி.ஒபிஎசு ..சோ..., கோமளவில்லி, பொரி உருண்டை ன்னு சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த அறிவை வைத்து சான்றிதழை ஒழித்தால் ,.....இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழியும், என்று கூவுறாங்கே....... சொல்லுங்க......


கி.பி. 900க்கு பின் ஆரியர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றார்கள். இப்படி படையெடுத்து  வந்தவர்கக்ளைகு ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர் ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர்.. ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி எழுந்தனர்.

எடப்பாடி. ஓபிஎஸ் மாதிரி  யாரெல்லாம் அண்டி பிழைத்தார்களோ! அவர்களுக்கு சகல செல்வாக்கும் வழங்கப்பட்டது, அவர்கள் இன்றைய உயர்வாதியினர் என்று அழைக்கப்பட்டனர்.

யாரெல்லாம் அமைதி காத்தார்களோ...! அவர்கள் எல்லாம் இடைசாதியினர் என்று அழைக்கப்பட்டனர்.

யாரெல்லாம் ஆரியர்களை எதிர்த்தார்களோ..!! அவர்களது நிலங்கள், உடமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டவர்கள் கீழ்சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் ஆரியர்களுக்கு பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினாரகளோ... அவர்கள் எல்லாம் மலைசாதியினர் ஆக்கப்பட்டனர்--இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்.

இன்றைய நிலைமையை நீங்களே!! பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்..

அண்டிப் பிழைத்தவன் எல்லா வளங்களும் பெற்று உயர்சாதியானான். அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர்கள் கீழ்சாதியானர்கள். ( போராடியவர்கள் மட்டுமே)4 comments :

 1. நிதர்சனமான உண்மை நண்பரே...

  ReplyDelete
 2. நம்ம வரலாறு எல்லாமே பிரித்தானியாக்காரனும், ஐரோப்பாக்காரனும் சொன்னதாவே இருக்கு என்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புது. இவர் சொல்லும் ஆரியப் படையெடுப்பு உண்மை என்றால் தென் பகுதியில் வாழ்ந்தவர்களின் வீரத்தைப் பற்றி கூறப்படும் எல்லாம் வெறும் கதைகளோ?

  இருந்த கல்வெட்டுகளை எல்லாம் என்னாயா செஞ்சாங்க? நிறைய கேள்விகள் இருக்கு... பதில்களே இல்லாமல்.. தேடித் தேடி தொலைந்து கொண்டிருக்கிறோம்...

  உளவியல் தாக்குதல்கள் மட்டும் இம்சைப் படுத்திக் கொண்டே தொடர்கின்றன..

  ReplyDelete
 3. அருமையான சிந்தனை
  நம்மவர் சிந்திக்க வேணும்

  ReplyDelete
 4. நன்றி நண்பரே
  கால்டுவெல் அவர்களைப் படிப்பேன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com