பக்கங்கள்

Sunday, June 24, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-38..Image result for 8வழி பசுமைவழிச்சாலை
முட்டினார் மோதினார்
புலம்பினார் கெஞ்சினார்
கும்பிட்டும் பார்த்தார்.
ஒன்றும் நடக்கவில்லை

படை சூழு
வந்தார்கள் அளந்தார்கள்
முட்டுக்கல்லை ஊன்றி
விட்டு சென்றார்கள்.

எங்கோ நடக்கிறது
எவரோ பாதிப்பு
அடைகிறார் என்று
சும்மா பிக்பாஸூம்
காலாவும் பார்க்காமால்
பிரதிபலன் இல்லாமல்
 போராட வந்தவர்களை
சிறைக் கொட்டடியில்
தள்ளிவிட்டு அதிக
பட்ச இழப்பீடு
வழங்கப்படும் என்று
கூவுகிறார்கள் ஆட்சியாளர்கள்

எல்லாம் இழந்த
பிறகு இனி
என்ன செய்வது..

இழப்பதற்கு எதுவுமில்லை..
ஓட்டுப் போடாதே!
புரட்சி செய்!!
இதுதான் வரும்
விடியைலை பிறக்கச்
செய்யும் மந்திரம்..2 comments :

  1. எனது கருத்து மட்டுமல்ல! கொள்கையும் இதுவே.

    ReplyDelete
  2. உண்மை
    விடியலைப் பிறக்கச் செய்வோம்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com