புதன் 15 2019

அதிகாலை கனவு-17.

அந்த நாள் நிணைவுகள் கனவாக.............






நண்பர் ஒருவித மன இருக்கத்தோடு வந்தார். என்னை தன்னோடு வரும்படி கட்டளையிட்டார் .என்ன விசயம் என்று கேட்டதற்கு ரெடியாகு சொல்கிறேன் என்றார். பேண்ட்சர்ட் அணிந்த  அவர்முன் நின்றேன். ஒரு நிமிசம் கதவை அடை என்றார்

புரியாமல் கதவை அடைத்து தாழ்ப்பால் போட்டுவிட்டு திரும்பினேன் நண்பர் தான் கொண்டு வந்த பேக்கிலிருந்து பணத்தை கொட்டினார். நான் திகைத்து என்ன பணம் ஏது பணம் என்று பதட்டத்துடன் கேட்டேன்.

பயப்படாதே கெட்ட பணம் இல்லை.. நல்ல பணம்தான்... இப்பொழுதான் வங்கியிலிருந்து கணக்கை முடித்துக் கொண்டு வாங்கி வந்துள்ளேன். இது என் பணம் அல்ல.... செத்தானே கோவிந்து அவன் பணம்....அவன் இறப்பதற்கு முன் நமமிடம் இந்த பணத்தை தன் இரண்டு மகள்களுக்கு பிரித்து கொடு என்று சொன்னான்ல்லாவா....  மறந்துவிட்டாயா... உன்னிடம் கொடுத்தபோது எணக்கு கணக்கு வழக்கெல்லாம் தெரியாது..என்னிடம் கொடுத்து என் வங்கி கணக்கில் டொபாசிட் போடச் சொன்னது நீதானடா..? மறந்து போச்சாடா...???


நான் மறந்துவிட்டதை மறைத்து இல்லையே...மறக்கவில்லை.... ஏன் கோபப்படுகிறாய்  கொஞ்சம் பொறுமையாய் சொல்... சட்டென்று புரிந்து கொள்வதில் எனக்கு கோளாறு என்பது உனக்குத்தான் தெரியுமே.... என்றபோது..

சரி..சரி....மொத்தப்பணம் பதிணைந்து லட்சம் இருக்கிறது. இரு மகள்களுக்கு ஐந்து ஐந்து லட்சம், அங்கய்யர்கண்ணிக்கு ஐந்து லட்சம் சரியா...? ஒரு கட்டில் ஒரு லட்சம் இருக்கிறது.. மூன்று ஐந்தாக பிரி...

ஏன்? ..அதற்குள் என்ன. அவசரம் அவர்களுக்கு.... என்னிடம் எதுவும் சொல்லவில்லையே..... 

உன்னை நம்புகிற அளவுக்கு அவர்கள் என்னை நம்பவில்லை.... கடந்த ஒருமாதமாக என் தந்தை கொடுத்து வைத்த பணத்தை கொடுங்கள். என்று பலவாறு நச்சரித்துக் கொண்டு இருந்தார்கள்... நானும் கடந்த ஒருவாரமா பேங்க்கும் வீட்டிற்குமா அலைந்து இன்னறைக்கத்தான் கணக்கை முடித்து பணத்தை கொடுத்தார்கள். அதனால்தான் பணத்தை வாங்கிய கையோடு உன்னிடம் வந்து விட்டேன். நீ அய்ந்து லட்சத்தை இரு மகள்களுக்கு தெரியாமல் அங்கயற்கண்ணியிடம் கொடுத்துவிடு....மற்ற இரு அய்ந்து லட்சத்தை இருமகள்களிடம் சேர்த்துவிட்டு வந்துவிடுவோம் என்ன  சரியா..??

சரி......நீ சொல்ற மாதிரியே கொடுத்துடுவோம்.....

என்ன  நான் சொல்ற படியா.....?? நீதானே முன்னாடி எனக்கு சொன்ன...நல்ல மறதிடா...ஒனக்கு...என்னயவாச்சும் நிணவு இருக்கா...இல்ல  மறந்திட்டீயா..???

என்னமோ..தெரியலபா   வர வர  மறதி கொஞ்சம்  அதிகமாகத்தான்...இருக்கிறது

பணத்தை தனித்தனியாக வைத்துக் கொண்டதும்   கிளம்பி சென்றோம்... மாலை நாலு மணிக்கு ஏறின பஸ்ஸில் அவ்வூர் பஸ்நிலையத்தை  அடையும்போது ஒரு மணியாகிவிட்டது. பிறகு ஆட்டோ பிடித்து நண்பர் கோவிந்த ராசன் வீட்டை அடைந்தோம்..

வீட்டை அடைந்தபோது   வசந்தியும் சுகந்தியும் ஆவல் பொங்க  என்ன சித்தப்பா என்றும் நண்பர் மாணிக்கத்தை மாமா என்றும் அழைத்து வரவேற்றனர்.மருமகன்கள் இருவரும் என்னை ஒப்புக்கு வரவேற்றனர்..மாணிக்கத்தை மரியாதையுடன் வரவேற்றனர்.  மாணிக்கம் அவர்களின் உறவுக்காரர். நான் உறவுக்காரன் இல்லை.. அதோடு அவர்கள் சாதிக்காரன் இல்லை.... சுகந்தியும் வசந்தியும் என்னை மூச்சுக்கு முன்னூறு தடவை சித்தப்பா என்று அழைப்பதைக்கண்டு... மருமகன்கள் இருவரும் மகள்களிடம் அவன் என்ன உங்கப்பன் கூட பிறந்தவனா....இல்ல உங்கத்தாவுக்கு மாமன் மகனா...?  என்ன சாதியோ...அவனப்போயி சித்தப்பா.சித்தப்பான்னு கூப்பிடாதிகடி என்று சண்டையிட்டு உள்ளனர். அங்கயற்கண்ணிக்கு விசயம் தெரிந்து நடந்த வரலாற்றை கூறி, நான் அங்கயற்கண்ணிக்கு  கொழுந்தன்தான் என்று சண்டையிட்டு எச்சரிக்கை செய்த பின்தான் ரெண்டு மருமகன்களும் வாயை பொத்தினர்.

மகள்களிடம் அம்மா எங்கே என்று கேட்டபோது..அங்கயற்கண்ணி படுத்திருந்த அறைகை்குள் என்னை அழைத்துச் சென்றனர் மகள்கள் இருவரும்.. என்வாசம் பட்டதோ இல்லையோ.... ஏ..கொழுந்தா... என்னா இங்நேரம் ...பகல்ல வந்திருக்ககூடாதா...???  யம்மா சித்தாப்பாவுக்கு சாப்பாடு கொடுங்கம்மா.....மகள்களை ஏவினார்

கிளம்பிய மகள்களை தடுத்து காலையில பாத்துகிறலாம்...  என்று தடுத்தேன். உடன் மாணிக்கமும் வந்துவிட....வாங்கண்ணா....ரெண்டு பேரும்மா வந்தீக... படுக்கையைவிட்டு எழுந்திருக்க முயன்ற அங்கயங்கண்ணியை தடுத்து கொண்டு வந்த  பணப் பேக்கை அவர் அருகில் வைத்தார்..சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சொந்தக் கதை சோகக்கதை, வந்தக் கதை போன கதை நடந்தகதை... நடக்கப் போகும் கதையை எல்லாம் பேசி முடித்தோம்.

மருமகன்கள் இருவரும் தன் மாமானார்  எங்களிடம் பணம் கொடுத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு மகள்களிடம் அடிக்கடி சண்டையிடுவதைக் சுட்டிக்காட்டி அழுதார். இடையிடையே என்னை கட்டிப்பிடித்து அழுதார். அழுது தீரட்டும் என்று நானும் எதுவும்  சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.மகள்கள் தான் ஒவ்வொன்றாக சொன்னார்கள்.


ஒரு வழியாக படுத்து உறங்கி காலையில் எழுந்த போது பணம் வைத்திருந்த பேக்கை காணாமல் அதிர்ச்சியாகி  தூக்கத்தில் புலம்பி விட்டேன்....

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...