பாலியல் தொல்லை கொடுத்தது ஒரு காவல்துறை உயரதிகாரி.
தொல்லைக்கு ஆளானவரும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிதான்.
புகார் சொல்ல வந்த அந்த அதிகாரியை அராஜகமாக வழிமறித்து தடுக்க முயன்றவர் இன்னொரு காவல்துறை அதிகாரி.
அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழகம்.
இதைத்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றும் வண்டி பஞ்சர் ஆனா ஜாக்கிரதையா போலீஸே வீட்டுக்கு கொண்டாந்து விடும் மாநிலம் என்றும் விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓரளவு அறிவும் சொரணையும் உள்ள சாதாரண பெண்கள்கூட வீட்டுக்காரன் ஊர்மேய்ந்தால் விளக்குமாற்றால் அடிப்பார்கள்...
பெரிய இடங்களில் இதனை எப்படி கையாளுவார்கள் என்று தெரியவில்லை.
பீலாம்மா வீட்டுக்காரர் விவகாரத்தில் எனக்கு அதிர்ச்சி அளிப்பது வேறொரு விஷயம்..
வேலை நிமிர்த்தம் வந்த பெண் உயரதிகாரியை காருக்குள் அழைத்து அத்துமீறியிருக்கிறார் ராஜேஷ்தாஸ். காமக்கொடூரன்கள்கூட ஆளை தேர்வு செய்யும்போது அதில் ஒரு திட்டமும் முன்தயாரிப்பும் இருக்கும். அவர்கள் ரிஸ்க்கை கணக்கிட்டே அந்த வேலையை செய்வார்கள்.
ஆனால் இந்த ஆளோ அய்யர் வீடுகளில் நினைத்த நேரமெல்லாம் காபி குடிப்பதைப்போல கேஷுவலாக பாலியல் வன்முறை செய்ய முயன்றிருக்கிறார். இது வெறும் அதிகார மற்றும் பணத்திமிரின் விளைவு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பாலியல் வன்முறையை பல முறை செய்து மாட்டாமல் தப்பியவனால் மட்டுமே இத்தனை இலகுவாக (ஆள் யாரென்று தெரியாமலே) அத்துமீற முடியும்.
அப்படியானால் பாதிப்பு பட்டியல் எத்தனை நீளமாக இருக்கும்??
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பற்றி பல செய்திகள் நானும் ஒரு செய்தி சொல்கிறேன். இவர்கள் குடும்பம் செல்வாக்கான காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் குடும்பம்.இவர்களது பண்ணை வீட்டில் உள்ள ஒரு முருங்கை மரத்தில் அந்த பகுதியில் உள்ள சில ஏழை சிறுவர்கள் முருங்கைக்காய் திருடி விடுகிறார்கள். அவர்களை பிடிக்க 7 உயரதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைத்து முருங்கைக்காய் திருடர்களை உள்ளே தள்ளிய பெருமை இவருக்கு உண்டு. எடப்பாடி பழனிசாமியின் செல்லபிள்ளை இவர்.. அப்போ சின்னப்பசங்களை அதுவும் முருங்கைக்காய் திருடினதுக்கு இப்படி கைது பண்றிங்களே என அந்த ஏழைகள் கேட்டார்கள் அதற்கு ராணி வெங்கடேசன் சொன்ன பதில் “தங்கம் திருடினாலும் முருங்கைக்காய் திருடினாலும் ஒன்றுதான்” என்பதுதான். எப்பேற்பட்ட கோடீஸ்வர குடும்பம் பாருங்க...
பணமிருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை..குணமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை!
கேவலம்...
பதிலளிநீக்குபீலாம்மா வீட்டுக்காரர்க்கு கேவலமாக தெரியவில்லை...
நீக்கு