அன்று..
மசூதி இடித்தவனுக்கே
சொந்தம் என்று
தீர்ப்பு எழுதியபோது
வாயடைத்து போய்
நீங்கள் நின்றதால்தான்...
இடையில்
படுகொலையையும்
நிணைத்து பாருங்கள்
இன்று
வன் புணர்ந்தவனையே
திருமணம் செய்யலாமே
என்று கேட்குமளவுக்கு
திமிரு வந்திருக்கிறது..
நன்றி! குறள் நெறி
மஹாராஷ்ட்ராவில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, தூரத்து உறவினன் மோஹித் சுபாஷ் பின்தொடர்ந்திருக்கிறான். வீட்டில் யாருமில்லாமல், அந்த சிறுமி மட்டும் தனியாக இருக்கும் பொழுதில், பின்வாசல் வழியாக வந்து சிறுமியின் வாயை பொத்தி, கைகால்களை கட்டி, பாலியல் வன்புணர்வினை செய்திருக்கிறான். இதை வெளியில் சொன்னால், சிறுமியின் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன்; சிறுமியின் வீட்டிலிருப்பவர்களை துன்புறுத்துவேன் எனவும் மிரட்டியுள்ளான். இதை காரணம் காட்டியே கருத்தடையை பயன்படுத்தி, பல தடவை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான்.
மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சிறுமியை காப்பாற்றிய அவளுடைய தாய், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்தின் அம்மா சொன்ன வார்த்தைகளை நம்பி, பத்திரத்தில் உடன்படிக்கை செய்துள்ளார். ஆனால், எழுத படிக்க தெரியாத அந்த தாய், அப்பா இல்லாத சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டதால், இந்த சமூகம் குற்றவாளியாக்கும் என கருதி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்திற்கு தனது மகளை திருமணம் செய்து வைக்கும் உடன்படிக்கை என நம்பி ஒப்புக்கொண்ட பத்திரத்தில் இருந்ததோ வேறு. அதாவது, சிறுமியும், குற்றம் சாட்டப்பட்ட மோஹித்தும் சம்மதத்துடன் பழகி, பாலியல் உறவில் ஈடுபட்டதாக அப்பத்திரத்தில் இருந்திருக்கிறது.
இதற்கிடையில், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்திற்கு திருமணம் நிகழ்ந்துவிடவே, பாதிக்கப்பட்ட சிறுமியால் மோஹித் மீது பாலியல் வல்லுறவிற்காக FIR பதியப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மொஹித் முன்ஜாமின் பெற்றுவிட, அந்த ஜாமினை நிராகரிக்கச் சொல்லி சிறுமியால் தொடரப்பட்ட வழக்கில், மோஹித்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் நிராகரிக்கப்பட்டு, அவரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக மும்பை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்திரவை எதிர்த்து, ஜாமீன் வேண்டி உச்சநீதிமன்றம் சென்றார் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித். ஜாமீன் வழங்கலாமா வேண்டமா எனத் தீர்மானிப்பதற்கு பதில், அங்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 18 வயது கூட நிரம்பப் பெறாத சிறுமிக்கு, பாலியல் குற்றவாளியை திருமணம் செய்துகொள்ள தயாரா எனக் கேட்டுள்ளார். சிறுமியின் வழக்கறிஞர், இதை சிறுமியிடம் கேட்டு சொல்வதாக சொல்லிய பின்னரும், நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை; தெரிந்துகொள்ளவே விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் தலைமை நீதிபதி S.B.போப்டே. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், முறைப்படி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு பெற்றுக்கொள்ளவும், அதுவரை 4 வாரங்களுக்கு கைது செய்ய வேண்டாமென இடைக்கால தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
அரசு வேலையில் இருக்கும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் மீது உச்சநீதிமன்றத்திற்கு இருக்கும் பரிவு, சாதாரண சிறுமியிடம் இல்லை. எழுதப் படிக்க தெரியாத, வாழ்க்கைத் துணைவரில்லாத, ஒரு பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தனது மகளுக்கு, சமூகத்தின் வசைகள் இருக்க கூடாதென, பாலியல் வன்புணர்வு செய்தவனுடனே திருமணம் செய்து வைக்க எண்ணுவது அறியாமை. அதையே உச்சநீதிமன்றமும் விரும்புவது என்ன வகையில் வரும்? சொம்பும் ஆலமரமும் மட்டும் தான் உச்சநீதிமன்றத்திடம் இல்லை; மற்றபடி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் உச்சநீதிமன்றம் தான் முதலிடத்தில் இருக்கிறது.
#resignBobde
#CrimeAgainstWoman
- நிலவுமொழி செந்தாமரை
நீதித்துறையும் சீரழிந்து பல வருடங்களாகின்றது.
பதிலளிநீக்குசீரழியாதது எதுவுமில்லை....
நீக்கு