ஞாயிறு 25 2021

124ஏ தேச துரோக சட்டமும்..வழக்குரைஞர்களின் கருப்பு கோட்டுக்களின் வரலாறும்.

 

இந்தச் சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இந்தியாவிலேயே, பழைமையான சட்டத்தில் இதுவும் ஒன்று. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவுதான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன. 

அந்த சட்டம் அப்படியே வாழையடி வாழையாக வாழ்வாங்கு சுதந்திர இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டத்தில் தொடர்ந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


இதே போல..

கி.பி.694-ம் ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாவது மகாராணி மரணம் அடைந்த போது எழவு துக்கம் அனுசரிக்கும் விதமாக, பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் உள்ள வழக்குரை்ஞர்கள் கருப்பு கோட்டு அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அன்றிலிருந்து அதுவே வழக்குரைஞர்களின் உடையாகிப்போனது.

பிரிட்டீஷ் சாம்ராச்சியம் எங்கெல்லாம் காலூன்றியதோ, அங்கெல்லாம் வழக்குரைஞர்களின் உடையாகிப்போனது. இந்த கருப்பு கோட்டும் (124ஏ யை போல) இன்றுவரை இந்திய வழக்குரைஞர்களின் அடிமைச் சின்னமாகவும் நிலைத்து கொண்டு வருகிறது.


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....