வெள்ளி 09 2021

இம்சை அரசி...ஓடுகாலி என்ற அடங்காப்பிடாரி.....அடங்்குவது...!!!!.

 



ஒரு அறிமுகம்....

 என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் அன்பர்களுக்கு.. தெரியும் . நான் குடியிறுக்கும் வீட்டிற்க்காக நாற்பது வருடங்களாக ஒற்றை ஆளாக போராடி வருவது.... கடைசியாக வழக்கு தொடுத்தவர்கள் பல தடவை விசாரைணக்கு ஆஜராகததால் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது.

மேற்படி சொத்தில் தங்களுக்கும் பாத்தியம் உண்டு என்தந்தையின் உடன் பிறந்த மூன்று சகோதரர்களின் மனைவிமார்கள்  வழக்கில் தங்களையும் சேர்க்க சொல்லி வழக்கு தொடுத்து. அவ்வழக்கு தள்ளுபடியாகி  பின் உயர்நீதிமன்றம் சென்று வழக்கில் சேர்க்க உத்தரவு வாங்கி சேரந்தவர்களின் வழக்கும் தள்ளுபடியான நிலையில்....

 என் தந்தையின் இரண்டாவது தம்பின் மனைவியானவள் மூன்று குழந்தைகளை பெற்றுவிட்டு பலஆண்களுடன் குடும்பம் நடத்தி   ஓடுகாலியாக பெயர் பெற்றவள். வழக்கு தள்ளுபடியான சில மாதங்களிலே எனக்கு பல வகையில் இம்சை கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்.. ஏற்கனவே.. என் வீட்டுக்கு கழிப்பறை கட்டும்போது.... சண்டைக்கு வந்து நான் மானபங்கம் செய்துவிட்டதாக புகார் கொடுத்தவள்,

இப்போது அதே தந்திரத்தை கையில் எடுத்து தாயும் மகனும்   வீட்டுப் பிரச்சினையோடு மானபங்க தந்திரத்தையும் கொண்டு என்மீது புகார் செய்துள்ளாள்.... மகன் வேலை செய்யும் சங்கி ஸ்கூலின் பிரமுகர் சிபாரிசுனுடனும் உள்ளுர் சங்கி உதவியுடனும்......

என் பகுதி சங்கி காவல் நிலையத்தின் சார்பு சங்கியும்.. சங்கிகளின் சிபாரிசை ஏற்று எனக்கு எப்படி சொத்து வந்தது, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் உனக்குதான சொத்துன்னு தீர்ப்பு சொல்லவில்லை... என்று நீதிபதி போன்று மூக்கை நுழைத்து என்னை மிரட்டி உருட்டி ஒருநாள் முழுவதும் சிறை வைத்தது.. இது போததாது என்று ....

நிலஅபகரிப்பு நிலையத்திலும்... என்மீது புகார்  கொடுத்தும் என் வாக்குமூலத்தையும் என் ஆவணங்களையும் பிரிசிலித்து  தள்ளுபடி செய்யபட்ட போதும்..... வீண்வம்புக்கு இழுத்து அடிக்காத நான் அடித்தாத அரசு மருத்துவமனையில் சேரந்து சிகிச்சை பெற்று மகன் மூலம் மானபங்கம் புகார் கொடுத்து  செலவிட செய்தது.

டவுன் சர்வே அளவீட்டில் எனக்குரிய 12 சென்ட் இடத்ததை முறைகேடாக  ஏழேகால் செண்ட்யை என் தந்தையின் சகோதரர்கள் பெயரிலும்  மூன்று செண்ட் இடத்தை 1980 லிருந்து என் மீது வழக்கு தொடுத்தவரின் பெயரிலும்  மீதி இடத்தை என் இடத்துக்கு மேற்பக்கம் எள்ள பாதை இல்லா இடத்தை குறைந்த விலைக்கு வாங்கிய தெரு நாட்டாமைக்கு  பொதுநடைபாதையாக அவரிகளின் பதிவு பெற்ற பத்திரத்தை கணக்கில் கொள்ளாமல் நகரளவை கணக்கில் பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டி பலதடவை வட்டாட்சியர் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்  நடவடிக்கை எடுக்க வேண்டி  உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு நாலு மாதத்தில் முடிக்க எத்தரவிட்டதை தாண்டி ஐந்து வருடமாக நடந்தும் எனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உரிய நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக் கொள்ளமாறு தள்ளி விடப்பட்டது.

இதையும் மற்ற விபரங்களையும் சேர்த்து டவுன் முன்சிப் கோா்ட்டில் தாக்கல் செய்யப்பட்டவுடன் இம்சை அரசியான ஓடுகாலி என்ற அடங்காப்பிடாரி என்னை அடக்க மீண்டும் சங்கி பிரமுகர்களின் தூண்டுதலில்.....தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்.....

ஏற்கனவே..தெரு நாட்டாமையின் வைப்பாட்டி......கூரை வீடாக இருந்த போது இரண்டு மூன்று தடவை என் வீட்டுக்கு தீவைத்து ஓய்ந்து  தீ கொளுத்தீ என்ற பெயருடன் மறைந்துவிட்.டாள் இப்போது இரண்டாவது தீ கொளுத்தி..........  

 சங்கிகள் நிறைந்த காவல்நிலையத்தில்.... கடந்த நாற்பது வருடத்தில் நான்கு அல்லது ஐந்து முறை  தெரு நாட்டாமை மீதும் என் மீது சிவில் வழக்கு தொடுத்தவர் மீதும்... ஒடுகாலி என்றஅடங்காப்பிடாரியின் இம்சைகளால் நான் புகார் கொடுத்த போது.... இது சிவில் மேட்டர் கோர்ட்டில்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன சங்கி போலிஸ்கள்...இம்சை அரசியான அடங்காப்பிடாரியின் பொய்யான  புகாரை மட்டும். தலையில்  வைத்துக் கொண்டு எனக்கு தண்டனையும் செலவினங்களையும் ஏற்படுத்துகிறது....

 

இந்த இம்சை அரசி.யான.. ஓடுகாலி என்ற அடங்காப்பிடாரி அடங்குவது எப்போது.....!!! நம்பர்2 தீ   கொளுத்தீயின் இம்சையையும் அனுபவித்துதான் ஆகனுமா....????


4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அந்த நாள் வரை இம்சைகளை தாங்கித்தான் ஆகனுமா?? நண்பரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. மனதில் ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் உடலில் தெம்பு இல்லாமல் இருக்கிறேன் நண்பரே! தங்களின் அறிவுரைக்கு நன்றி!

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....