திங்கள் 02 2021

நாமும் நம்புவோமாக!

 

ரொமிலா தாபர், அருந்ததி ராய், அருணா ராய் உள்ளிட்ட 500 அறிஞர்களும் எழுத்தாளர்களும், இதழியலாளர்களும், செயற் பாட்டாளர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி என். வி. இரமணா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் :
1.எந்தவொரு இந்திய நிறுவனமாவது பெகாசஸை விலைக்கு வாங்கியுள்ளதா? அப்படி என்றால் அந்த நிறுவனம் எது? அதற்காக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது? (ஒரு கைபேசியை ஒட்டுக் கேட்க ஆகும் செலவு 1.5 கோடி எனச் சொல்லப்படும் நிலையில் இது முதன்மை பெறுகிறது.)
2. அப்படி வாங்கப்பட்டது உண்மை என்றால், ஒட்டுக் கேட்கப்படுபவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்? அவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன?
3. இவ்வாறு ஒட்டுக் கேட்பதை ஏற்றுக் கொள்வதற்கான நியாயப் படுத்தல்கள் தாம் என்ன? இவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் எந்த அரசமைப்பு அதிகார அமைப்பிடம் வழங்கப்பட்டது?
4. இதழியலாளர்கள், அரசியல் வாதி கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், வழக்குரைஞர்கள், கல்விப் புலமையாளர்கள், (உச்ச நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்) உள்ளிட்ட பலருடைய குற்றச் செயல்பாடுகளை எந்த அரசமைப்பு அதிகார அமைப்புக் கண்காணித்தது, மதிப்பீடு செய்தது?அதன் விளைவாகத்தான் அவர்கள் ஒட்டுக் கேட்கப்பட்டார்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதற்கான வழிவகைகளை உச்ச நீதிமன்றம் செய்யும் என அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
அவர்களோடு இணைந்து நாமும் நம்புவோமாக!
- கலைவேலு பதிவு
நன்றி : ஜீவசுந்தரி

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....