பக்கங்கள்

Sunday, May 08, 2011

ஒரு சாதி வெறியனின் படிக்காத பக்தனும் படித்த பக்தனும்

வினவுல“மதுரை வில்லுரில் தேவர்சாதி” –பற்றி எழுதுதியவுடனே
சாதிவெறியனின் பக்தரெல்லாம் கண்ணு,மூக்கு தெரியமா
தங்களுடைய பக்தியை வெளிக்காட்டுதுக. இதுல,படிக்காத
பக்தனை காட்டிலும், படித்த பக்தர்கள் ரெம்பவும் வெறித்-
தனமாக தங்களுடைய ஆதிக்க சாதிவெறி பக்தியை வெளிப்
படுத்துகின்றனர்.

சாதி வெறிக்கு பேர்போனது தமிழகம்தான் இங்குதான் ஏகப்-
பட்ட சாதி அமைப்புகளும் சாதிகட்சிகளும் நிறைந்துள்ளன.
இதில் பச்சை தமிழன்,மஞ்சள்தமிழன்,புரட்சிதமிழன் என்று
வீராப்பு நிறைந்த தமிழகம்.

ஏழுகடல்தாண்டி,ஏழுமலைதாண்டி சென்றாலும் தமிழனின்
இந்த சாதிவெறி மட்டும் விடாமல்,செத்து சாம்பலானலும்
அந்த சாம்பலிலும் தொடர்ந்து வரும்.

நல்லவேளை, இணையத்தில் இ.மெயில் கணக்கு தொடங்கும்
போதும்,தமிழ் வலைபதிவு தொடங்கும்போது என்னசாதி?உட்
பிரிவு என்ன?என்று கேடகவில்லை. ஒருவேளை இந்தசாதி
வெறியனின் படித்தபக்தன் அங்குஇருந்திருந்தால் சாதியைப்
பற்றி ஒரு அஜெண்டா கொண்டு வந்திருப்பார்கள்.

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குபோனா,அங்க ரெண்டு
கொடுமை ஆடிக்கிட்டு வந்துச்சாம்.அதுமாதிரி இருக்கு சாதி
வெறியனின் படித்தபக்தனின் பின்னுட்டங்கள். கடவுளைபற்றிய
மூடநம்பிக்கை மாதிரி,இந்த ஆதிக்க சாதிவெறியனின்,பக்தர்களின்
நடவடிக்கைகளும்,மூடநம்பிக்கைகளும் சொல்லிமாளாது.

அதிலொன்று ஆண்டபரம்பரை என்பது.ஆண்டபரம்பரை
என்றாலே மற்றவர்களை அடிமைப்படுத்தும் பரம்பரைதான்
ஆண்டபரம்பரையின் யோக்கியதைப்பற்றி ஏராளமான சான்றுகள்
புள்ளிவிபரங்கள் உள்ளன.எடுத்துக்காட்டாக.படித்த பக்தனின்
குலதெய்வம் ஏசிய வசுவுகள்,மிரட்டிய நடவடிக்கைகள்.தமிழக
சட்டமன்ற கெஜட்டிலும்,வினவுல வெளியான பல பதிவுகளிலும்
புதியகலாச்சாரம்,புதியஜனநாயகம் இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
மேலும் சாதிஎதிர்ப்பாளர்கள்,ஜனநாயகவாதிகள்,முற்போக்காளார்கள்
ஆகியோர்களின் கட்டுரைகளிலும்,அவர்களின் பதிவுகளிலும்
ஆதிக்கசாதிவெறியின் கொடுங்கோண்மை பற்றி வெளியிட்டுள்ளனர்.

இதையெல்லாம் சாதிவெறியனின் படித்த பக்தர்கள் படிக்க
மாட்டார்கள்.தப்பித்தவறி படித்தாலும் நேர்மையாக பதில் சொல்ல
மாட்டார்கள். உண்மையை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.ஏட்டிக்கு
போட்டியாக கட்டுரை வெளியீடுவார்கள்.அல்லது அருவா பேசும்
என்று மிரட்டுவார்கள்.

நீதியும்,நேர்மையும்,மனிதாபிமானமும்,தவறை ஒத்துக்
கொண்டு திருத்திக்கொள்கின்ற நடைமுறையையும் படித்த
பக்தர்கள் பின்பற்றியிருந்தால் சாதிவெறி நீடித்திருக்குமா?
சாதிவெறியர்கள் தோன்றியிருப்பார்களா? கல் தோன்றா
காலத்தில் தோன்றிய மூத்தகுடியில் சாதிவெறி வேர்
பிடித்து ஆலமரம் போல் வளர்ந்திருக்கமுடியுமா?
பெரியாருக்குப்பின் அவருடைய கொள்கைகளா நிலைத்து
இருக்கிறது. அவர் சேமித்த சொத்துகள்தான் பெருகி
யிருக்கிறது.பெரியாரின் பெயரைச்சொல்லி ஆட்சிக்கு
வந்தவர்களோ,சட்டத்தின் கவலர்கள் என்று அத்தாட்சி
பெற்றவர்களோ, தீண்டாமை,வன்கொடுமை சட்டத்தை
முறையாக,உறுதியாக அமுல்படுத்தப்பட்டுயிருந்தால்
ஆதிக்க சாதிவெறி ஏழுகடல்தாண்டி,எட்டுமலைதாண்டி
ஓடிப்போயிருக்கும்.

இந்தியா வல்லரசாக ஆவதுகூட தனக்குகீழ் உள்ள
நாடுகளை ஆள்வதற்குதானே,ஒழிய சாதிவெறியை
ஒழித்து எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று நிலை
நிறுத்துவதற்கல்ல.

இந்தியா வல்லரசு ஆகுவதற்குள்.சாதிவெறியனின
படிக்காத பக்தர்களும்,படித்த பக்தர்களும் அங்காளி பங்காளி
களும் சேர்ந்து இப்படி செய்துவிடுங்களேன்.“இது பொது வழி
அல்ல” இந்தத்தெரு இன்னாருக்கு சொந்தமானது. இன்னார்
இன்னார் வண்டிஓட்டி போகலாம்,காலில்செருப்புபணிந்து
செல்லலாம்.வேஷ்டியை மடித்துக்கட்டி நடக்கலாம்.துண்டை
தலையில் கட்டிக்கொள்ளலாம். இன்னாரைச் சேர்ந்த
அன்னியர்கள் தொலைவில் நின்று எட்டிப் பார்க்க்கூட
அனுமதியில்லை என்று எச்சரிக்கை போர்டு வைக்கலாம்
இதேமாதிரி தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆதிக்க சாதி
வெறியர்களும் தங்கள் ஏரியா,மற்றும் எல்லைகளில்
எச்சரிக்கை போர்டு வைத்துவிடலாம்.

டீக்கடைகளில்இன்னார்களுக்கு டீ குடிக்க அனுமதி
இல்லை. மீறி டீ கேட்டால் தனிக்குவளைகளில்தான்
தரப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கலாம்.இது
எதுக்குன்னா, அவுங்கதான் அறிவிப்பு பலகை வச்சருக்
காங்கல.நீ என்ன மயித்துக்கு அங்க போயி டீ குடிச்சு
புட்டு தனிக்குவளையில தருராங்கன்னு புகார் கொடுக்
கிற என்று போலீஸ் உங்க சார்பாக பேசுவதற்குக்காகத்
தான்.மேலும் ரிங்ரோடு,நான்குவழி பிரதான சாலைகளின்
இரண்டு முகப்பு வழிகளில் “இதனால் அறிவிப்பது என்ன
வென்றால் வெவ்வேறு பெயர்களில் உலாவரும் அனைத்து
வகைப்பட்ட தீண்டப்படாத சாதியைச் சேர்ந்தவர்கள்,உத்தங்
குடியிலிருந்து திருமங்கலம்வரை ரிங்ரோடும், சமயநல்லு
ரிலிருந்து கப்பலுர்வரை உள்ள நான்குவழிபிரதானசாலைகள்
தெய்வத்திரு.இன்னாருக்கு புர்வீகப்பாத்தியப்பட்டது.
இன்னாருக்கு பாத்தியப்பட்ட ரோட்டில் கீழ்சாதிகளைச்
சேர்ந்த இன்னின்ன சாதிகள் பஸ்,வேன்,கார்,பைக் முத
லானவற்றை ஓட்டி செல்லக்கூடாது.பஸ்,லாரிகளில்
பயணிக்கக்கூடாது.தெரிந்தோ,தெரியாமலோ,அத்துமீறி
பயணிப்பவர்களுக்கு அபதாரத்துடன் தக்க தண்டனை
வழங்கப்படும். இப்படிக்கு.......ஆண்டபரம்பரை. ” யாரும்
எளிதில் புடுங்கிஎறிய முடியாத வகையில் பெரிய
போர்டை வைத்துவிடலாம்.கண்கானிப்புக்கு பெர்டல்
வாகனத்தையும்,கூடவே அந்தப்படை,இந்தப்படைகளையும்
ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

அந்தபடை,இந்தபடைகளுக்கு வம்புழுப்பது, கீழ்சாதித்
தலைவர்களை வசைமாறிபொழிவது.குத்துவெட்டு கொலை
போன்ற அரிய குணங்களை பயிற்றுவிக்கலாம்.

சாதிவெறிபிடித்த படித்த பக்தர்கள் கீழ்கண்ட நடைமுறை
களை படிக்காத பக்தனுக்கும் தங்களின் அடியொற்றி சாதி
வெறியை பின்பற்றும் இனநட்பு பந்துகளும் கடைபிடிக்க
உத்திரவிடலாம்.

ஆதிக்கசாதிவெறிபிடித்த பந்தங்கள், தீண்டதகாத சாதியை
சேர்ந்த பெண்களை. வைப்பாட்டியாகவோ,சின்னவீடாகவோ,
தேவைக்கு பயன்படுத்தும் கள்ளக்காதலியாகவோ வைத்துக்
கொள்ளக்கூடாது.அது உயர்ந்த நம்சாதிக்கு இழுக்கானது.
தங்கள்பன்னைகளில் வேலை பார்க்கும் கீழ்சாதிக்காரர்களை
நமக்கு விசுவாசியாக இருந்தாலும் நீக்கிவிட்டு நம்இன சாதி
வெறி பந்துக்களையே நியமிக்க வேண்டும்.தம்இன சொந்தங்
களின் தொழிற்கூடங்களில் அலுவலங்களில் சாதிவெறி
பணியாளர்களையே அமர்த்தவேண்டும்.கக்கூஸ் கழுவ,கூட்ட
அனைத்து உள்பட.

தங்கள் இன பந்தங்கள் நடத்தும் பஸ்,தியேட்டர்,கல்லுரிகளில்
சாதிவெறி மாணவர்களைமட்டுமே அனுமதிக்க வேண்டும்

தம்இன சந்ததிகளின் குடும்பத்திலுள்ள பெண்கள் கீழ்சாதி
பயல்களிடம் காதல்,கீதல் என்று மயங்காமல் இருக்க.கவண
முடன் கண்கானிக்கவேண்டும்.மீறினால் நம்குலப்பெருமையை
நிலைநாட்ட அடுத்தவர்களுக்கு பாடமாக இருக்கும்வகையில்
கதற கதற போட்டுதள்ள வேண்டும்.

திரைப்படத்துறையில் சாதிவெறியை சிறுமைபடுத்தியோ,
கிண்டல் படுத்தியோ எடுக்கும் படத்தில் நம்இன மக்கள்
நடிக்க்கூடாது.பார்க்க்கூடாது. மற்றபடி புளுபிலிம் உள்பட
எந்த படத்திலும் நடிக்கலாம்.பார்க்கலாம்.

முக்கியமானது நம் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சாதி
வெறிப்போரில் சாதிவெறிப்படையோ,சாதிவெறியர்களோ
கீழ்சாதிப்பெண்களை கூட்டமாகவோ,தனித்தனியாவோ
வன்புணர்ச்சிகூடாது.இதன்மூலம் நம் ஆண்டபரம்பரையின்
வித்து அடிமை பரம்பரைக்கு போகக்கூடாது.அடிமைச்சாதி
யின் ரத்தமும் வியர்வையும் ஆதிக்க பரம்பரைக்கு வரக்கூடாது.
இதனால் நம்குலதெய்வத்தின் சந்ததிகளை பெருக்கியும்.நம்
ஆதிக்கத்தை நிலைநாட்டலாம்.நம்சாதிவெறியை அனையாமல்
காப்பாற்றிக்கொள்ளலாம்.தீண்டதாகதவர்களின் கொட்டத்தை
அடக்கிவைக்கலாம்.

இதற்குள் இந்திய நாடும் வல்லரசாகி தன் ஆதிக்கத்தை
நிலைநாட்டிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

உலக அரங்கில் இந்தியா வல்லரசு பெருமையுடன்
வலம்போது ஆதிக்க சாதிவெறிபிடித்த குலதெய்வத்துடன்
அந்த குலதெய்வத்தின் சாதிவெறிபிடித்த படித்த பக்தனும்
படிக்காத பக்தனும் இடதுபுறமும் வலதுபுறமும் வeந்து
சாதிவெறியான குலப்பெருமையை பறைசாற்றலாம்.

“தீண்டாமை ஒரு பாவச்செயல்”
“தீண்டாமை ஒரு பெருங்குற்றம்”
“தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்”......ஏட்டில்
எழுதியாச்சு, எழுதியதை படிச்சாச்சு, படித்ததை மறந்தாச்சு???.

வாழ்க இந்திய ஜனநாயகம்!!!!!

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com