புதன் 30 2024

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

 தீக்காயம்: வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பணவிரயம்: தேவையற்ற ஆடம்பரம், அதிகப்படியான செலவுகளால் பணவிரயம் ஏற்படுவதோடு, கடனாளியாகவும் ஆகின்றனர்.

வயிற்றுக் கோளாறு: ஒரே நாளில், ஒரே வேளையில் அளவிற்கு அதிகமாக அதிக உணவுகளை, பலகாரங்களை, இனிப்புகளை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவச் செலவும் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: ஒரே நாளில் எல்லோரும் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்துப் பற்றாக்குறை, நெரிசல், தவிப்பு, கூடுதல் கட்டணம் என்று பல கேடுகள் வருகின்றன.

கடைகளில் குவிதல்: எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் குவிவதால், நெரிசல், களவு, தரமற்ற பொருட்கள் என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற கேடு பயக்கும் தீபாவளியைக் கொண்டாடுவதைக் கைவிட்டு அறிவிற்குகந்த பொங்கல் போன்ற விழாக்களை செலவின்றி, சேதமின்றிக் கொண்டாடி மகிழ வேண்டும்.

நன்றி! பெரியார் பிஞ்சு


வெடியால்---மனித காது 140 டெசிபல், சத்தம் வரை கேட்க உகந்தது. சத்தம் அதற்கு மேல் போனால், இதய நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  காது மந்தம் உள்ளவர்கள் பாதிக்கப் படுவார்கள்

கரப்பினிகளுக்கு--

அதிக சத்தம் இருக்கும் போது அது கர்ப்பிணியின் காதை மட்டும் அல்ல வயிற்றின் உள்ளே இருக்கும் கருவையும் தாக்கலாம். தீபாவளி   வெடிச்சத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை உண்டு பன்னும்


  1. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது வனவிலங்குகளின் வாழ்விடங்களில் வழக்கமான சுற்றுப்புறச் சத்தத்தை விட அதிக சத்தமாக இருக்கும்.
  2. பட்டாசு வெடிக்கும் ஒலிகள் அதிக டெசிபல் அளவை எட்டக்கூடும், இதனால் வீட்டு விலங்குகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் துன்பம் ஏற்படும்.
  3. மறுபுறம், வனவிலங்குகள் அவற்றின் சூழலில் இயற்கையான ஒலிகளுக்குப் பழகிவிட்டன, அவை பொதுவாக குறைவான தீவிரம்.
  4. பட்டாசு சத்தத்தின் திடீர் மற்றும் செயற்கையான தன்மை பல்வேறு உயிரினங்களுக்கு இடையூறு விளைவிக்கும், அவற்றின் நடத்தை, தகவல் தொடர்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது.
  5. பாதிப்பைப் பொறுத்தவரை, தீபாவளியின் போது பட்டாசுகளின் சத்தம், வனவிலங்குகளின் வாழ்விடங்களின் வழக்கமான ஒலிப்பதிவிலிருந்து கூர்மையான விலகலாகும், இது அவற்றின் இயற்கையான செயல்பாடுகளில் மன அழுத்தத்தையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும்.
  6. நன்றி! கோரா



தீபாவளி நெருங்கும்போது, ​​பண்டிகைக் காலம் மகிழ்ச்சியையும், கொண்டாட்டங்களையும், துரதிர்ஷ்டவசமாக, ஒலி மாசுபாட்டின் அதிகரிப்பையும் தருகிறது. பட்டாசுகள் மற்றும் உரத்த இசை விழாக்களில் ஒருங்கிணைந்தாலும், அதிகரித்து வரும் இரைச்சல் அளவுகள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: "பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்