உலகத்திலே பெரிய ஜனநாயக நாடு எது என்றால் இந்தியாதான்
என்பார்கள் ஜனநாயகத்தால் பலனடைந்தவர்கள். இவை மாதிரி
உலகத்திலே சாலை விபத்துகள் நிறைந்த நாடு எது என்றால்
இந்தியாதான் என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.இந்த இந்தியாவிலே
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.அதிகம் இருப்பது தமிழ்நாடு.
இந்தத் தமிழ்நாட்டில் அதிக விபத்துகள் நடக்கும் நகரம் எது என்றால்
சென்னை என்பார் சென்னைக்காரர். மதுரைக்காரர் மதுரை என்பார்
.செவி வழி மற்றும் செய்திதாள்களில் வருவதைப்பார்த்தால்.எந்தவொரு
போக்குவரத்து விதிகளையும் ஒழுங்கையும் கடைபிடிக்காமலும் பின்
பற்றாமலும் இருப்பதும் தெரியும். செல்போன் வந்ததலிருந்து. தான்
தோன்றித்தனமும் அசட்டையும் திமிரும்தான் அதிகமாகிவிட்டது.
இதில் இருசக்கர,மூன்றுசக்கர,நான்குசக்கர, ஆறுசக்கர வண்டி ஓட்டி
களும்.பாதசாரிகளும், போக்குவரத்து விதிமீறல்களை கண்டும்காணாமல்
தங்கள் பையை நிரப்புவதில் கண்ணும்கருத்துமாக இருக்கும் போக்கு
வரத்து போலீசும்.இதற்கு மேலாக சாலைவரி. வாகானவரி, இந்தவரி இந்தவரின்னு வரிவசூலிக்கும் அரசும் கண்டுகொள்வதில்லை.இதனால்
போக்குவரத்து விதிகளை அறிந்து ஒழுங்காக செல்லும் வாகனஓட்டிகள்
களும் பாதசாரிகளும்தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
ஊழல் செய்யாமல்,இலஞசம் வாங்காமல் இருப்பவர்களை பார்த்து
பிழைக்கத்தெரியாதவன் என்பதுமாதிரி போக்குவரத்துவிதிகளை மதித்து
வாகனம்ஓட்டுபவர்களை வண்டி ஓட்டத்தெரியாதவன்என்று பட்டம் சூட்டிவிடு
கிறார்கள். குறுகிய வளைவுகளில் சந்து பொந்துகளில் சிறு இடம் கிடைத்
தால் போதும் இருசக்கர வாகனஓட்டிகள் நுழைந்துவிடுகிறார்கள்.மூன்று
சக்கரவாகனமும் அப்படியே. இந்த முந்தும் போட்டியில் இரு,மூன்று
சக்கர வாகன ஓட்டிகளைத்தவிர பாதசாரிகளும் தங்கள் பங்குக்கு
குறுக்காக பாய்வார்கள்.இதில் படித்தவர்களும்சரி,படிக்காதவர்களும்
சரி.ஒரே குட்டையில ஊறின மட்டைகளாகத்தான் இருக்கிறாகள்.
மக்கள்தொகைக்கு ஏற்ப வாகனங்களும் பெருகிக்கொண்டுதான்
வருகின்றன.வாகான பெருக்கத்திற்கேற்ப ரோடுகளும் போக்குவரத்து
விதிகளும் விதிமுறைகளை பின்பற்றுபவர்களும் பெருகவில்லை
கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாகத்தான் நிலைமை
இருக்கிறது. விபத்தில்லாமல் ஓட்டும் வாகனஓட்டிகள் எண்ணிக்கை
மிகச் சொற்ப்பமே இந்த சாலை விபத்துக்களால் பலர் உயரை இழந்தும்
உடல் உறுப்புகளை இழந்தும் பரிதவிக்கின்றனர்.இதற்க்கெல்லாம் யார் காரணம்?
விதியில் பழி போடும் வீணர்கள் கூட்டமா?அல்லது புதுசு புதுசா பல
வண்ணங்களில் நாளும் தயாரித்து விற்று கல்லாக்கட்டும் முதலாளி
களின் கூட்டமா?அல்லது அந்த முதலாளிகளுக்கு நாளும் வரிச்
சலுகையளித்து தங்கள் கல்லாவை நிரப்பும் ஆளுங்கட்சி கூட்டமா?
அல்லது குத்தாமல் குடலை புடுங்குவது எப்படி என்று சொல்லித்தரும்
அதிகாரிகளின் கூட்டமா? அல்லது வாழ்க்கையிலும், சாலைகளிலும்
தாம்மட்டும் முந்திவிடலாம் என முந்தும் பொது மக்களா?-இவர்களில்
யார் காரணம்.???????
பத்து வருடத்துக்கு மேலாக விபத்தில்லாமல இரு சக்கர வாகனம்
ஓட்டிய என் மருமகன். டாஸமாக்(குடிமகன்) வாகன ஓட்டியால்
விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் இருக்கிறார்.
மருத்துவ செலவு குறைந்தாலும் மற்ற செலவுகள் இருக்கிறதே!
விபத்து எற்ப்பட்டதற்கான முதல்தகவல் பெருவதற்கும், விபத்து
வாகானத்தை காவல் நிலையத்தில் செர்த்தற்க்கும் .வாகனத்தை
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வதற்கும். புலன்ஆய்வு
சார்பு ஆய்வாளர்க்கும்........நான் அழவேண்டியிருக்கிறதே!!
“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க”ன்னு வள்ளுவரு சொல்லி
விட்டு போயிட்டாரு, என்னால் சிரிக்க முடியவில்லை,அதுக்காக
புலன்ஆய்வு சார்பு ஆய்வாளர்க்கும்,வட்டார போக்குவரத்து ஆய்வாளர்
கும் அழாம இருக்க முடியுமா???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்-பிபிசி தமிழ் இந்திய துணைக்கண்டத்தின் அறிவுச செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் ஆ...
-
வருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...
-
க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்... தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ, நண்பர்களோ.வேறு சிலரோ.. கதை சொல்லும் போது,. க...
எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!
சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குஇரக்கமெல்லாம் வேண்டாம் சார்.அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுங்க சார்.
பதிலளிநீக்கு