பக்கங்கள்

Wednesday, May 18, 2011

ஓய்வெடுத்த அம்மாவும், ஓய்வெடுக்கும் அய்யாவும்

தமிழக தேர்தல் வரலாற்றில் அய்யா 12முறை சட்டசபை தேர்தலில்
வெற்றி பெற்றுயிருக்கிறார்.

தமிழக வரலாற்றில் ஓய்வெடுத்த அம்மாவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
அடித்த ஜாக்பாட்டால் சந்தோசத்தில் இருக்கும் அம்மா.இனி
ஓய்வெடுப்பதை மறந்துவிட்டு அய்ந்து வருடத்துக்கு, அதாவது
அடுத்த தேர்தல் வருகிறவரைக்கும் உழைக்கப்போகிறார்.
வாக்களித்த மக்கள் அனைவரும் சந்தோசமாக அவரவர்
கவலை படாமல் ஓய்வெடுக்காமல் வேலை செய்யவும்
அப்படி மீறி கஷ்டம் வந்தால் ஒரு அய்ந்து வருஷசத்துக்கு
அடுத்து பார்த்துக்கலாம்.

அம்மாவின் ஆசி பெற்ற தொண்டர்களெல்லாம் தங்கள்
குடும்பத்துடன், அம்மாவுக்கு ஜாக்பாட் அடிக்க உதவிய
முப்பத்து முக்கானு கோடி தெய்வங்களுக்குரிய நேர்த்திக்
கடனை ஒழுங்காக செய்து முடிக்கவும்.நேர்த்திக்கடனை
செய்யலைன்னா அது அம்மாவின் ஆட்சிக்கு ஏற்படும் தீங்கு
தெய்வக்குற்றமாகும்.

ஓய்வெடுக்கும் அய்யா நிரந்தரமாக ஓய்வெடுக்கும்வரை
பேரன்கள் தயாரிக்கும் படத்திற்கு கதைவசனம் எழுதவும்
மற்றும் நெஞ்சுக்கு நீதியைத் தொடரவும். தலைக்கு வந்தது
தலப்பாகையுடன் போனதை எண்ணி நிம்மதி கொள்ளவும்.
அஞ்சா நெஞ்சரால் வரும் பதவிச்சண்டை அய்ந்து வருடத்துக்கு
தள்ளிப்போடப்பட்டுள்ளது. செத்தும் சாகாத சாய்பாபாவை நினைத்துக்கொள்ளவும்.

ஓய்வெடுத்த அம்மா உழைப்பதும், உழைத்த அய்யா ஓய்வெடுப்
பதும் எல்லாம் நண்மைக்கே!
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோரும் வேதனை இருக்கும்
வந்தபின்பு எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
என்றும் அமைதி கிடைக்கும்”.

குறிப்பு-.ஏழை பாளைகளுக்கு நீங்கள் செத்து சுன்னாம்பா
ஆனாலும் ஓய்வெடுத்த அம்மாவுக்கும், ஓய்வெடுக்கும்
அய்யாவுக்கும் கிடைக்கும் அமைதி. உங்களுக்கு ஈருஏழெ
ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது.