சனி 02 2011

கேட்டீரா?......ஒரு.....சேதீய........!!!

மச்சான்,மச்சான் என்னய கோடை பண்பலை
விழவுக்கு கூட்டிட்டு போ.......... மச்சான்

உன்னய  கூட்டிட்டு போகாம இருந்திருவேனா
பிள்ள!

மறந்திறமாட்டியே மச்சான்,”

உன்னய மறப்பேனா பிள்ள,”

இந்த வசனம் கோடை பண்பலை அலை
வரிசை ஒலிபரப்பில் ஒலித்த வசனங்கள்


காலையில் இருந்து கரண்ட் போனாலும்
ராத்திரிவரைக்கும்  இடைவேளை இல்லாமல்
குத்துப்பாட்டு,கொத்துப்பாட்டு,டப்பா பாட்டு,
நின்றபாட்டு,நிக்காதபாட்டு இப்படி பல வகை
பெயர்களில் தனியார் பண்பலை அலைவரிசை
ஒலிபரப்புடன் போட்டிபோட்டுக் கொண்டு
கலைச்சேவையினை ஒலிபரப்பிவரும்


இந்தியஅரசு நடத்தும் தமிழ்மொழி கோடை
பண்பலை ஒலிபரப்பு நிலையத்தின் பதினோ
றாவது பிறந்தநாள் விழாவாம்.அந்த விழாவுக்கு
தான் அந்தப்பொன்னு,தன் மச்சானை கூட்டிட்டு
போ....மச்சான்னு கொஞ்சும் மொழியில் கூவியது.


பண்பலையில் வரும் எந்த விளம்பரமும் நடப்பு
குடும்பத்தோடு  எள்ளவுவிற்குகூட சம்பந்தம்
இருக்காது.ஆனா,இருக்கிறமாதிரி மயக்கத்தை
உண்டு பண்ணிவிடும் அலைவரிசை.


தனியார் பண்பலை ஒலிபரப்பு தோன்றாத காலத்தில்
பாட்டு கேக்கிற பொழுதுபோக்குகிற்கு கோடை
பண்பலை ஒலிபரப்புதான் முதன்மையாக
இருந்தது.


தோழர் சார்லி சாபடளின் நடித்த மாடர்ன் ஆப்
டைம்ஸ் படத்திதல் அவர்  எப்பொழுதும் ஸ்பானருடன்
இருந்த மாதிரி .இருபத்தொன்றாம் றுாற்றாண்டு
தொடக்கத்தில் ஒவ்வொருத்தரும் தங்கள் வீடு
களிகளிலும்,சின்னஞ்சிறிய,நடுத்தர தொழிற்
கூடங்களிலும் பண்பலை ஒலிபரப்பு எப்எம்வுடன்
தான் இருந்தார்கள்.பாட்டுகேட்டுக்கொண்டே
இருக்கும் நிலைதான் அன்று இருந்தது.


இந்த பண்பலை ஒலிபரப்பின் தாக்கத்தைப்
பற்றி அன்றைய புதிய கலாசாரம் மாத இதழில்
ஏராளமான கட்டுரைகளும் கவிதைகளும்
வெளிவந்திருந்தன.

தனியார்மயம்,தாராளமயம் புன்னியத்தால்
ஏராளாமான தனியார் பண்பலை ஒலிபரப்பு
நிலைய்கள் தோன்றியது

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் செல்
போன் கம்பெனிகள் மாதிரி  ஒவ்வொரு 
நிலையமும் தங்கள் கொள்கைக்கேற்ற
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வயது
வித்தியாசமின்றி பாரபட்சபாராமல் எந்த
ரசிகனும் தப்பித்து ஓடிவிடாமல் கட்டி
போட்டு இருந்தன. அதில் தப்பித்தவர்கள்
காது கேளாதவர்கள்தான்.


அப்படி முதன்முதலில் இசை கயிற்றால்
கட்டி போட்ட கோடைபண்பலை ஒலிபரப்பு
நிலையத்துக்கு  பதினோராவது பிறந்த நாள்
விழா.சேலம் நகரத்தில் அதுவும் கல்லுாரி
வளாகத்தில்.


பண்ணைபுரத்து இசைக்கலைஞனின் வசீகரத்
இசை தாலாட்டுடன் பல இசைக்கயிற்றால்
கட்டுண்டு கிடப்பவர்கள்.அந்தக்கட்டுகளிலி
ருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமானதா??


காற்று மண்டலத்தையே!  காந்த மண்டலமாக
ஆக்கியவர்கள் அவ்வளவு  சுலபத்தில் விட்டு
விடுவார்களா??????????????????



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்