செவ்வாய் 05 2011

சொன்னாங்க........சொன்னாங்க........நல்லவங்க.........சொன்னாங்க......

நாட்டின் எல்லையை காப்பது இராணுவம்.எதிரிகளிடமிருந்து
நாட்டை காப்பது இராணுவம்.இராணுவ சேவையே நாட்டின்
உயர்ந்த சேவை...இப்படி பள்ளிகூடத்திலிருந்து கல்லுாரி
வரை.சந்துலிருந்து பை-பாஸ் ரோடு வரை,மண்ணிலிருந்து
ஆகாயம்வரை, பாரத நாட்டின் தந்தையிலிருந்து,பாரதமாதா
மாதா வரைக்கும்  சொல்லிச் சொல்லி மண்டையில ஏத்தி
விட்டுட்டாங்க.

தப்பும்மா...தப்பு, இராணுவம் நாட்டைக்காக்ல, அது தோட்டத்தை
தான் காக்குது.இராணுவம் எதிரிய சுடல,அது சின்ன பையன
சுட்டுருக்கு.

நாட்டுக்கு நாடு வேறுபாடு இருந்தாலும். எல்லா நாட்டு இராணு
வத்துக்கும். திருடுவது ,கூத்தடிப்பது,போர-வார பொமபளகள 
கெடுப்பது.அப்பாவிகள ஓடிபிடிச்சு விளையாடி சுட்டுக் கொல்லு
வது.விடுதலை பெண்போராளிகளின் உயிரற்ற உடலை புனர்வது
தீவிரவாதிய தேடுறோம் என்று அடுத்த நாட்டுக்குள்ள புகுந்து
நாசம் பன்னுவது.அவர்களே,சொல்லக்கூடிய நீதி,நேர்மையை
குண்டி துடைத்த மலக்காகிதமா வீசுவது .இப்படிஒரு ஒற்றுமை 
இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.நீங்கள் ஒப்புக்
கொள்ளவில்லையென்றால் நீங்களே உண்மையான தேச
பக்தர் என்று சொல்லிக்கொல்லாம்.


இதுல,இந்திய இராணுவத்துக்கு கூடுதலாக ஒரு தகுதியும்
இருக்கிறது.இயற்கை பேரழிவில் தாழ்த்தப்பட்ட,தீண்டப்படாத
மக்கள் இறந்துவிட்டால், அந்த சடலத்தை துாக்க மறுக்கும்
சாதி பார்க்கும்.


ஆங்கிலேயன் இந்தியாவில் ஆண்ட காலத்தில் என்பில்டு 
என்ற துப்பாக்கியில் ஒட்டியிருக்கும்  மாட்டு கொழுப்ப
வாயால் கடித்து எடுக்க வேண்டியிருக்கும்.அந்த மாட்டு
கொழுப்பானது .கீழ்மட்ட மக்களின் உணவாக பயன்படுத்தப்
படுகின்றது என்ற காரணத்தால் ,அவனுக்கு அடிமையாக
வேலை செய்றது இழிவு என்பதை வசதியாக மறைத்து
விட்டு. கொழுப்பை கடிப்பது சாதிய இழுக்குன்னு இந்திய
இராணுவம்  (சிப்பாய்கள்) கலகம் பன்னுகிறது..சாதி சாயத்த
மறைக்க விடுதலை போராட்டம் என்று நாமகரணம்சூட்டி
சாதி வெறியை மறைத்துக் கொண்டது.

இந்திய ஊடகங்களைவிட பொய் சொல்வதிலாகட்டும்
பொய்யை மெய்யாய் புனைவதிலாகட்டும் இந்திய இராணுவம்
பலே கில்லாடி.இதற்கு உதாரணம்.காஷ்மீர்,அசாம்,மிஜோ
போன்ற வட மாநிலங்களே சாட்சிகள். சென்னை தீவுத்திடலில்
ராணுவகுடியிறுப்புக்குள் சிறுவன் சுடப்பட்டதை மறைத்து
எப்படி எப்படியெல்லாம் புளுகுகிறது.என்பதை தெரிந்து
கொள்ளலாம்.

இப்படி சாதிவெறியும்,அதிகார திமிரும்  வசதியும் புகழும்
இருப்பதினால்தான் தமிழ்நாட்டின் சாதிவெறி குலதெய்வம்
உயிரோடு இருந்த காலத்தில். தன்சாதிவெறி குலக் கொழுந்
துகளை இராணுவத்தில் சேருங்கள் என்றார்.அதிகாரத்துக்கு
அதிகாரம்.சாதிப்பற்றுக்கு பற்று. தேசப்பக்திக்கு பக்தியுமாச்சு
நாட்டுக்காக உழைத்தவர்கள் என்ற பேரும்மாச்சு.

இந்திய இராணுவத்திற்கோ,அதன் ஊழியர்களுக்கோ தேசப்
பற்று அல்லது நாட்டுப்பற்று என்ற புண்ணாக்கு எதுவும்
கிடையாது.சீனி என்று எழுதிவைத்து நக்கிப்பார்த்து
ஒருவேளை இனித்தால் தேசப்பற்று இருக்கிறது
என்று நம்பலாம். வரைமுறையற்ற அதிகாரமும்
சலுகைகளும். வேறு வேலைகள் கிடைக்க வழியில்லா
ததாலும் சேர்ந்தவர்கள்தான் பெரும்பகுதி.


உலகத்திலயே. அதிசியத்திலும் அதிசியமாக மக்களை
நேசித்த,மக்களை காத்த,உண்மையான நாட்டுப்பற்று
டனும் நேர்மையுடனும். தோழமையுடனும் நடந்துகாட்டி
தன்சுகபோகத்தை துறந்து மக்களுக்காகவாழ்ந்த ஒரு 
இராணுவம் இருந்ததெனறால் அது சோவியத் மக்கள்
இராணுவம்தான். தன் இன்னுயிரை இழந்து இட்லரின்
கொடுங்கோல் நாஜீப்படையை முற்றாக துடைத்து
ஒழித்த இராணுவம் சோவியத்தின் மக்கள்(செம்படை)
இராணுவம்தான்.மற்ற இராணுவங்கள் அனைத்தும் 
உழைக்கும் மக்களுக்கு எதிரானவைதான்

உலகத்திலயே,ஏழாவதாக வல்லமை பொருந்திய இராணு
வமாக கருதப்படுகிற இந்திய இராணுவத்திற்கும்
இண்டர் போல் போலீசுக்கு இணையாக பேசப்படுகிற
போலீசுக்கும். மனித உரிமை மீறல்களில் இராணுவமா?
போலீசா ?என்று கடும் அதிகார போட்டியே நடைபெறும்

அதில்,நான் பொதுவானவன்.சம்பந்தமில்லாதவன்.பார்வை
யாளன்.நான் போட்டிக்கே வரவில்லை என்று சொல்லி
இனி யாரும் தப்பிடத்துவிடமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்