பக்கங்கள்

Friday, July 15, 2011

கேட்பவன் கேனையனாக இருந்தால்...........கேப்பையில் நெய் வடியும்!

மேற்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக,இந்தியாவில்  வறுமை
வேகமாக குறைந்து வருகிறதாம்.சர்வதேச அளவில் வறுமையில்
இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு
இந்தியாவும். சீனாவும் முக்கிய காரணமாம்.

மக்கள் தொகை அதிகமுள்ள இரு நாடுகளில்  வறுமையில்
இருப்பவர்கள் ஏராளாமாக உள்ளதால் ,இங்கு வறுமையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை குறைவதால்  சர்வதேச அளவிலும்
குறைந்து வருகிறதாம்.

1990லிருந்து  2005ஆம் ஆண்டுகளில் இடைப்பட்ட ஆண்டில்
வறுமையிலிருந்து 45 கோடிபேர் மீண்டுள்ளனராம். 2015ல்
32 கோடி மக்கள் வருமையின் பிடியிருந்து முன்னேறுவார்களாம்.

பசி,பட்டினி,குழந்தைகள் இறப்புவகிதம்,ஊட்டச்சத்து பற்றாக்குறை
ஆகியவை இந்தியாவில் குறைந்து வருகிறதாம். வறுமை ஒழிந்து
வளர்ச்சி ஏற்பட்டு வரும்நிலையில் ஏராளமான மரங்கள் வெட்டப்
பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றதாம்.

சுகாதாரப்பிரச்சினையில் இந்தியா பின்தங்கியுள்ளனவாம்.காச
நோயால் பாதிக்கப்படுபவர்கள 35 சதவீதமாம்.- இப்படியாக
அய்ய்......நா.....என்ற ஊத்தவாயர்கள் நிறைந்த சபை தன்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

முதுகெலும்புள்ள  ஊத்தவாயர்கள்  அறிக்கையின்படி இந்தியாவில்
வறுமை எப்படி ஒழிந்து இருக்கும் என்று  கேள்வியெல்லாம்
இருந்தாலும்., இந்தியா உலக பணக்காரர்கள் வரிசையில் 12 வதாக
வந்ததே.வறுமை  குறைந்தற்கு ஒரு அளவுகோலாக இருக்கலாம்.

உண்மையான,நேர்மையான ஆய்வுகள்  குறிஞசி மலர் மாதிரி 12
வருடத்துக்கு ஒருமுறை மலர்ந்தாலும். அதிலும் முழுகபுசனியை
சோற்றில் மறைக்கும் வேலையாகத்தான் வெளிப்படும்..அது மாதிரி
தான் இந்தியாவில் வறுமை ஒழிகிறது  என்ற அறிக்கையும்

இந்த அய்ய்.......நா.......வின் அறிக்கை .தனியார்மயம்-தாராளமயத்தின்
தாசர்களுக்கும்.புகழ்பாடிகளுக்கும். இந்தியாவில் வறுமையில்
இருப்பவர்களை ஒழித்துகட்டும்  முயற்சியில் அயராது பாடு பட்டு
 வரும்ஒட்டுபொருக்கி ஆட்சியாளர்களுக்கும்  அல்வா சாப்பிட்ட
மாதிரி இருக்கும்..
1 comment :

  1. முழுகபுசனியை
    சோற்றில் மறைக்கும் வேலையாகத்தான் வெளிப்படும்.////உண்மைதான் நண்பரே..

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com