ஞாயிறு 22 2015

அய்ந்தாம் ஆண்டில் வலிப்போக்கன்....


     வலிப்போக்கன்
அய்ந்தாம் ஆண்டில்.


2001ம் ஆண்டில் அச்சுத் தொழிலுக்காக கணணி வாங்கியிருந்தும் தொலைபேசி இணைப்பு பெற்று இருந்தும்  இணைய இணைப்பு பற்றியும் வலைத்தளம், வலைப்பூ, பதிவு, கருத்துரை,மறுமொழிகள், மற்றும் இன்னபிறவைகள் என்னவென்று  தெரிந்திராத,அறிந்திராத ஒரு காலத்தோடு ஓடிக் கொண்டு இருந்த நேரத்தில்...

அச்சுத் தொழிலுக்கு வந்த வாடிக்கையாளர்கள் நண்பர்கள் மூலம், வலைப்பதிவு,வலைத்தளம் இணைய இணைப்பு பற்றிய விபரங்களை தெிந்திருந்தும். இணைய இணைப்பு பயன்பாட்டு கட்டணத்தொகைப் பற்றியும், ஆண் பெண் சேர்ககையின் பச்சையான படங்கள் இணையத்தில் பரவி இருந்ததையும் பற்றி இருந்த பயத்தினால் பயந்து கொண்டு இருந்தபோது, நணபர்களின் பேச்சினால் பயத்தை  ஓரங்கட்டிவிட்டு ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

2011ம் ஆண்டில் மார்ச் மாத துவக்கத்தில் இணைய இணைப்பு பெற்று அதற்க்கான பயன்பாட்டுக் கருவியைப் பெற்று..எல்லாம் தெரிந்த ஏகம்பரமாக கூகுள், தமிழ்மணம், வினவுத்தளம் போன்ற பிரபலமான தளங்களை பார்வையிட்டு சிலவற்றை படித்துவிட்டு கருத்துரை வழங்கத் தெரியாமல் முட்டிமோதி தோல்வியடைந்த நேரத்தில் தமிழ்மணத்தில்  திரு. சசி எழுதிய தமிழில் எழுதலாம் வாங்க - வலைப்பதிவுகள் ஓர் அறிமகம் என்பதை பத்துக்கு பல தடவை படித்தும் பதினோறு தடவை தோல்வியற்று தவித்த வேலையில் பனிரெண்டாவது தடவையாக “ மாவீரர்  பகத்சிங் துாக்கில் ஏற்றப்பட்டநாளான மார்ச்23-ல் வலிப்போக்கன் என்ற எனது வலையை நிறுவி வெற்றி கொண்ட நாள்.23.3.2011.

“வலிப்போக்கன்” வலையை நிறுவிய வெற்றி பெருமிதத்தில்,என்ன எழுதுவதென்று தெரியாமல். சிலது களை எழுதிபார்த்து “ஈ“ ஓட்டிக் கொண்டு இருந்த நேரத்தில்  “உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க” என்ற பதிவை, வழக்கம்போலவே பல தடவைப் படித்து தோற்றுப்போயி விடாமல் முயன்றதன் காரணமாக 29.3.2011-ல் தமிழ்மணத்தில் இணைத்த நாள்

அதிலிருந்து படிப்படியாக தமிழ்வெளி, இண்டலி, பேஸ்புக், இப்படியாக பலவற்றில் இணைத்துக் கொண்டேன்.

பண்ணையடிமைகளாகவே பிறந்து வாழ்ந்து பழக்கப்பட்ட எனது குடும்ப தலை முறை வாழ்நிலையைத் தாண்டி ... பல தடவை பள்ளிக்குச் செல்லாமல் பெயிலாகி ஒரு வழியாக +2 வரை படித்துவிட்டதால். அதற்கு மேல் படிக்க முடியவில்லை.

அந்தப் படிப்பின் மூலமாக கிடைத்த கொஞ்சோன்னு அறிவைக் கொண்டு பல குப்பைகளுடன் சில நல்லவற்றையும், எனது அனுபவத்தையும், படித்தவற்றையும் கேட்டவற்றையும் சேர்த்து  இந்த நான்கு வருடத்தில் மறு பதிவுகளை தவிர்த்து 964 பதிவுகள் வரை பதிவிட்டதில்,  பார்வையாளராக 3,56,252  பார்வையிட்டுள்ளனர். பதிவர்கள் மற்றும் வருகையாளர்களின் கருத்துரைகளாகவும் மறுமொழிகளாகவும் சேரத்து  3535 கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவைகள் எனது தகுதிக்கு மீறியதாக இருக்கிறது என்றாலும் .என்னால் வடிவமைக்கப்பட்ட தளம் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக நான்கு வருடமாக பலரும் புகார் கூறியதால்... சமீபத்தில் படிப்பதற்கேற்ற வகையில் வடிவமைப்பை மாற்றித் தந்த பெருமை திரு. திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களையே சேரும். அவருக்கு இந்த அய்ந்தாவது ஆண்டில் நன்றியினை தெரிவித்துக் கொண்டு

வாழ்த்துவோர்கள் வாழ்த்துங்கள்!! தூற்றுவோர் தூற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு, எந்வித சந்தோசம் இல்லாத இந்த உலகத்தில், இருக்கும் கொஞ்ச காலத்திலும் எனது மனதுக்கு பிடித்த கருத்துக்களை, என் அனுபவங்களை, எனக்கு தெரிந்த சமூக அவலங்களை ,எனக்கு தெரிந்த மொழி வழி நடைகளில் இந்த அய்ந்தாம் வருடத்திலும் தொடருகிறேன்.

எனது வலைக்கு வருகை தந்து, கருத்துரை  வழங்கிய-.வழங்கி வரும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும், மற்றும். அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

வலிப்போக்கன்-


19 கருத்துகள்:

  1. தங்களது தளம் மென்மேலும் வளர்ந்து பல சிறப்புகளைப்பெற்று தமிழ் மணத்தில் முதலிடம் பெற முதல் நபராக வந்து மனதார வாழ்த்துகிறேன் தோழரே.....

    வாழ்க வளமுடன்.
    நண்பன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு


  2. அய்ந்தாம் ஆண்டில் வலிப்போக்கன் பயணம் வெற்றிகரமாகத் தொடர எனது வாழ்த்துகள்.
    எனது ஒத்துழைப்பு எப்போதும் தங்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் தங்களது வாக்கிற்கும் நன்றி! நண்பரே.....

      நீக்கு
  3. நன்றி...

    மிகவும் மகிழ்ச்சி...

    மனதில் நினைப்பதை உண்மையாக சொல்லும் உங்கள் பாங்கு தொடரவும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி!! நண்பரே......

      நீக்கு
  4. சீனியர் வலிப் போக்கனுக்கு ஜூனியர் ஜோக்காளியின் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூனியர் ஜோக்காளியின் வாழ்த்துக்களுக்கு சீனியர் வலிப் போக்கனின் நன்றி!!.. நண்பரே.

      நீக்கு
  5. நாளும் வரட்டும் உங்கள் பதிவு! வளரட்டும் ஆண்டுக் கணக்கு!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. வாசிப்பும் அனுபவம் தருகின்ற அறிவும் ஒரு போதும் கல்வியும் பாட சாலைகளும் தர முடியாதவை.
    உங்களின் வீரியம் மிக்க எழுத்துகளும் அதை விரும்பிப் படித்துத் தம் கருத்துகளைப் பகர்ந்த இத்துணை பேரும் அதற்குச் சாட்சி.
    உங்களைப் போல்தான் நானும் இருந்தேன்.
    இன்னும் தட்டுத் தடுமாறியபடி கற்றுக் கொண்டிருக்கிறேன்.
    தமிழ் வலை உலகிற்குத் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஆற்றும் உதவி மிகப் பெரிது.
    வாழ்த்துகள்.
    தொடருங்கள்.
    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்குக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!!!

      நீக்கு
  7. best wishes, keep continue thanks

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் வழிப்போக்கன்.
    நாங்கள் உங்கள் ரசிகர்கள்.

    நன்றி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! திரு. Alien அவர்களே...........

      நீக்கு
  9. என்னைப்போல ஒருவர் இல்லையா? என்று இருந்தேன், ஆ ஜாலி, உங்களைப் போல் நான், ஆனால் ஒரு திருத்தம் நீங்களே முட்டி மோதி பிளாக் திறந்து விட்டீர்கள். நான் ஒருத்தர் திறந்து கொடுத்தும் இன்னும் தமழ்மணத்தில் இணைய முடியல, னுனு பதிவை படித்தும் பல தடவை முயற்சித்தும் , வாழ்த்துக்கள் தொடர்கிறேன், தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! திரு.mageswari balachandran அவர்களே.........

      நீக்கு
  10. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! திரு. வேக நரி அவர்களே.......,,,,,,,,,,

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்