ஞாயிறு 14 2011

வெற்றிகரமான 65வது ஆண்டாக துரோகத்தினம்

தமிழ்நாட்டிலுள்ள செம்பட்டி வாரச்சந்தையில் விற்கப்படும் ஆடு
விற்பனையில் ,வெள்ளாடுகளை “டை” அடித்து கருப்பு ஆடுகளாக்கி
விற்பனை செய்வது மாதிரி, இந்தியாவில் காந்தியும்-காங்கிரசும்
செய்த துரோகத்தை மறைத்து வெள்ளயனை எதிர்த்து வீரப்போர்
புரிந்து போராடி சுசந்திரம் பெற்றதாக 65 ஆண்டாக புருடா விட்டு
வருகின்றனர் முதலாளிகளும், இவர்களுக்காக ஆளுகின்ற
ஆட்சியளார்களும்,எல்லாவித அயேக்கிய தனங்களும் நிறைந்த
அரசியல் கட்சித் தலைவர்களும்.

இவர்கள் சொல்லிக் கொள்கின்ற சுதந்திரதினத்தில் கூட சுதந்திரமாக
கொடியேற்ற முடியவில்லை.அவர்களே, அவர்களின் சுதந்திரத்தை
சுதந்திரமாக கொண்டாட முடியாத போது, மக்களை மட்டும்
சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட விட்டுவிடுவார்களா?

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்கிற மாதிரி சுதந்திரம்
பெற்றதாக சொல்வோர் அரண்டு போயுள்ளனர். அதனை மறைக்க
இத்தனை பாதுகாப்பு, கெடுபிடிகள்.

சுதந்திர இந்தியாவில்இரண்டாவது காந்தியாக முன்னிருத்தப்படும்
அன்னா கசாரேகூட சுதந்திரம் இல்லையென்று தான் இரண்டாவது
சுதந்திரப்போர்,மூன்றாவது சுதந்திரப்போர் என்று பிதற்றுகிறார்
இது மாதிரி எத்தனை பேர் போர் அடித்தாலும் சுதந்திரம் மட்டும்
கிடைக்கப்போவதில்லை.

ஆயிரம் கட்டுகதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும்
சினிமாவிலும் நாடகங்களிலும்  தொலைகாட்சிகளிலும் சுதந்திரம்
பெற்றதாக கூப்பாடு போட்டு புலம்பி தவித்தாலும் உண்மையில்
சுதந்திரம் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

சுதந்திரத்திற்காக பலர் உண்மையாக தங்கள் இன்னுயிரை பலி
கொடுத்தது வீனர்களாலும் சுய்நல தம்பட்ட தலைவர்களாலும்
வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஆகஸ்டு15 சுதந்திரமில்லை,போலிச்சுதந்திரம் தான். அதிகார
மாற்றம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டி
யதில்லை.65 வருடமாக ஆட்சி செய்தவர்களின் ஒரு சில நட
வடிக்கைகளை நினைவுப்படுத்தி பார்த்தாலே உண்மை புரிந்து
விடும் இது போலிச்சுதந்திரம்தான் என்று.

மக்களை ஏமாற்றுவோரும், அவர்களின் வாரிசுகளும்,ஆண்டை
களும் உயர்அதிகாரிகளும் அவர்களின் பாதந்தாங்கிகளான
பதிதிரிகைகளும் ஒரு பொய்யை  65 வருடமாக விடாமல்
ஒப்பிக்கிறார்கள்.

ஒரு பொய்யை 65 வருடகாலமாக சொன்னால் உண்மையாகி
விடுமாம். அப்படி உணமையாகிவிடும் என்று அவர்கள் நம்பு
கிறார்கள்.

“வளர்க்கிறவனை  நம்பாதாம் ஆடு. ஆறுக்கிறவனைத்தான் நம்பு
மாம். ஏனென்றால் நாளைக்கு அறுக்கப்போகிற ஆட்டுக்கு
நிறைய கீரையும் இலைகளையும் போடுவதைக் கண்டு
ஆடு . நம்பிடுமாம். இதுமாதிரி அறுக்கிரவனை நம்பும் மக்கள்
விழிபபுனர்வு பெரும்வரை....

ஆகஸ்டு15 சுதந்திரத்திரைப்படம் 65 ஆண்டுகழித்தாலும் அரங்கு
நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்

நல்லோர்களே! நேர்மையானவர்களே! உண்மையான தேசப்
பக்தர்களே! சுதந்திரத்துக்காக உழைத்த உழைக்கின்ற உத்தமர்களே!
பகத்சிங்கின் வாரிசுகளே! வெள்ளி விழாக் கண்ட ஆகஸ்டு15 போலி
சுதந்திரத்தினம் செஞ்சூரி அடிப்பதை தடுத்திட ஓரணியில் திரண்டுவீர்.

சுதந்திரத்தினம்! சுதந்திரத்தினம்.என்று வாய்கிழிய கதறுபவர்களே!
உங்களுக்கோர்  கேள்விகள்.

1.காந்தியும்-காங்கிரசும் ஒரு துரோக வரலாறு-பு.மா.இ.மு. வெளி
யீட்டுக்கு சப்பைக்கட்டு கட்டாத உங்கள் பதில் என்ன?

2.காட்ஒப்பந்தம்,அனுசக்தி ஒப்பந்தம்,இரானுவ ஒப்பந்தம் இவை
எல்லாம் யாருக்காக? மக்களுக்காகவா? நாட்டை மீண்டும்
காலனியாக்குவதற்க்காகவா?


உங்களின் மெளனம் கலையட்டும்valipokken.blogspot.com

4 கருத்துகள்:

  1. ஊழலை ஒழிக்க தேவை இன்னும் ஒரு சட்டம் அல்ல, மாறாக மக்களை பற்றி சிந்திக்கும் அரசு.. அப்படி பட்ட அரசு அமைய அனைவரும் ஒரே கருத்துக் களத்தில் நிற்க வேண்டும். அதற்கு இணையத்திலும் இதழ்களிலும் எழுதி விழிப்புணர்வு கொடுங்கள், படித்த உடன் பாராட்டி பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இணையம் பக்கமே வராத ஒரு ஐந்து பேரிடம் இதை பற்றி விவாதம் செய்தால் தான் முழு விழிப்புணர்வு வரும்...

    ஆகையால் ஈவிரக்கமற்றவர்களிடம் சுதந்திரம் வாங்கி இன்னொரு ஈவிரக்கமற்றவர்களிடம் நம் சுதந்திரத்தை அடகு வைத்ததை... மீட்டு எடுப்போம்.. என்று நம் அனைவரின் வாழ்விலும் விடியல் வருகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர நாள்.. அது வரை நாம் கூற வேண்டிய வார்த்தை வந்தே மாதரம் அல்ல...

    இன்குலாப் ஜிந்தாபாத்...
    புரட்சி ஓங்குக...

    http://suryajeeva.blogspot.com/2011/08/blog-post_7200.html

    பதிலளிநீக்கு
  2. நம் அனைவரின் வாழ்விலும் விடியல் வருகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர நாள்.. அது வரை நாம் கூற வேண்டிய வார்த்தை வந்தே மாதரம் அல்ல...

    இன்குலாப் ஜிந்தாபாத்...
    புரட்சி ஓங்குக... உண்மையே!

    இன்குலாப்.....ஜிந்தாபாத்....புரட்சி ஓங்குக!

    பதிலளிநீக்கு
  3. நம் அனைவரின் வாழ்விலும் விடியல் வருகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர நாள்..///
    உண்மைதான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  4. வேடந்தாங்கல் - கருன் அவர்களே! தாங்கள் பின் தொடரும் எல்லா பதிவுகளையும் படித்து அதஅதற்கு பின்னுாட்டம் விட்டு தங்கள் வலைப்பதிவில் புதிய இடுகையிட்டு,வாத்தியார் பணியையும் செய்துகிட்டு சொந்த பந்தங்களின் அலுவல்களையும் செய்துகிட்டு எனக்கும் கருத்துரை வழங்குவதற்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....