சனி 06 2011

ஜால்ரா (தின)மணியின் மக்கள் கருத்தாம்பா??

தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை என்ற  தமிழக அரசின் விளக்கம்
என்ற நேற்றைய கேள்விக்கு

உண்மை----------------53.86./.
அரசியல்----------------43.09./.
கருத்து இல்லை------ 3.05./.--ஆகவும் கருத்து பதிவானதாம்பா?

அப்போ,தமிழ்நாட்டுல சமச்சீர் கல்வியை அமுல்படுத்து,சமச்சீர் புத்தகத்தை
வழங்குன்னு சிறிரங்கத்து ரங்கநாயகியின் போலிசிடம் அடி வாங்கி சிறை
சென்று போராடினவங்கெல்லாம் கேனையர்களாக்கும்

சமச்சீர் புத்தகத்தை வழங்கு,வழங்குன்னு உயர்நீதி மன்றமும் உச்ச நீதி
மன்றமும் உத்திரவு போட்டதெல்லாம் கிறுக்குதனமாக்கும்.

சமச்சீர் கல்வியை பாடுபட்டு ஆராய்ந்து கொண்டுவந்த கல்வியாளர்களெல்லாம்
மடையர்களாக்கும்.

எந்த நீதிக்கும்,சட்டத்துக்கும் அடங்காத,கீழ்படியாத இம்சை அரசியும் நீங்களும்
அதிபுத்திசாலிகளாக்கும். நல்லாயிருக்குப்பா உங்க ஞாயம்.

சோழியன் குடுமி சும்மாவும் ஆடாது.
நாயின் வாலையும் நிமிர்த்த முடியாது.

இதுக்கு ஒரே வழி. சோழியனுக்கு முடி வளராத மொட்டையும்
நாயின் வாலை கட்டிங்  பண்ணினாதானப்பா சாரிப்படும். எல்லாம் உருப்படும். 

10 கருத்துகள்:

  1. அப்போ,தமிழ்நாட்டுல சமச்சீர் கல்வியை அமுல்படுத்து,சமச்சீர் புத்தகத்தை
    வழுங்குன்னு சிறிரங்கத்து ரங்கநாயகியின் போலிசிடம் அடி வாங்கி சிறை
    சென்று போராடினவங்கெல்லாம் கேனையர்களாக்கும்


    உண்மை.... அப்படித்தான் அ..ம்..மா நினைக்கிறாங்க. ஓட்டுப்போட்ட மக்கள் யோசிக்கனும்

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்லறது முற்றிலும் உண்மை..

    பதிலளிநீக்கு
  3. அது ஆன்லைன் கருத்துக்கணிப்பாக இருந்தால் எந்த மாதிரி ஆசாமிகள்,எத்தனை பேர் வாக்களித்திருப்பார்கள் என்பதை விபரமறிந்தவர்கள் பார்த்தால் சிரிப்பார்கள்.படிக்கிறவன் கேணையா இருந்தா இவங்க என்னவெல்லாமும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா,அவர்களே! தங்கள் பெயரைச்சொன்ன குத்தமாக்கும்

    பதிலளிநீக்கு
  5. சித்ரவேல் - சித்திரன் அவர்களே! மக்கள் எந்த காலத்தில் யோசித்தார்கள்.யோசிக்கவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  6. !* வேடந்தாங்கல் - கருன் அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. R.Elan. அவர்களுக்கு.தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஓட்டு போட்ட தமிழ்நாடு மக்களுக்கு இட்துவும் வேணும் இன்னமும் வென்னும்

    பதிலளிநீக்கு
  9. williamscottman அவர்களே!எல்லாம் தெரிந்த படிச்சவங்களே!ஏமாறும்
    போது படிக்காத பாமரர்களை குற்றம் சொல்லாமா?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்