ஞாயிறு 04 2011
அவர் சொன்னார்..................இவர் சொன்னார்!!!
அவர் சொன்னார்.
நீ குடியிருக்கிற வீட்டுக்காக முப்பது வருஷமா கோர்ட்டுக்கும்,
கலெக்டர் ஆபிஸிக்கும், விடாம அலைஞ்சும்,சலிக்காம மனு
கொடுத்தும்,விடாம கொடுத்தும் பலன் ஒன்னுமில்லேன்னு
சோர்ந்து போயிடாத தம்பி,
எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதை மட்டும் மறக்காத,
வழக்கு போட்டவன் செத்தபிறகும் அவன் மகன்கள வழக்க
நடத்தலியா,இவன்களும் உனக்கு தீர்ப்பாகிட்டா விட்டுறவ
செய்வானுக,அப்பீல் பன்னுவாங்கே,அப்புறம் புதுசா எதையா
வது கண்டுபிடுச்சு திரும்பவும் வழக்கு போடுவாங்கே,
கோர்ட்டு தீர்ப்பு எப்போ சொல்லுதோ அப்போ சொல்லட்டும்
இடையில் நான் சொல்லுறத கொஞ்சம் காதுல வாங்கிக்க.
இப்ப வந்திருக்கிற கலெக்ட்டரு ரெம்ப நல்ல மனுசன்னு
சொல்றாங்க,மத்தவங்க மாதிரியில்லயாம்,நேர்மையான
வராம்,பிறர் காசுக்கும் சொத்துக்கும் ஆசைபடாதவராம்
அநியாயத்தை அவரளவுக்கு தட்டி கேட்பாராம்.இவரு
மாதிரித்தான் எஸ்.பியுமாம்.
ஒரு சாதிப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தாராம்.இவரு
அப்போ, இருந்திருந்தா “மேலவளவு”சம்பவத்தையே
தடுத்திருப்பாருன்னு சொல்லிகிறாங்க,இப்படிபட்ட ஒருசில
நல்லவர்களின் தயவுகளில்தாண்டா எந்தக் கட்சி ஆளுதோ
அந்தக்கட்சிக்கு நல்லபேரு கிடைக்குது.
உன் தெருவுக்காரனுங்க ,உன் சாதிக்காரனா இருந்தாலும்
உனக்கு பலவித தொல்லையும்,இடைஞ்சலும் செஞ்சாலும்
அவிங்களும் ஆதிக்க சாதி வாரிசுகள்தாண்டா? மேல்சாதிக்காரன்
கீழ்சாதிக்காரன அடக்கி ஒடுக்குவது மாதிரி சொந்த சாதிக்
காரர்களில் ஆளபலமுள்ளவன் ஆளபலமில்லாதவர்னை
ஒடுக்குவதுதாண்டா இங்கு நீதி. உனக்காக உன் தெருக்காரனிடம்
ஞாயம் பேச வந்தால் கட்டுப்படமாட்டார்கள். அப்புறம் என்மீது
சாதிய சொல்லி திட்டினாருன்னு பொய்ப்புகார் கொடுப்பானுக,
உண்மையிலே,சாதிய சொல்லி திட்டுறவன விட்டிடுவானுக.
அவனோட.காசு பணத்துக்கும்.ஆள்பலத்துக்கும் பயந்துதிடுவானுக!
நல்லா கவணி, படித்தவுடன் புரியிறமாதிரி மனுவை தயார்
பன்னு.அதற்குரிய சான்றுகளை நகல் எடுத்து இனை.ஒருதடவைக்கு
இருதடவை படிச்சு பாரு. கேட்டா சொல்லத் தெரியனும்.மனுவில
கையெழுத்த ஆங்கிலத்துல போடாத... தமிழ்லயே போடு. இப்படித்தான்
ஆங்கிலத்துல கையெழுத்து போட்டவர ஜம்பது தடவை தமிழ்ல
எழுதச்சொன்னாராம்.வம்பு எதற்கு தமிழ்லயே கையெழுத்தப்போடு.
திங்கட்கிழம.வெள்ளனா போயிடு,கலெகட்டரா பார்த்து மனுவை
கொடுத்திரு. கலெகட்டரு ரெம்ப நல்லவருப்பா? முதியோர்
பென்சன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தினதுமே,கூட்டத்த பார்க்கனுமே
அப்படியிருந்தும் ரெம்பப் பொறுமையாக இரவு ஏழு மணிவரை
மனுவை வாங்கியிருக்காருய்யா!
கிராம நாட்டாமைய பார்க்கப்போனா,காசில்லாம போகமுடியுமா?
சும்மா அடிக்கிற காத்துலகூட பேப்பர் ஆடாது.
ஏழைகள் குடும்பத்திலிருந்து எவ்வளவோ பேர் அதிகாரிகளா
இருக்காங்க,எல்லா அதிகாரிகளும் நேர்மையாகவும்.ஏழைகள்
மீது இரக்கப்படுகிறவங்களா இருக்காங்க, ஏதோ ஒண்றிரண்டு
அதிகாரிகளால்தான் ஏழைகளின் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்
குது.,
இவர் சொன்னார்.
ஆமடா, அவரு சொல்ற மாதிரிதான். சொல்றாங்க, ஆனா ஓம்
பிரச்சனைக்கு கலெக்ட்ரு தலையிடமாட்டாரு, ஓங்கிட்ட மனுவை
வாங்குவாரு. குறைகளை கேட்பாரு, ஆனா நிறைவேறாது.
மனு தாலுகா ஆபிஸ்க்கு போயிரும். மனு கொடுக்கயில கொடுத்த
ஒப்புகை சீட்டின் தேதி பிறகாரம் போனின்னா,தாசில்தார பாக்க
முடியாது. எந்த அதிகாரிய பாக்கனும்னு கேட்டா “நானில்லங்க
அவர பாருங்கன்னு சொல்லுவாங்க, அப்படியும் விடாம கண்டு
பிடிச்சு போனா அவரு சீட்டு காலியா இருக்கும். எங்கன்னு நீ
கேட்டா,அன்பா,நான் என்ன பையிலையா வச்சுருக்கேன் னு
சொல்வாங்க,சிலர் தெரியலங்க என்பார்கள். பியுன்கிட்ட
கேட்டா ,ஏன்கிட்ட சொல்லிட்டு போகல என்பாரு... இப்படியும
சோர்வில்லாம கண்டுபிடுச்சு
அந்த அதிகாரிட்ட போனா .....மனுவ் தேடுவாரு
அவரு மேஜை மேல அவ்வளவு குவிஞ்சு கிடக்கும். மனு
கிடைக்காது. மனு விவரத்தை வாயில சொல்லச் சொல்வாரு
கரெட்டா சொல்லிடின்னா,அடுத்தவங்க கிட்ட என்ன செய்யலாம்
னு யோசனை கேட்பாரு!...கரெட்டா சொல்லலைன்னு வச்சுக்க
போயிட்டு அடுத்த வாரம் வாங்கன்னு சொல்லுவாரு.அடுத்த
வாரம் போனின்னா,வி.ஏ.ஓ பாருங்கன்னு சொல்லுவாரு.வி,ஏ.ஓ
பாத்தின்னா,உன் மனு வரலன்னுவாரு......... திரும்ப தாலுகா
ஆபிஸ்........இப்படியே அலைய வேண்டியதுதான்.
இப்படித்தான்டா நான் அலஞ்சுகிட்டு இருக்கேன்.
ஆமாடா,ஊருபய இடத்தை ஊருபய புடுங்கிகிட்டானுன்னு நில
பறிப்பு வழக்கு கூத்து நடக்குதே, உன் இடத்தை பொது இடமா
கெச்சல மாத்தின டவுன் சர்வேயரை எதிர்த்து புகார் கொடுக்க
வேண்டியதுதானேடா?
எதுக்கும் அவர் சொன்னதை செய்துகிட்டு பிறகு இவர்
சொன்னதை செய்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
-
நிவாரணம் -கருணையினால் அல்ல.. ஒட்டுக்காக படம்- tamil.thehindu.com படம்- www.seithy.com படம்-- www.dinamani.com ...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
ஒரு அனுபவ குறிப்பு............
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
அவர் இவர் கிட்ட எதை பற்றி எங்க சொன்னார்?
பதிலளிநீக்குஒன்னும் பிரியல நைனா பிரியரவங்களுக்கு பிரிஞ்சா போதும்னா உட்டுக்கிநியா?
அவரு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சொல்லுறாரு.
பதிலளிநீக்குஇவரு,மனு கொடு நாயா அலைய விடுவாங்க,தயாரா
இருன்னு சொல்லுறாரு.
எனக்கு புரிஞ்சு போச்சு.ஆட்சியரிடம் மனுவ கொடுத்துட்டு வந்துட்டேன்