வியாழன் 01 2011

பாதுகாப்பா இருந்தாரு? பாதுகாப்பா இருக்காரு.......!

வந்துங்க,அது உயர்தரமான காது,மூக்கு தொண்டைக்கான மருத்துவ மனைங்க,அவருடைய காது கேளாத குறைபாட்டை தீர்க்கவேண்டும் என்ற ஆசையில்அந்த மருத்துவ மனைக்கு போனாருங்க.

மருத்தவமனையின் முன் தோற்றமே,சினிமாவில வர்ரமாதிரி இருந்துச் சுங்க,இதுவரைக்கும் அவரு எந்த ஆஸ்பத்திரிக்கும் போன தில்லைங்க,ஓமியோபதிவைத்தியம் பார்த்ததுகூட ,அவரு வேலை செய்த நிறுவன்த்தின் ஓனரு,ஓமியோபதி வைத்தியத்தை அறிமுகப்படுத் தினாருங்க,அதோடு ஓமியோபதியை பரப்பும் சங்கத்தில் ஓனரு,தலைவராக இருந்ததினால் ஓமியோபதி வைத்தியம்அவருக்கு பரிச்சயமானதுங்க,

இருக்க,இருக்க, அவருக்கு கேட்கும் திறன் குறைந்ததினாலும், ஓமியோபதியில் மருந்து சாப்பிட்டும் பலன் ஒன்னும் கிடைககலிங்க, அவருடன்  நடுநிலைப்பள்ளியில் படித்த நண்பரின் அனுபவத்தின் பேரில் அந்த மருத்துவ மனைக்கு போனாருங்க,

வாசல பக்கம் போககையில நிறைய செருப்பா கெடந்துச்சுங்க,அதுகளோட  தன்னுடைய பிஞ்ச செருப்ப போடாமா தனியா போட்டாருங்க,ஏன்னுகேட்டா, உயர்வகை செருப்போட பிஞ்ச செருப்பு கிடந்த யாராவது ஒரு சீமான் துாக்கி வீசிவிடுவாங்களாம். போனா போகட்டுமே என்றால் அடுத்தச் செருப்பு வாங்குற வரைக்கும் வேணுமில்லன்னு சொன்னாரு.

உள்ளே போனதும் ,வேலை பார்ப்பவர்கள் அனைவரும் பெண்களாக இருந்தனர்  ஒரே சீரடையில் இருந்தனர்.ஒருசில பெண்கள் அவருடைய  நிறத்தில் இருந்தனர்.அவரைவிட அழகாய் இருந்தனர்.

வரவேற்ப்பறையை நெருங்கி காதை காட்டினார்.வரவேற்பறைப் பெண்
மெல்லிய குரலில் ஒப்பித்தது.அந்தப்பெண் ஒப்பித்தது அவருக்கு கேட்கவில்லை.உடனே,ஒரு கையால் காதை பிடித்துக்கொண்டு. வலது  கையால் வால்யும் ஏற்றிச் சொல்லுங்கள் என்று சைகை
செய்தார்.

பக்கத்தில் நின்ற இன்னொரு பெண் சிரித்துக்கொண்டே,கன்சல்பீஸ் இரு நுாறு ரூபா,மருந்து, மாத்திரைக்கு தனி என்று ஒப்பித்தார்.

எனக்கு, மருந்து,மாத்திரையெல்லாம் வேண்டாம்ப்பா?செக்கப்பன்னி என்ன  கோளாறுன்னு  சொன்னா போதும்பா? என்றார்.

இருநுாறு பணத்தை கட்டி பதிவு செய்து உட்கார இடமில்லாமல் எல்.சி டிவியை பாரத்தபடி நின்று கொண்டு இருந்தார். நீண்டநேரத்துக்குப்பிறகு அவர்முறை வந்தது.

டாக்டர் அறைக்குள் உள்ளே நுழைந்தார், டாக்டரும் அழகாகத்தான் இருந்தார். டாகடருக்கு உயரம் கம்மி. டாகடர் வாயில் துணியை கட்டியிருந்தார் டாக்டர் வாயில் துணியை கட்டியிருந்ததைப் பார்த்ததுமே, இவருக்கு “பகிரென்று இருந்தது. சும்மாவே,டாக்டருங்க பேசுவது கேட்காது.இதுல, இவரு துணியக் கட்டிகிட்டு பேசினா சுத்தமா நமக்கு கேட்காதே ,நிணைத்து கொண்டு இருக்கும்
போது ஸ்டூலில் அமரும்படி சைகையால் பணித்தார்.

பராவாயில்லை,தப்பித்தோம்.நிணைத்த சிறிது நேரத்தில் டாக்டர் எதோ சொன்னார்.

குறைபாட்டைதான் கேட்கிறார் என்று தன்னுடைய குறைபாட்டை கூறினார்

டாக்டர்,அவருடைய குறையை கேட்விட்டு,ஏததோ,சொன்னார், துணிக்குள் மூடியிருந்த வாய் அசைவும், டாகடர் பேசும் சத்தமும் கேட்டது ஒழியசொன்னது ஒன்றுமே அவருக்கு கேட்கவில்லை. சிலதுக்கு சும்மா தலையை ஆட்டினாரே தவிர, டாக்டர் என்ன சொல்கிறார்,என்ன சொன்னார் என்று ஒன்றும் தெரியவில்லை.

சிறிது தயக்கத்துடன்,வலது கையை கெஞ்சுவது போல் நீட்டி,சார், வாயில் துணியில்லாம,பேசினாலே, எனக்கு கேட்காது, நீங்க வேற வாயில துணியகட்டி கட்டிகிட்டு பேசினா எனக்கு எப்படி சார்,கேக்கும். என்னுடைய வாயிலிருந்து எச்சில் தெரிக்காது சார்,உங்க திருப்திக்காக எச்சில் தெரிக்காம பேசிறேன் சார்,என்றார்

சிறிது நேரம் டாக்டர் அமைதியாக இருந்துவிட்டு,லெட்டர் பேடில் மாத்திரைய எழுதிக்கொடுத்தார்.அவரு மருந்துசீட்டை வாங்காமல்,

மாத்திரையெல்லாம் வேண்டாம், டெஸ்ட் பண்ணி என்ன கோளாறுன்னு
சொன்னா, போதும் சார்,அப்பிடித்தான் சார்,ரிசப்பசன்ல்ல இருக்கிற பொண்ணு கிட்ட சொன்னேன்.என்றார்

மெதல்ல மாத்திரையை சாப்பிட்டு வாங்க,அப்புறம் டெஸ்ட் பண்ணலாம்
என்றார்.

ஏன்?சார், இப்ப பன்னமுடியாதுங்களா? அவர்.

ஏய்ய........ சொன்னா,கேளுங்கய்யா? பெரிய இவரு மாதிரி.........
மேஜையிலிருந்த காலிங் பெல்லை அழுத்தினார்.பாடிகாட் மாதிரி
இரு ஆட்கள் வந்தனர்

வந்தவர்கள்,அவரிடம். மாத்திரையை சாப்பிட்டு வாங்க,அப்புறம் டெஸ்ட் பண்ணிக்கிலாம் என்றனர்.

அப்புறம் வந்தாலும் இருநுாறு பீஸ் கட்டனுமா?

ஆமாமம், என்றபடி உடகார்ந்து இருந்த அவரின் தோள்பட்டையில் கையை  வைத்து இழுத்தார் ஒருவர்.


புரிந்துகொண்ட அவரு.தோள்பட்டையில் கை விழுந்தததுமே, வேண்டாமய்யா, உஙகளுக்கு சிரமம் கொடுக்கலைய்யா, நானே போயிறேன்.என்றுவிட்டு வெளியே வந்தார்.

வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் ”என்னம்மா, டெஸ்ட்க்கு தானம்மா?பணம் கட்டினேன். உங்க டாக்டரு மாத்திரையை கொடுக்குறார்ம்மா? என்றார்

அந்தப்பெண்,வேலையில் முழ்கியிருப்பது மாதிரி வேறு இடத்திற்கு நகன்றது.

அவருடைய முதல் அனுபவமே,மோசமாக இருந்தது. பள்ளியில் படித்த நண்பரிடம் சொன்னபோது கேட்டு கேட்டு சிரித்தார்.பிறகு டாக்டரின் ஒருசில குறைகளைச் சொன்னார்

மற்ற டாக்டரிடம் செல்ல மனதில்லாமல் இவரைப்போன்று குறை பாடுள்ளவர்கள் சொன்ன அக்குடச்சு பயிற்சியை விடாமல் செய்து கொண்டு காலத்தை கடத்தி வந்தார்.

ஒருநாள்,செய்திப் பேப்பரில் டாக்டரின் படத்தைப்போட்டு. வெளி நாட்டிலுள்ள ஒருவரின் மனைவியை மிரட்டி,மருத்துவமனையை அபகரித்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக இருந்ததது.

அடடா, டாக்டரு ரெம்ப பாதுகாப்பா இருந்தாரு!!இப்ப பாதுகாப்பா இருக்காரு??? என்று சிரித்துக் கொண்டு சொன்னார்

8 கருத்துகள்:

  1. எவ்வளவோ நல்ல அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், ஈடுபாட்டுடன் வேலை செய்யாத பல மருத்துவர்களால், மக்கள் இது போல் தனியாரின் கோரப் பிடியில் சிக்கி தவிப்பது வாடிக்கையாகி விட்டது.. [உங்க கதா நாயகன் இன்னும் அரசு மருத்துவ காப்பீட்டில் இணையவில்லை போலிருக்கிறது...]

    பதிலளிநீக்கு
  2. மெய்யாலுமே நடந்த கதை போலிருக்கிறது, எந்த ஊர்னு சொன்னா அந்த ஊர்க்காரர்கள் ஜாக்கிரதையா இருக்க உதவியா இருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. பஞ்சாக இருக்குங்களா நன்றிங்க!சாமி.

    பதிலளிநீக்கு
  4. என் கதநாயகன் கலைஞர் காப்பீட்டுல இருந்தாரு,கார்ட
    பத்திரமா வச்சுகுங்கன்னு சொல்லட்டாங்க,அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே,காப்பீட்டு கார்ட குப்பையில
    போடச் சொல்லிட்டாங்க.சார்.

    பதிலளிநீக்கு
  5. நான் எழுதும் கதைகளில் எதுவும் கற்பனை கிடையாதுங்க! உள்ளதுஉள்ளபடிங்க.இப்ப எந்த ஊர்க்காரங்கதான் ஜாக்கிரதையாக இருக்காங்க சார்.எல்லாம் விவரம் தெரிஞ்சவங்களே,தகிடுதத்தம்
    போடுறாங்க.

    பதிலளிநீக்கு
  6. பேரிலயே வலிபோக்குறீங்க!எங்கேன்னு ஊரையாச்சும் சொன்னா சுதாரிச்சுவாங்க,இல்ல?

    பதிலளிநீக்கு
  7. டாக்டரு,போலி டாகடருன்னு நிணச்சு கேட்கிறீங்கன்னு
    நிணைக்கிறேன்.டாக்டரு அரசாங்க ஆஸ்பத்திரியில வேல பார்க்குறாருங்க.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...