பக்கங்கள்

Saturday, September 24, 2011

மேளமில்லாம...தாளமில்லாம.....தமிழக உள்ளாட்சி தேர்தல் கூத்துகள்

அய்யா,ராமதாசு ஒரு உருது மொழியை அதாவது
உறுதி மொழியை வெளியிட்டார். இனிமேல் திமுக
,அதிமுகவுடனோ ஒருக்காலும் கூட்டணி இல்லை
தமிழ் இன மான உணர்வு உள்ளவர்களுடன்தான்
கூட்டணி.இதில் தமிழ் இன.மான உணர்வுள்ள
விடுதலை சீறுத்தைகள் கூட்டணிக்கு வந்தால்
ஏற்றுக் கொல்வோம். அதுவும் வராவிட்டால் தனித்
தே போட்டியிடுவோம். எங்களைப்போல் தமிழகத்தில்
தனித்து போட்டியிட தமிழகத்து கட்சிகளுக்கு தை..தை
தகிரியம்உண்டா? என்று கேட்டுவிட்டு அந்தத் தகிரி
யத்துடன் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை
வெளியிட்டார்.

குடிகாரன் பேச்சு,விடிந்தால் போச்சு.என்றகதையாக
சிறிது நாட்கள் அய்யாவின் தண்டவாளம் தெரியும்
அதுவரை பொருத்தருள்க.

ஏற்கனவே,அய்யா அதிமுகவோட எந்தக்காலத்திலும்
கூட்டணி வைக்க மாட்டேன் என்று சத்தியமடித்து
சொன்னதை அய்யாவு சொன்ன கதையாக மறந்து
விட்டுடனும்.

பெரியாரின் தொப்பள் கொடி உறவு காங்கிரசு இளங்கோ
செத்தாலும் திமுக வுக்கு எதிராகத்தான் பேசுவார்.என்ப
தாலும்,சென்ற சட்டசபை தேர்தலில் அதிக சீட் கேட்டு
கழுத்தறுப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும்
ஆத்தாவின் நிலப்பறிப்பு வழக்கிலிருந்து தற்காத்து
கொள்வதற்கும் தனித்தே போட்டியிட வேட்பாளரின்
பட்டியலை வெளியிட்டு.ஆத்தாவின் போலீசுக்கு பயந்து
ஓடிஒளிந்து முடங்கி கிடந்த தம்பிகளை உள்ளா ஆடசி
தேர்தலை பயன்படுத்தி கொள்ள வேண்மென்று அருமை
தம்பிகளை உசுப்பேற்றியுள்ளார்

அண்ணனின் தனித்த அறிவிப்பால் இந்தியாவின் தலை
நகரமான வாசிங்டனில் உலகம் சுற்றும் தேசத்துரோகிகளின்
காங்கிரசும் தனித்தே போட்டியிடுகிறது.

ஊரு ஊராக அலையும் அரசீயல் அனாதை புரட்சிபுயலும்
கொள்கை முழக்கத் சத்தத்தோடு உள்ளாட்சியாலாவது
தனித்து வர உள்ளே வர முயலுகிறார்.

எமஜியாரின் ரெங்கநாயகியோ,நோண்டாமல் நோகமால்
கிடைத்த சட்டசபை புதையல் மாதிரி உள்ளாட்சி புதைய
லும் தமக்கே என்று மமதையில். தேசிய முற்போக்கு
மேடடூரில் மேட்டூர் அணை இருக்கிறது.என்பது மாதிரி
புகழ்மாலை சூட்டினாலும் பிற்போக்காகி கழட்டிவிட்டு
தனக்கு சுக்கிரதிசை நிகழ்வதால் தனித்தே குதித்து
விட்டது.

அகில இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நாளும்
புரடசி தலைவிக்கு புகழ் மாலை சூட்டிபுரட்சி செய்து
ஓய்ந்துவிட்ட இடது வலதுகள் அவர்களின் சித்தாந்த
சித்துகளின்படி தாயின் காலடி மண்ணே! புரட்சியின்
தளம் என்று முடிவெடுத்தாலும் பாமக திமுக மதிமுக
தேமுதிக காங்கிரசு எல்லாம் தனித்தனியாக களத்தில்
நிற்பதால் புரட்சி வெற்றிடையாதே! என்று முழிக்கின்
றன.

இருந்தாலும் செயல் தந்திர நடைமுறைப்படி முடிந்த
வரை புரட்சி தலைவியின் காலடி மண்ணே! முடியா
விட்டால் கொள்கை முழக்கம் பின்னே என்று காத்து
கொண்டு இருக்கிறார்கள்

இப்படியாக, இதிலே சொன்னவர்களும். சொல்லாத
வர்களும் சேர்ந்து வீரமான,விவேகமான கொள்ளை
முழக்கத்தோடு புதிய ரகரகமான பிச்சை பாத்திரத்
தோடு பிச்சை கேட்டு ஊர்ஊராக,தெருத்தெருவாக
வரப்போகிறார்கள்

இப்படி பிச்சை கேட்டு வரும் பிச்சை காரர்களுக்கு
ஏகப்பட்ட கன்டிஷன் போடுவதோடு வாக்கு பிச்சை
போடும் வாக்குஆள குடிமக்களுக்கும் பிச்சை போட
ாமல் இருக்கக்கூடாதுன்னும் உத்திரவு போடுகி
றது தேர்தல் ஆனையம்

ஆக,நம்பிக்கையாலும்,பயமுறுத்துததாலும்,இரக்கப்
படுவதாலும் பிச்சையிடுவதால்(ஓட்டு போடுவதால்)
ஏழ்மை,விலைவாசிஉயர்வு, வேலைவாய்ப்பின்மை
போன்ற அநியாகங்களும்.பாவங்களும் தொலைந்து
நிம்மதி,மோட்சம்,சந்தோசம் எதுவும் வந்துவிடப்போ
வதில்லை. வாக்கஆளும் மக்களுக்கு ஏமாற்றமே
கிடைக்கும்.அறிவில தெளிவு பெற்று விழிப்படைந்து
புறக்கணிக்கிறவரைக்கும் .இந்த கூத்துக்கள் புதுப்புது
உத்திகளுடன தொடர்ந்து அய்ந்து வருடத்துக்கு ஒரு
வாட்டி வந்து கொண்டுதான் இருக்கும்

8 comments :

 1. நண்பர் வலிபோக்கன் தொடர்ந்து எழுதுங்க வாசிப்போம் பின்னோட்டம்மிடவில்லை என்பதிற்காக வாசிகவில்லை என்று முடிவு செய்ய வேண்டாம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அய்யா வலிப்போக்கன் வார்த்தைகளை சில இடங்களில் பிரித்து போட்டு நையாண்டி கச்சேரியே ந்டத்தியிருக்கிறீர்கள்.சிரிப்பு தாளவில்லை பதிவு படிக்கும்போது.போட்டு ந்ல்லா தாக்கியிருக்கீங்க,சந்தர்ப்பவாத அரசியல் சனியன்களை.நன்றி,நன்றி.

  ReplyDelete
 3. பெயரில்லா சொன்னதுக்கு ஆகட்டும் நண்பரே!

  ReplyDelete
 4. R.Elan. சொன்னதுக்கு -நல்லதுங்க அய்யா,இப்படியாவது சிரித்து தங்கள் ஆயுள் கூடட்டும் அய்யா!

  ReplyDelete
 5. பேசாம இந்த ஒட்டுண்ணிகள் இடது சாரி என்று தனியாக இல்லாமல் அ.தி.மு.க வில் இனைஞ்சுடலாமே... என் ஓட்டு 49 ஓ ன்னு முடிவு பண்ணிட்டேன்.. என்ன ஆட்டோ வரும்னு சென்னை பித்தன் மிரட்டுறார்... ரௌத்திரம் பழகுவோம்னு சொல்லிட்டேன்

  ReplyDelete
 6. suryajeeva சொன்னது…க்கு அதிமுகவில இனைவதற்கு
  நல்ல நேரம் வரலிங்க,49 யே வேஸ்ட்டுங்க

  ReplyDelete
 7. இப்படி பிச்சை கேட்டு வரும் பிச்சை காரர்களுக்கு
  ஏகப்பட்ட கன்டிஷன் போடுவதோடு வாக்கு பிச்சை
  போடும்// கலக்கலான வார்த்தை பிரயோகம்..

  அசத்தல் சகோ..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com