பக்கங்கள்

Thursday, September 29, 2011

ஆறறிவு இருந்தே ஒன்னும் முடியலையாம். ஏழாம் அறிவு வந்து தலை நிமிர வைக்குமாம்......

சிறு பிள்ளைகளாய் விளையாடிக் கொணடியிறருந்த
ஒரு காலத்தில் வீட்டில் அம்மா கூப்பிட்டாலும்
பதில் கொடுக்காமல் விளையாட்டில் ஆர்வமாய்
இருந்த நேரத்தில் ஒரு வயதானவர் வந்து ”டேய
என்னங்கடா இன்னுமா விளையாடிகிட்டு இருக்கீங்
க.எனக் கேட்டு பிறகு ஒரு குண்டை போடுவார்.
கேப்பையில நெய்யி வடியுதுன்னு அவனவன் சட்டி
முட்டியில புடிச்சுகிட்டு இருக்காங்கே”போங்கடா
தீரப்போகுது.விளையாட்ட நிப்பாட்டிட்டு ஓடுங்கடா
என்பார்.

கேப்பையில் நெய் வடிவதை போசுக்குன்னு சொல்லி
விட்டு மற்றவற்றைக்கு அழுத்தம் அதிகம் கொடுத்து
கேலியை வெளிக்காட்டாமல் உண்மையாக நெய்
வடிந்து சனங்கள் எல்லாம் அள்ளிக்கிட்டு போறது
மாதிரியே சொல்வார்.

அதுமாதிரி இருக்குதப்பா ஏழாம் அறிவபத்தி அதன்
நாயகன் சொல்லுறது. ஆறாம் நுாற்றாண்டில் தமி
ழகத்தை சேர்ந்த போதிதர்மன் என்பவர் சீனா சென்று
தற்காப்புகலைகளை பரப்பி உலகத்துக்கே கடவுளா
யிட்டராம்.அப்படிபட்ட வரலாற்று கடவுளான நாயக
னைக்கொண்டுதமிழர்களின் கலை,பண்பாடு,கலாச்
சாரம் முதலியவை எப்படி இருந்தது என்று படம்
புடுச்சு சொல்லுகிறார்களாம்.

எந்தத் தமிழரிடம் சொல்லப் போகிறார்கள் என்று பார்த்
தால்,முன்னேறிய நாடுகளின் கலாசாரத்தில் முழ்கிக்
கிடக்கும் தமிழர்களிடம் சொல்லப்போகிறார்களாம்

உன்னதமான கலாச்சாரம் சினிமா கலாச்சாரம் தான்னு
என்று உணர்ந்து நிமிர முடியாமல் தலை குணிந்து
கிடக்கும் ஒவ்வொரு தமிழனையும் தமிழரையும் தலை
நிமிர வைக்கும் படமாக இருக்குமாம்.

படம் வந்து பார்க்கிறவங்கதான் சொல்லனும் தலை
நிமிர்ந்து பாத்தாங்களா? தலை நிமிர்ந்து பாத்தாங்க
ளான்னு?

இப்படி ஒவ்வொரு பட இயக்குநர்றும், நடிகரும் விதைய
விதைச்சுகிட்டே போகவேண்டியதுதான். விதை முளைச்
சாலென்ன,முளைக்காம இருந்தாலென்ன, அவர்களுக்கு
என்ன? அவர்களுக்கு ஏழு அறிவு மட்டுமா இருக்குது.
அதையும் தாண்டியில்ல ..............................இருக்குது.

(ஏலேய்,கேப்பையில நெய்யி வடியுதுன்னு சொன்னா
கேட்டவனுக்கு புத்தி எங்கல்ல போச்சு?????

7ம் அறிவு பார்க்க போயிருக்கில்லே!!!!!!)

6 comments :

 1. நான் படம் பார்க்கவில்லை... என்னை பொறுத்தவரை தற்காப்பு கலை என்பது ரௌத்திரம் பழகுதல். தற்காப்பாக இருக்கும் அதுவே எதிரியை தோற்கடிக்கும் ஆயதமாக மாறும். மேலும் எதிரி தந்திரம் செய்கிறார் என்றால் அதை முறியடிக்க பதில் தந்திரம் செய்வது. அதற்கு ஆறாம் அறிவு சற்று போதாது. ஆறு அறிவுகளும் கலந்து வேலை செய்ய வேண்டும். அதுவே ஏழாம் அறிவு ! இது பழக பழக வரும். மாட்டிக் கொள்ளக் கூடாது ! மாட்டிக் கொண்டால் மாட்டி விட்டு வெளி வர வேண்டும் !! கிட்டத்தட்ட ராஜ தந்திரம். இது கை கூடி வந்து விட்டால் பிறகு நீங்கள் தொடர்ந்து ராஜாதான்.

  ReplyDelete
 2. அருமை வலிபோக்கன். சாட்டையடி பதிவு.

  ReplyDelete
 3. Advocate P.R.Jayarajan சொன்னது…க்கு.ராஜாதி ராஜா
  வெல்லாம் இருக்கிற இடத்தைக் காணோம்.ஒரு போலீசு
  வந்து நின்றாலே.ராஜா எங்க இருப்பாருன்னு சொல்லமுடியாது.

  ReplyDelete
 4. பெயரில்லா சொன்னது…க்கு நன்றி சார்

  ReplyDelete
 5. //தலை குணிந்து
  கிடக்கும் ஒவ்வொரு தமிழனையும் தமிழரையும் தலை
  நிமிர வைக்கும் படமாக இருக்குமாம்./

  ஒரு வேளை ஸ்க்ரீன் பக்கத்துல உக்கார வச்சு பாக்க வைப்பாங்களோ...

  ReplyDelete
 6. suryajeeva சொன்னது-க்கு ஆமங்க ஜீவா அப்பத்தானே
  தலை நிமிர்ந்து பார்க்கமுடியும்.நீங்க சொல்றதான் சரி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com