பக்கங்கள்

Sunday, October 02, 2011

ஆகாயத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கைக்கூலியும் ,அதற்கு வாழ்த்து தெரிவித்த முப்பது எழுத்துக்கூலிகளும்

மாவீரன் பகத்சிங் பிறந்தது பஞ்சாப்தான். உலகத்தின்
உன்னதமான ஒரு கைக்கூலி பிறந்ததும் அதே பஞ்சாப்
தான். இதைத்தான் அவர்கள் மொழியில் வேற்றுமை
யில் ஒற்றுமை, ஒற்றுமையில் வேற்றுமை என்பார்கள்.

இந்த அமெரிக்க கைக்கூலி யின் 79 வது பிறந்தநாள்
விழாவை “அமெரிக்காவின் நலன்களுக்கு ஓய்வு ஒழிச்
சலின்றி உழைத்து வருவதால் புமியில் கொண்டாட
வாய்ப்பில்லாமல் நான்கு முறை விமானத்திலே
கொண்டாடினாராம். இந்த கைக்கூலிக்கு பிறந்த நாள்
பரிசாக உடன் வந்த முப்பது எழுத்துக்கூலிகளும்
ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை
பரிசாக கொடுத்தார்களாம்.

முப்பது எழுத்து கூலிகள் வழங்கிய வாழ்த்து அட்டையில்
உற்சாகமடைந்த இந்தக்கைக்கூலி. தனக்கிருந்த கூச்சத்தை
விட்டு கேட்டாராம் கேக் எங்கே? என்று கைக்கூலியிடம்
கைகுலுக்கிய தினமணிவாத்தியாரின் தினமணி புள
காங்கிதம் அடைந்து எழுதி யுள்ளது.

இந்தியாவின் தலைநகரம் வாஷிங்டன்னாக இருந்தாலும்
அந்த தலைநகரத்தின் இன்னொரு நகரமான நியுயார்க்
பயணத்தின் போது கேள்விக்கனைகளால் துளைத்து எடுத்து
ஓடடை போட்ட எழுத்துக்கூலிகள், கைக்கூலியின் பிறந்த
நாளின்போது. பேனாக்களை மூடி வைத்துவிட்டு கைக்
குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்களாம்.

மானமுள்ள,ஈரமுள்ள தமிழனாகிய,இந்திய குடிமகனாகிய
(டாஸ்மாக் குடிமகன் இல்லீங்கோ) என்னுடைய,இந்தக் கைக்
கூலிக்கு சாரிங்க,இந்திய பிரதமருக்கு பிறந்த நாளு
வாழ்த்துக்கள்

பிரதமர் அவர்களே!
உங்களின் வம்ச பிதா காந்தி மகான்வழியிலே
உங்கள் சேவை பன்னாட்டு முதலைகளுக்கு குறிப்பாக
அமெரிக்க முதலாளிகளுக்கு தேவை. இந்திய நாட்டின்
புல்புண்டு உள்பட எல்லா வளங்களையும் உங்க
முன்னால் எஜமானர்களுக்கு வாரிவழங்கி உலகிலேயே
ஒப்பற்ற முதல்கைக்கூலியாக பேரும்புகழும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.உங்கள் அடிச்சுவட்டில்
மற்ற கைக்கூலிகள் வளர வாழ்த்துகிறேன்.

2 comments :

  1. நான் இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டேன் அப்படின்னு அடம் பிடிச்சு அமெரிக்காவிலேயே தங்கிடுவார்னு நினைச்சேன்... என் நினைப்பில மண் அள்ளி போட்டுட்டார்

    ReplyDelete
  2. உங்களுக்காச்சும் நினைப்பில் மன்னை அள்ளி போட்டார்
    பெரும்பாண்மை மக்களுக்கு வாழ்க்கைய மூடிட்டாரே!

    ReplyDelete

” கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்பட்டுவிட்டது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க”.........!!