இருபது வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு குட்டிக்கதை
பஸ்ஸையும்,காசையும் நம்பாமல் சைக்கிள்ல அலைந்த எனக்கு சொந்த தொழில் தொடங்கிய பின் சைக்கிளைவிட வேகமாக செல்லக்கூடிய வாகனம் தேவைப்பட்டது.
அன்றைய தினத்தில் டீவியில் டீ.வி.எஸ் 50 தான் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டது. விளம்பரத்தின் தாக்கத்தினால் மிகக் குறைந்த முன்பணம் செலுத்தி லோனில் வண்டியை வாங்கி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.
நான் வண்டி வாங்கியது என் தெருக்காரங்களுக்கு பொறாமையையும் எரிச்சலையும் ஏற்ப்படுத்தியது.என்னைவிட அவர்கள் வசதி வாய்ப்புடன் இருந்தாலும் ஒன்னுக்கு ரெண்டு வண்டி வாங்குவதற்கு வசதி இருந்தாலும் வண்டி ஓட்டுவதற்கு தேவை இருந்தது இல்லை. நேற்று வரை அவர்கள் பாசையில் கஞ்சிக்கு செத்தவன் இன்றைக்கு வண்டி வாங்கி ஓட்டுவதென்றால் எரிச்சலும் ஆத்திரமும் வறாமல் இருக்குமா?
பாப்பாபட்டி,கீரிப்பட்டி மாதிரி ஆயிரம் தடைகள் விதித்தும் அந்தத் தடைகளை எதிர்க்கொண்டும் போராடிக்கொண்டும்தான் என் வாழ்க்கை பயணத்தை ஓட்டிக் கொண்ட இருக்கிறேன்.
ஒருநாள் என் தொழில் நிமித்தமாக கிராமத்துப்பக்கம் சென்றுவிட்டு வரும்வழியில் பச்சைபசும வயல்வெளிகளையும் நீர்நிறைந்த கண்மாய்களையும் கண்டு அந்த பரவசத்தில் கண்மாய்க்கரையில் வண்டியை நிறுத்திவிட்டு கண்மாயில் ஒரு ஆனந்த குளியல் போட்டேன்.
ஆனந்த குளியல் போட்டதுதான் எனக்கு வினை என்று நினைக்கிறேன். ஆனந்தமாக குளித்து விட்டு கரைமேட்டில் வந்து வண்டியை பார்த்தால் வண்டியைக் காணவில்லை. மந்திரமில்லாமல் மாயமாகிவிட்டது.
எப்படி மாயமாகிவிட்டதன்று தெரியவில்லை. எனக்கு இருந்த மூளையை பயன்படுத்தியும் ஒன்றும் புலனாகவில்லை.
பட்டப்பகலில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் ஆள் நடமாட்டம் இல்லை துாரத்தில் ஒருசிலர் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தனர்..வேறு ஆட்கள் வந்த சுவடும் தெரியவில்லை. வண்டிச்சாவியும் என் பையில் வயல்வெளி, பள்ளம், வாயக்கால் மறைவிடம் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்தாகிவிட்டது.வண்டியை கண்மாய் கரையில் நிறுத்தியிருந்தது நன்றாக நினைவிருந்தாலும் சற்தேகத்திற்கு கண்மாய்
தண்ணிரிலும் முங்கி தேடியாகிவிட்டது வண்டி கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நெடுநேரமாகத்தவித்தும் மனதிற்குள் தெம்பு எதுவம் இழந்துவிடவில்லை. எப்படி காணாமல் போனதென்று தெரியததால் ஆச்சரியமாகவும் பிரமிப்பு ஊட்டுவதாகவும் இருந்தது. கண்கட்டு மற்றும் மாயாசல வேலை , மிரட்டல் வழிப்பறி இல்லாமல் முழிச்சுகிட்டு இருந்த நேரத்தில் வண்டி காணாமல் போய்விட்டது
இருட்டிவிட்டது. பகலிலே ஒன்னும் புலப்படவில்லை இருட்டில்லா புலப்படப்போகுது.பக்கத்து கிராமத்தாரிடம் எந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்தேன் .வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் துாங்கவும் மனம் செல்லவில்லை எப்படி காணாமல் போனது குறித்த சிந்தனைதான்.
காலையில் ரெடியாகிக் கொண்டு வண்டியின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல்நியைத்துக்குசென்று வண்டி காணாமல் போன விபரத்தை புகார் மனுவாக கொடுத்துவிட்டு. வண்டிவாங்கிய வட்டி கடைக்கு சென்று தகவலை தெரிவித்து அவர்கள் சொன்ன சில வழிமுறைகளின்படி சில வேலைகளை செய்து முடித்தேன்.
வேலைகள் முடங்கிப்போய் இருந்த நேரத்தில் ரெண்டுநாட்கள் கழித்து ஒரு அனாமநேய தகவல் கிடைத்தது. என் வண்டி பத்திரமாய் பாதுகாப்பாய் இருக்கிறது என்றும்,வண்டி வேண்மேன்றால் பத்தாயிரம் கொடுத்து வண்டியை மீட்டிக்கொள்ளவும். என்றிருந்தது.
அதே ரெண்டு நாள் கழித்து காவல்நிலையத்திலிருந்தும் என்னை வரச்சொன்னார்கள். போனபோது காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சொன்னார் வண்டி கிடைத்துவிட்டது வண்டியை எடுக்க வேண்டுமானால் பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என்றார்
அந்த வண்டியின் கடன் பாக்கியும் பத்தாயிரம்தான் மூன்று பத்தாயிரம் என்னே வல்லமை என்று வியக்க மனதில்லை வண்டி பத்திரமாக இருக்கிறது என்ற செய்தி கிடைத்தாலும் சந்தோசம் ஏற்ப்படவில்லை.எப்படி? அபேஸ் பன்னினார்கள் என்பதை பற்றிய அறிவதிலே ஆர்வம் மிகுதியாக இருந்தது.
நான் எப்படி கவனிக்காமல் இருந்தேன் என்பதை அறிவதிலும் ஆர்வம் ஏற்ப்பட்டது.
சில நாட்கள் கழித்து தெரிந்தது. நான் குளித்துக்கொண்டுருந்த நேரத்தில் கண்மாய் கரையில் மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்தக்குறுகிய ரோட்டில் செல்வதற்கு இடைஞசலாக என் வண்டி நின்றுள்ளது. இருதடவை ஒலிஎழுப்பி பார்த்துள்ளார்கள் எடுக்க யாரும் வராததால் வண்டியை துாக்கி லாரியில் போட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாய் மறைந்து விட்டார்கள்
ஒலிபெருக்கி அடித்த நேரத்தில் நான் காதைப்பொத்தி தண்ணிருக்குள் முங்கி முங்கி எழுந்ததால்ஆர்வமாய்குளித்ததினால் வண்டி வந்ததும் ஒலி அடித்ததும் என் கவணத்துக்கு படாமல்போய்விட்டது. அதோடு வண்டியை
சீட்டிங் செய்பவர்கள் இந்தத் தொழிலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் என் வண்டி சீட்டிங் கனகச்சிதமாக முடிக்கப்பட்டதாம்
சீட்டிங் பார்ட்டியிடமிருந்து பத்தாயிரம் செலுத்தப்பட்டால் வண.டி பத்திரமாக கிடைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது.போலீசு,மற்றும் வேறு வழிகளில் முயல வேண்டாம் என்றும் அப்படி மீறி முயன்றால் வண்டிக்கு உத்திரவாதம் கிடையாது என்றும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பத்தா யிரம் எந்த வழியிலும் குறைக்கப்படமாட்டாது என்றும் தெளிவு படுத்தப்பட்டது.
போலீஸ் தரப்பில் வண்டி கிடைத்தாலும் பத்தாயிரம் கொடுத்தாலும் வண்டி உத்திரவாதமாய் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தவில்லை.ஆனால் பத்தாயிரத்தை குறைப்பதற்கு எந்தமுகாந்திரம் இல்லை என்றுவிட்டார்கள். பணத்தை கொடுங்க ரெண்டு நாள்ல வண்டிய எடுத்துட்டு போங்க என்று சொல்கிறார்களே ஒழிய எப்ப எடுத்துக்கிலாம் என்று சொல்லவில்லை.
இந்நிலையில் பெரும்பாடுகளுக்கிடையில் பத்தாயிரத்தை புரட்டினால் கூட எந்த வழியில் சென்று வண்டியை மீட்பது என்பதில் தயக்கமும் பயமும் இருக்கிறது்
என்னைப் பொருத்தவரையில் இருவரும் மகா கொள்ளை யர்களக தெரிகின்றனர்.ஒருவர் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர், மற்றெருவர் சட்டத்தின் அங்கீகாரம் பெறாத கொள்ளையர். இரு கொள்ளையர்களுமே. தொகையை குறைப்பதில் சம்மதிக்கவில்லை. இரு கொள்ளையர்களுமே, இரக்கமற்றவர்களாக,எதற்கும் அஞ்சாதவர்களாக இருக் கிறார்கள்.
அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்காரரைவிட அங்கீகாரம் பெறாத கொள்ளைக்காரர் வண்டிக்கு உத்திரவாதம்அளிக்கிறார்.
நான் யாரிடம் சென்று வண்டியை மீட்பது உத்திவாதமாய் இருக்கும் என்பதை மேற்படி சம்பவத்தைப் படித்துப் பார்த்து நீங்களே நன்றாக யோசித்து அவசர குடுக்கை தனமில்லாமல் ஒத்தையா,ரெட்டையா பிடிக்காமல் சரியான முடிவைச் சொல்லுங்கள்.
அங்கீகாரம் பெறாத கொள்ளையிரடம் செல்வதே நல்லது
பதிலளிநீக்குபோலீசில் புகாரை மட்டும் கொடுத்துவிட்டு இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணிக்கொள்வது. வண்டி போனால் போகட்டும். வேறு வண்டி வாங்கிக்கொள்வது, இன்சூரன்ஸ் கொடுக்கும் காசில்!
பதிலளிநீக்கு@பாண்டு இன்ஸ்ஸூரன்ஸ் காரணங்களும் அங்கீகாரம் பெற்ற கொல்லைகாரனுங்க தான் ., சீனிவாசன் சொல்லுறதுதான் சரி..
பதிலளிநீக்கு