உள்ளாட்சியில் நல்லாட்சி மலர
உங்கள் வாக்கை பதியுங்கள்
உங்கள் வாக்கு எங்களுக்கு
பொன் முட்டையிடும் வாத்து
நாங்கள் ஆடசிக்கு வந்தால்
கக்கூசுக்காக உங்களை
அலைய விடமாட்டோம்
உங்கள் தேவையை உணர்ந்து
தெருவெங்கும் கட்டண கக்கூசு
கட்டுவோம். கட்டியதை தனியார்க்கு
ஏலம் விடுவோம்.ஏலம் போகாததை
சமூக விரோதிகள்(கக்கூசு இல்லாதவர்கள்)
பயன்படத்த முடியாதவாறு
புட்டூ போட்டு விடுவோம்
தெருவெங்கும் குவியும் குப்பைகளை
வார பிரஞசு கம்பெனிக்கு
குத்தகைக்கு விடுவோம்
நகரில் நெரிசலை குறைக்க
மலேசிய கம்பெனிய கூப்பிட்டு
பாலம் போடச்சொல்வோம்
தண்ணீர் பற்றாக் குறையை
போக்க பெப்ஸி,கோலாவுக்கு
முன்னுரிமை அளிப்போம்.
மின்சார பற்றாக் குறையை
ஈடுகட்ட தெருவிளக்கை
ஒழிப்போம்.
திருட்டு,வழிப்பறியை ஒழிக்க
பறிகொடுத்தவரை கம்பி
எண்ண வைப்போம்
மாமன்ற கூட்டத்தில் மைக்
இல்லாமல் அமைதியில்லாமல்
கூச்சல்,நாய்சண்டையிட்டு
ஜெயிச்சு காட்டுவோம்
உள்ளாட்சியின் ஊழலை
அனைவருக்குமான பரவலாக
ஆக்கிக் காட்டுவோம்
உள்ளாட்சியில் கேள்வி கேட்பாரை
இல்லாமல் இல்லாமல் ஆக்குவோம்
போராட்டம்.மறியல் நடத்துபவர்களை
ஜனநாயகவழியில் மிரட்டாமல்
உடனே சுட்டுக் கொல்லுவோம்
ஆகவே வாக்காள பெரு மக்களே
உள்ளாட்சியில் எல்லோரும் திருட
உங்கள் வாக்கை பயப்படாமல்
பலவேஷம் காட்டி கூழை கும்பிடு
போட்டு வரும் மானங்கெட்ட
வேட்பாளர்க்கு ரோஷம்கெட்ட
வாக்கை பதியுங்கள்
ஜனநாயகத்தை பாதுகாத்திட
உதவுங்கள்............
வாழ்க! பட்டை நாமம்
வளர்க! நாமக்கட்டிகள்!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை. இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் ...
-
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குற...
-
படம்.வினவு. முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை