பக்கங்கள்

Monday, October 17, 2011

உள்ளாட்சியில் ஒரு அ(க)டி

ஒருவர்...அந்த வேட்பாளர் ஏன்? தன்
பொண்டாட்டிய அடிக்கிறாரு?

மற்றவர்.....ஒரு ஓட்டு இருக்காம்,
இன்னொரு ஓட்டு
எங்கடின்னு கேட்கிறாரு.
அதுதான் இதுன்னு
சொல்லுச்சாம்.வாக்காளர்---அந்த புத்துல ஓட்டு போடப்
போறவங்கள போலீசு..ஏன்? அடித்து
விரட்டுது!!!

வாக்காளர்2.--அவுங்க ஆளுங்கட்சி போலீசாம்
அவுங்களே மொத்த ஓட்டையும்
போட்டுறாங்களாம்????தேர்தல்அதிகாரி.--உங்க பேரு லிஸ்டுல இல்லாததால்
உங்களுக்கு ஓட்டு இல்லை.

தொண்டர்.--..........என்னது ஓட்டு இல்லையா? அம்மாவின்
தொண்டனுக்கு ஓட்டு இல்லையென்றால்
இந்த புத்தையே அழித்திடுவோம்.நண்பர்.்் என்னங்க தோழர் ஓட்டு போடப்போகலையா?

தோழர்ஃஃ ஓட்டெல்லாம் போடுவதில்லை .போலி
தேர்தலுக்கு வேட்டுதான் வைக்கனும்.ஆளுங்கட்சிகாரர்...சார், எங்க வார்டுல ஓட்டு போடாத
வங்க நிறைய பேர் இருக்காங்க
முன்னனெல்லாம் சிரமமில்லாம
அவுங்க ஓட்ட போட்டோம். நீங்க
மனசு வச்சா, உங்களுக்கு பதவி
உயர்வு.மற்றும் இத்யாதி நாங்க
கவனிச்சுக்கிறோம்.

தேர்தல் அதிகாரி...- உங்களுக்கு சிரமமே வேண்டாம்
எல்லாத்தையும் நானே பாத்துக்
கிறேன்.

2 comments :

  1. கொளுத்தி போடுங்க, பத்திகிட்டு எரியட்டும்

    ReplyDelete
  2. கொளுத்தி போட்டுட்டேன். எரிய மாட்டேன்னுது.மழை காலமா அதான் ஈரமா இருக்குது

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com