பக்கங்கள்

Thursday, December 08, 2011

இருக்கிறவன் செம்மையா இருந்தா..... சிரைக்கிறவன்.நல்லா சிரைப்பான்ல.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடியென்றால்தமிழனுக்கு நாலு பக்கமும் இடி,.இடைவெளி இல்லாமல் எட்டு திசையிலும் இடி என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.

தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளும் சரி.ஆளாத கட்சிகளும் சரி.எல்லாமே கஞ்சிக்கு செத்த தமிழனுக்கு துரோகமே செய்துள்ளன. செய்து வருகின்றன.

நீதி.நேர்மை,தியாகம்.ஒப்புக்குக்கூட. இல்லை மாநில கட்சிகளும் சரி,
தேசஒற்றுமை,தேசப்பற்று வெண்ணெய்.வௌக்கெண்னெய் என்று சொல்லு
கின்ற தேசிய கட்சிகளுக்கும் மயிரளவு இல்லே என்பதுதான் உண்மை.

முல்லைபெரிய ஆறு பிரச்சினையில் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு,பிஜேபி,இடதுவலது கடசிகளின் பித்தலாட்டமே அதற்கு
சாட்சி. சாட்சியாவது புடலங்காயாவது எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றாலும் தெரிந்தும் மௌனமாக இருந்து மறந்து விட்டுறாங்கள
அவுகளக்கு சொல்லித்தானே ஆகனும்.

கேரள மக்களுக்காக.தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றக்கு தேவையான
நீரின்அளவையாவது தமிழகத்துக்குதரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட  தேசியம் பேசும் கட்சிகளிடம் இல்லை.

மிகப்பெரிய வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிக்கை கொடுத்தும் அனையில் நீர்கசிவுக்கான ஆதாரத்தை விளக்கி
யும் நான் பிடித்த முயலுக்கு மூனு காலுன்னு வாதம் செய்வதுதான்  இவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இவர்களே,ஏற்றி பாடும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கூறிய பின்னரும் இரு மாநில அரசுகளும் இனைந்து இணக்கமாக பேசி தீர்க்கவேண்டும் என்று உபதேசம் செய்வது.எவ்வளவு பித்தலாட்டம். அலுத்து செலுத்து
வந்தவன,இழுத்து போட்டு சிரைப்பானாம் அந்த பழமொழிமாதிரிதான் இருக்குது. தேசியக்கடசிகள் சொல்லுவது.

ஊருக்கு இளைத்தவன் தமிழனாக இருப்பதால்தான் எட்டுதிக்கும்குத்துபட்டு.அல்லல் படுற நிலமை எற்பட்டுருக்குது. கல்தோன்றி
மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழினம் என்ற வீண் பெருமையில்தான் முக்கி இருப்பதால்தான் எட்டுதிசையிலிருந்தும இந்த லொள்ளு,

பச்சைதமிழன்.செந்தமிழன்.வீரத்தமிழன்புரட்டுதமிழன்.சாதிவெறித்தமிழன்.சுயநலத்தமிழன்.சிந்திக்க மறுக்கும் தமிழன். ஓட்டு போடுவதைத்தவிர வேறு எதையும் அறியாத தமிழன்.ஏமாற்றுவதையே தொழிலாக் கொண்ட
தமிழன்.ஏமாறுவதே தன் பிறப்புரிமை கொண்டதமிழன். இவற்றையேல்லாம் மூட்டைக்கட்டி இந்தீய பெருங்கடலில் பெட்ரோல் ஊற்றி
எரித்துவிட்டு.......உதப்பானுக்கு உதப்பனாக இருந்தா...உடனே வெளுப்பான்.. கோடி வெள்ளை என்பது மாதிரி.............................................

இருக்கிற நாம செம்மையாக இருந்தால்தான சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான் என்பதை நெஞ்சிலேற்றி.....நமது நியாய உரிமைகளை
மறுக்கிற கேரள மாநிலத்திற்கெதிராக.............

பரம்பிக்குளம்-ஆழியாறு-மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரள்த்துக்கு செல்லும் தண்ணீரை மறுப்பது..தமிழகத்து வழியாககேரளத்துக்கு
செல்லும் சாலைகள் சபரிமலை உள்பட மற்றும்  இரயில் போக்குவரத்தை மறிப்பது

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளவு நமக்கு முக்கியமோ அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம்
அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை இனவெறியில் முழ்கிய கேரள மக்களுக்கு உணர்த்தவேண்டும்

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்த மறுக்கிற,வக்கற்ற மத்திய அரசின் எந்த அதிகாரத்தையும் ஏற்காமல் மத்திய அரசின் அனைத்து அலுவலங்களையும் நீதிமன்றங்களையும் இழுத்து மூடவேண்டும்

மத்திய அரசுக்கான வரிகளை செலுத்த மறுப்பதன் மூலம் நாம் செம்மையாக
இருந்தால்தான். சிரைக்கிறவன் நல்லா சிரைப்பான் மாதிரி தமிழகத்தின் நியாய உரிமையை நிலை நாட்ட முடியும்

8 comments :

 1. சரி தான்... தனி நாடு கோரிக்கையா? சபாஷ்

  ReplyDelete
 2. உங்கள் ரத்தம் கொதிக்கும் அளவிற்கு எனது ரத்தமும் கொதிக்கிறது ஐயா. ஆனா தமிழனுக்கு இப்போ உள்ள முக்கிய செய்தி பறிமாற்றம் எல்லாம் கொலைவெறி பாடலைப் பற்றிதான் அதைப்பற்றிதான் பேச்சு மூச்சு எல்லாம். சூடு சுரணை இல்லாதவன் தான் தமிழன் சுயநலவாதியும் கூட.

  உங்கள் மனம் கொதித்து வார்த்தைகளாக வெளிவந்துள்ளன. ஆனால் எத்தனை பேர் இதை வந்து படித்து இதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி போராடுவார்கள் என நினைக்கிறீர்கள்? வெகு சிலரே.. என்பதுதான் உண்மை

  ReplyDelete
 3. respected sir

  pls go to all Tamil people to their house and tell them to join people for their freedom to return India from Aryan people. kindly ask all the low caste people in India to combine together to fight for their own land including Tamil ehizam to get their land from Aryan, Semitic people to get out of the country and save the country from

  then the original people of got their freedom and live here happily
  with their own language Tamil for the whole country

  ReplyDelete
 4. respected sir

  pls go to all Tamil people to their house and tell them to join people for their freedom to return India from Aryan people. kindly ask all the low caste people in India to combine together to fight for their own land including Tamil ehizam to get their land from Aryan, Semitic people to get out of the country and save the country from

  then the original people of got their freedom and live here happily
  with their own language Tamil for the whole country

  ReplyDelete
 5. அவர்கள் உண்மைகள் சொன்ன கருத்தே என்னுடையதும்..

  ReplyDelete
 6. தங்களின் ஆதங்கம் நியாயமானதே...

  ReplyDelete
 7. don't split tamilnadu... nice post.. www.rishvan.com

  ReplyDelete
 8. நெருடலான பிரச்னை.. உணர்வுகள் பிரதிபலிக்கின்றன

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com