பக்கங்கள்

Saturday, February 18, 2012

மடியாத,மறையாத கட்டுக்கதைகள்.........(2)

ஒருவர் தனக்கு கல்யாணமாகி இரண்டு
வருடமாகிறது. தனக்கு குழந்தை பாக்கியம்
எப்போது கிட்டும். அதற்கு நான் என்னென்ன
பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை
கூறுங்கள் என்று ஒரு வேத விற்பன்னரிடம்
கேட்டாராம்.

நல்ல வேளையாக, டெக்ஸ்பேபி,விந்து
தான கருத்தரிப்பு, வாடகைத்தாய் போன்ற
விபரங்கள் தெரிந்த வேத விற்பனரான அந்த
ஆன்மிக டாக்டரோ, அவரின் மனைவியை
பார்த்துதான் பரிகாரங்களை கூறுவேன் என்று
கூறாமல் குழந்தை பிறப்பதற்கான பரிகாரவழி
வகைகளை கூறினார்.

செத்துப்போனவர்களின் நேர்த்திக் கடனை காலம்
தாழ்த்தி செய்வதில்தான் குழந்தை பிறப்பு நிறுத்தி
விடுவதற்கு காரணமென்று கண்டுபிடித்து,அதை
சாஸ்திரம் சொல்வதாக சொன்னார்.அந்த வேத
விற்பன்னர்.

அதனால்.உங்கள் வீட்டில் முன்னோர்களின்
நேர்த்திக்கடனை அமாவாசை தர்ப்பணம் முதல்
வருடாவருடம் கொடுக்கப்படும் திதிவரை உங்கள்
மனைவியை செய்யச் சொல்லுங்கள். அதையும்
சிரத்தையோடு செய்யவேண்டும் என்றார்.
அப்படியும் பிறக்கவில்லையென்றால் சிரத்தை
யோடு செய்யவில்லை என்று தப்பித்து கொள்வா?
என்று வாசகர்கள் நிணைக்கக்கூடாது.


அவரின் மனைவியின் சாதகப்படி புத கிரக
பரிகாரத்தை செய்யவேண்டும். இதோடு

ஈயப்பாத்திரத்தில்சுத்தமான நெய்யும்
பித்தளை பாத்திரத்தில் சுத்தமான பசும்பாலை
யும்விட்டு புதன்கிழமையன்று அந்தனருக்கு
தானம் செய்யவேண்டும். ராமாயணத்திலுள்ள
சுந்தர காண்டத்தை பாராயணமாக படிக்கச் சொல்லி
கேட்கவேண்டும் என்றார். அந்த வேதவிற்பன்னர்.

இந்த பரிகாரங்கள் குழந்தையில்லாத குடும்பத்தின்
 ஆம்படையானுக்கு இல்லை,பிறந்த வீட்டிலிருந்து
வரதட்சனையும் கொடுத்து,அவன் கூப்பிடுகிற
நேரத்துக்கெல்லாம் அவனுடன் படுத்து இருந்து
அவன் துணிமணிகளை துவைத்து,வக்கனையாக
சமைத்து போட்டு அவனுடைய சொத்துக்கும்
வாரிசாக,அவனுடைய ஆன்மைக்கு சான்றாக
ஒரு பிள்ளையையும் கொடுக்கனுமாம்.

பிள்ளை பெத்து கொடுக்காவிட்டால் மொத்த
பழியும் சுமந்து பிள்ளை பிறப்பதற்கான பரி
காரங்களையும் அந்தப்பென்தான் செய்யனுமாம்

போதும்டாசாமி? உலகமே சுறுங்கினாலும்
இப்படிபட்ட பித்தலாட்மும் அயோக்கிய தனங்களும்
பரந்து விரியும்மாப்பா சாமி!!!

செல்போன் மாதிரி,பிள்ளை பெக்கும் இயந்திரம்
ஒன்றை கண்டுபிடித்தால்................பிள்ளை
பெக்கும் இயந்திரம் ஒன்றை கண்டபிடிக்க
அதற்கும் ஏதாவது ஒரு பரிகாரம். இல்லாமலா?
இருக்கும்!

தமிழகத்தில் பத்து மணிநேரம் மின்வெட்டை
போக்க அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா
வேத விற்பனையாளர்களே!!!! கூடங்குளத்த
காட்டதீங்கப்பா!அதுக்கு பரிகாரம் சொல்ல!
நால்வர் மற்றும் அய்வர் குழு
ஒன்னு வந்துகிட்டு இருக்குப்பா!!!!

தமிழ்நாட்டை ஆளும் ஆத்தா, பரிகாரம் செய்த
தினால்தான் மூன்றாவது தடவையாக ஆட்சி
நாற்காலியில் உட்கார்ந்து இருக்காங்கலாம்....!!!!!!
இந்த மாதிரி தஞ்சாவுரு தலையாட்டி மாதிரி
ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா வேத விற்பனை
ஆளர்களே!!

3 comments :

 1. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

  http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


  Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

  http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


  மெமரி Card Data Recovery Software !

  http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

  ReplyDelete
 2. மிகவும் சிறப்பான வினாக்களைத் தொடுத்து விளக்கங்களித்த்ந்து விழி இழந்தவனுக்கு வழி கட்டி சென்று இருக்கிறீர்கள் இது போன்ற விடியல்களை வந்தால்தான் தமிழகம் விடியும் பாராட்டுகள் தொடர்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com