பக்கங்கள்

Friday, February 24, 2012

இருந்தாலும்...இடதுகளுக்கு இப்படி வாய் கொழுப்பு கூடாதுப்பா??கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள். வயல்களில் இரு தவளைகள் பேசிக் கொண்டதாம். அதில் ஒரு தவளை தம் அருமை பெருமைகளை சொல்லிச்சாம் இப்படி......

நான் சட்டி கொண்டாந்தேன். நான் முட்டி கொண்டாந்தேன். நான் கொண்டு வரலைன்னா,விவசாயமே நடக்காது. தன்னால்தான் விவசாயம் நடைபெறுகிறது என்று பீத்திக் கொண்டதாம்.

அது கேட்ட மற்றொரு தவளையானது...டம டம டம டம டம வெறும் பித்.......
டம டம டம டம வெறும்பீத் டம டம டம டம வெறும்பீத..என்று சொல்லுச்சாம்

இதுமாதிரி இருக்கிறது. இடதுகளின் பொதுசெயலரான பிரகாஷ் பேச்சு....

நாகை மாவட்டத்தில் இடது களின் 20வது மாநில மாநாட்டில்.....பிரகாசு பேசியது
 அய்க்கிய முற்போக்கு ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு ஊழல்,லஞ்சம் விலையேற்றம் போன்றவை பெருகி விட்டதென்றும். அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திகயிருப்பதாகவும், வருவதாகவும். காங்கிரஸை விட
பா.ஜா. வித்தியாசமானவை என்று சொல்ல முடியாது என்றும். தாராளமய கொள்கையின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொளளையடிக்க இரண்டு கட்சிகளுமே வழிவகை செய்கின்றன(சிங்கூர் ,நந்தி கிராமத்ததை வசதியாக மறைச்சுபிட்டு) என்றும் வலது, இடது சாரிகளால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை தரமுடியும் என்று பீத்தினார். உடன் அவரது அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிருந்தாகாரத்தும் கலந்து கொ்ண்டார்.

கழுதை நெணெச்சுதாம் கந்தலும் கதக்லும் அடுத்து நமக்குதானுன்னு ...அதுமாதிரியில்ல

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com