ஞாயிறு 11 2012

போக்கத்தப்பயலுக்கு கொழுப்ப பாருங்கோ????

போக்கத்தவன் பொண்டாட்டி முழுகாம இருக்காளாம். அட, இது
வேறையா.இவனே போக்கத்து போயி இருக்கான் இவனுக்கு
பொண்டாட்டி வேறையா?அதுவும் அவ முழுகாமா இருக்களா???
கிழிஞ்சு போச்சு போங்க.........................

இத எதுக்கு சொல்ல வரேன்னா, இந்தியாவுல மக்கள் தொகை
120 கோடியாம் இந்த வேகத்துலயே போனோம்னா, சீனாக்காரன முந்திருவோம்ல,

அந்தப்படிக்கு பாத்தா, 120 கோடியில முக்கால்வாசிபேரு எந்தக்
 கணக்கிலும்வராதவுக.மீதி கால்வாசி. அந்தக் கால்வாசியில
பாதிபேருராயல்ஃபேமிலிஅந்தப்பாதியிலபாதிபேருரெண்டுக்
கெட்டானுக.ஆணுமில்லாமா,பொண்ணுமில்லாமஇருக்குற
வங்களநிணைக்கக்கூடாதுஅங்குமில்லாமா,இங்குமில்லாமா. இருக்குறவங்கதான் ரெண்டுங்கெட்டான்.

இந்தியாவில் இருக்கும் வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்
என்று ஒருத்தரு கேட்டாரு, அதுக்கு நான் ,முடிச்சு அவிக்கி, மொள்ளமாரி,கேப்மாரி, குத்தாமா.குடல உருவுருவன்,கத்தவிடாமா அமுக்குறவன். இப்படி இருக்கிற பெரிய பெரிய தொழில் அதிபர்களுக்கும்,தொழில் முதலைகளுக்கும்தான் கொடுப்பார்கள். இவர்கள்தான் சட்டப்படி,ஞாயப்படி நேர்மையாக பட்டையை
போட்டு ,அதுக்கு மேல பட்டை தெரியம நாமம் போடுகிறவர்கள்.
இவர்கள்தான்ஒழுங்காமரியாதையாநாமம்போடுவார்களாம்.
இவர்களால்தான் வேலைவாய்ப்பு, புடலங்கா.கத்திரிக்கா
ஏற்படுகிறதால , இவர்களுக்குத்தான் கூப்பிட்டுகொடுப்பாங்க
 இதோடு இவர்களால்தான் இந்தியா பெரிய வல்லு அரசாகுமாம்


அப்படியா? என்று வாய பொளந்தார். வாய பொளக்காதே!
 விசயத்த சொல்லுஎன்றபோது சொன்னார். அம்மா ஆட்சியில
 வீடு கட்ட ஆர்டர் வந்திருக்குஆனா அவுக கொடுக்கிற காச
வச்சு வீட்ட கட்ட முடியாததல, பேங்க்ல லோன்கேட்டேன்பா,  வாங்கினவனெல்லாம் ஒழுங்கா கட்டிபுட்டானுக, இப்ப நீ லோன்
கேட்டு வந்தியிருக்கியாக்குமினு டாப்பு,டாமர்.டுமார்னு விரட்டிட்டானுகப்பா.........என்றார்

அகில இந்திய வங்கிகளில் கடன் வாங்கி அடைக்காதவர்கள்
2011 வரை கோடி பேராம். இந்த கோடி பேர்கள் வாங்கிய
தொகை மட்டும் 70 எழுபதுகோடியாம்... ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை மாத்தினதையே ஒழுங்கா என்னச்தெரியாதவுகளா? வாங்கியிருப்பாக???

 இந்த வாராக் கடன்தொகை எழுபது கோடிய வசூலிக்க நடவடிக்கை எடுத்தாலே! இந்தியப் பொருளாதாரத்தை சிர்படுத்திவிடலாம். என்று

அகில இந்திய வங்கி ஊழியர்சங்க இணை செயலாளரும் தமிழ்நாட்டு
வங்கிஊழியர்சங்கசெயலாளருமானவிஜயகுமார்என்பவர்தெரிவித்தாராம்.
.இதுஎப்படிஇருக்குஅந்தவிஜயகுமாருக்குதெரியாதவாங்கியவன்கள்
யாருன்னு?அப்படியே தெரிஞ்சாலும் நிணைவுட்டு கடிதமாவது
அனுப்பத்தான் முடியுமா?

போக்கத்தவன் பொண்டாட்டி முழுகாம இருந்தாலென்ன, பிறக்க
போகிற குழந்தைக்கு அப்பன் யாரான்னு தெரிஞ்சுதான் என்ன செய்ய போறோம்.தெரிஞசுக்க வேண்டியவங்களே! ரோஷம்கெட்டு,
மானம்கெட்டு,மருவாதி கெட்டு  நமக்குத்தான் ஓட்டு என்ற துட்டு
இருக்குற மப்புலலஇருக்காக!!!!!

2 கருத்துகள்:

  1. //அகில இந்திய வங்கிகளில் கடன் வாங்கி அடைக்காதவர்கள்
    2011 வரை பத்துகோடி பேராம். இந்தப்பத்துகோடி பேர்கள் வாங்கிய
    தொகை மட்டும் 70 எழுபதுகோடியாம்//

    Check this amount. 10 crore people borrowing 70 crores works out to 70 rupees per person. :)

    பதிலளிநீக்கு
  2. தவறுக்கு மன்னிக்கவும், சுட்டிகாட்டியமைக்கு நனறி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...