பக்கங்கள்

Saturday, March 17, 2012

கவிதையின் கதை!

இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்---

-இந்தப் பாடலை எழுதியவர் யாரென்று சத்தியமாக
தெரியாமல் இருக்காது. முன்னொரு காலத்தில் கவிதையைப்
பற்றி புரியாத காலத்தில் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று கூப்பாடு போட்டவன்.பாரதியை . பாரதிதாசனே,
 குருவாக ஏற்றுக் கொண்டபோது பெருமையாக இருந்தது


பொதுவுடமை அமைப்பில் அணி சேர்ந்து இருந்தபோது
தோழர் ஒருவர்,“அப்பனே. முருகா! என்னைமட்டும்
காப்பத்துப்பா?  என்று விளையாட்டாக வேண்டியபோது
எழுந்த வாதங்களின் போதுதான் பாரதியின் கதை தெரிந்தது.

பாரதி புரட்சிக்கவிஞனில்லை, கஞ்சாக் கவிஞன் என்று
புகழ் மாலை சூட்டிய காலத்தில். பழத்தினால் வந்த தோஷம்
இறக்கும்வரை இருந்ததா? என்று தெரியவில்லை.

இப்போது பாரதியின் ஜகத்தினை அழித்திடுவோம் கவிதையின்
கதை தெரிந்தது.அன்றையஆங்கிலயேஆட்சியின்க
கொடுங்கோண்மையினால் பட்டினியால் பரிதவித்த
மக்களுக்காக ஜகத்தினை அழிக்க அவர் கவி பாடவில்லை.


நீல கண்ட பிரம்மச்சாரி என்ற தேச பகதர். பாரதியின்
வீட்டுக்கு வந்து, சாப்பாடு எதாவது கொடுங்கள் சாப்பிட்டு
நாலு நாள் ஆச்சு என்றாராம் அப்போது

பாரதியின் வீட்டில் வழங்கிய உணவை உண்ணும் போது
நீல கண்ட பிரம்மச்சாரி கண் கலங்கியதை கண்டு கொதித்து
எழுந்த பாரதி நீல கண்டரை தனி மனிதராக்கி அவருக்கு
உணவில்லாதததையே “ இனியொரு விதி செய்து..............
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார். நீலகண்டருக்காக
பாடியதையேபாரதியின்குலக்கொழுந்துகள்,அவரின்பக்தர்கள்
நின்றதுகள்.போனதுகள்எல்லாம் பாரதியை புரட்சிக் கவியாக,
உலக மகா கவியாக கொண்டாடி அக மகிழ்கிறார்கள். இடது கள்
வலதுகள் மற்றும்தினமணி வைத்தி உள்பட.3 comments :

  1. ஒரு புகழ்பெற்ற நபரின் பிம்பத்தை உடைக்கும் பொழுது, கொஞ்சம் கவனமாகவும், ஆதாரத்துடனும் எழுதுவது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. விரிவாக என்ற பதத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக கவனத்துடன் என்று குறிப்பிட்டுவிட்டேன்.

    ReplyDelete
  3. கருத்துரைத்த தோழர்க்கு நன்றி!விரிவாக எழுத மின்வெட்டு இடம் தரவில்லை. இதற்கு ஆதாரமாக, தினகரன்(3.3.12) ஆன்மீக மலரில் பாரதி பாஸ்கர் எழுதிய சிறகை விரி...பற கட்டரையயில் பாடல் பிறந்த கதையை கூறியள்ளார் அதையே அடிப்படை ஆதாரமாக கொண்டு எழுதியுள்ளேன்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com