வெள்ளி 30 2012

கனவில் வந்த “ டோக்” கதை...............



ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமில்லை.சித்தம் போக்காக அலைந்து திரிந்து கொண்டு இருந்தான்.

அப்படி அலைந்து திரிந்தும் ஒரு வேலையும் கிடைத்த பாடில்லை.ரௌடியாக மாறவும் தைரியமில்லை.பசியால் அலைந்து திரிந்து காட்டுப்பக்கம் வந்து விட்டான்.சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்தவனுக்கு காட்டின் பசுமையைக் கண்டவுடன் பசி தொந்தரவு கொடுக்காமல் இருந்தது. 

காட்டிலுள்ள மரங்களிலாவது தின்ன ஏதாவது கிடைக்குமான்னு மரத்தை
தேடியபடியே நடு காட்டுக்குள் வந்தவிட்டான்.திரும்பி போகவும் வழி தெரியவில்லை.வழிதெரியவில்லை என்பதைவிட மனித உருவில் மிருகங்கள் வாழும் ஊரைவிட காடே ரெம்ப சிறந்தது என்று நிணைத்தான்

அந்த அடர்ந்த காட்டுக்குள் சித்தர் ஒருவர் தியானம் செய்து கொண்டு இருந்தார் சித்தர் தியானம் முடிந்து கண் திறக்கும் வரை அவர் முன்
அமர்ந்து  இருந்தான் வெகு நேரமாகியும் சித்தர் கண் திறப்பதாக தெரியவில்லை. உயிருடன் இருக்காறா?ன்னு சந்தேகப்பட்டு .
ரெண்டு கற்களை எடுத்து டோக்கு, டோக்குன்னு ஒலி எலுப்பினான்

வேண்டா வெருப்பா கண்விழித்த சித்தர்,என்னப்பா” என்றார்

“சோறு திண்டு நாளாச்சு”ன்னு சைகையால் ஏதாவது கிடைக்குமா?
என்றான்
“நீ...சோறு திண்டு நாளாச்சு”  நான் சோற பாத்தே நாளச்சு”
இதை அறிந்துதான்வீம்புக்கு கண்ண மூடிக்கிட்டு இருந்தேன். பொருமையிழந்து அப்பவாச்சும்  நீ.. போவேன்னு”..........சோத்த பாத்து நாளச்சுன்னுதான் இந்தக்காட்டுக்கு வந்தேன். தன் கதையைச் சொன்னார்.....

நீங்க. இருப்பது எனக்கு தெரியாது, பசிக்கு இல்லையென்று சொல்லாமல்
 எதையாவது கொடுங்கள். என்றான்

சித்தரும்,சிறிது யோசித்தவிட்டு, “என்னால் உன் பசியை போக்க உணவு தர முடியாது. மந்திரத்தில் மாங்காயையும் வரவழைக்க முடியாது.உயிரை போக்கடிக்லாம்.“கூடங்குளத்து மாதிரியா”ன்னு கேட்கக்கூடாது, ஒரு வரம் தருகிறேன் அந்த வரத்தைக்கொண்டு “நீ யாரை “டோக் என்று சொல்கிறாயோ
அவர்கள் உடனே சாவார்கள் என்றார். ஆனால் ஒரு நிபந்தனை“ இந்த வரத்தைக்கொண்டு ஊரிலுள்ள போலிஸ்காரன்கள் மாதிரி லாக்அப் கொலைசெய்தால் வரம் பலிக்காது என்று சொல்லி  வரத்தை தந்தார்.

சோறு போட வக்கு இல்லாத வரத்தை வச்சு என்னா பன்னுறதுன்னு ,சிறிதுயோசித்தான்.சரி கொடுப்பதை வேணாண்டு சொல்லக்கூடாதுன்னு வாங்கிக் கிறேன் என்றான்.

உனக்கு கொடுத்த வரத்தை பரிசோதிக்க நானே ஒரு வழியைச் சொல்கிறேன் நீ....பசியால் துடித்த நேரத்தில் கண்மூடி இருந்தேன். கண் திறந்து பார்த்த போதும் உன் பசியை போக்க நான் முயற்சிக்கவில்லை.அதற்கு வழியும் சொல்லவில்லை.என் சுயநலத்தையும் ஒதுங்கும் எண்ணத்தை கொண்டியிருந்த என்னை முதலில் ஒரு டோக் என்று சொல்லி  என்னைச் சாகடி என்றார் சித்தர்.

அய்யோ, என்னது, அவனவன்(ள்) உண்டவீட்டுக்கு (நாட்டுக்கு) இரண்டகம் செய்து கொண்டு இருக்கிற  நேரத்தில் .உண்ணாமல் எப்படி என்று தயங்கினான்.

தயங்காதே, தயங்கினால் வரம் பலிக்காது. அதை மனதில் கொள். கொல் என்றார்

பசிக்கு உணவளிக்காத சித்தர் ஒரு டோக் என்றான். சித்தர் சமாதினார்.சித்தரை அடக்கம் செய்துவிட்டு நாட்டுப்பக்கம் வந்தான்.

நகரத்தில் ஒரு இடத்தில் கல்யாண விசேசம் நடந்து கொண்டு இருந்தது.இவன் அருகிலுள்ள குப்பை மேட்டில் அமர்ந்து கொண்டு

யோவ்......யோவ்.....சோறு கொண்டு வாய்யா? என்று கத்தினான்.

அவன் கத்தினதை. யாரும் கண்டு கொள்வதாக  தெரியவில்லை .மின்சாரம் இல்லாததால் குழாய் ஒலிபெருக்கி தன் சத்தத்தை இவனுக்காக நிறுத்தி
 இருந்தது. திரும்பவும் மூன்று தடவை “சோறு கொண்டு வாய்யா” என்று கத்தினான்.

மொய் எழுதிக்கொண்டு இருந்த கூட்டத்தில் ஒருவன்.“ யார்ர அவன் குப்பை மேட்டுல ஓக்காந்துகிட்டு சோறு கொண்டு வாய்யா, சோறு கொண்டு வாய்யா?
 என்று கத்துறவன். என்று பதிலுக்கு சத்தம் போட்டான்.

ஒருவரும். அவனுக்கு சோறு கொண்டு வந்தபாடில்ல “ ஏண்டா,
இங்க  ஒருத்தன் பசியால சாகுறேன், உங்களக்கு அவ்வளவு பகுமானமாடா?என்று கூறியபடி. கல்யாண வீட்டில் உள்ள அணைவரும் “டோக் என்றான்
செர்னோபில் அனுஉலை வெடிப்பு மாதிரி எரிந்து சாம்பலானர்கள்.

இந்த மாதிரி. இவனுக்கு சோறு போடாத அணைவரையும் நைட்ரஜன் ,போபால் விசவாயு  எதுவும் வெளியிடாமல் “டோக்” என்று சொல்லியே
கொன்றான்.

சோறு போட வக்கத்தவர்கள் எல்லாம் சோறு இல்லாததால் ஏற்கனவே அவர்களகவே சமாதியானர்கள். வக்குள்ளவர்களும் சோறு போடாததால் அவர்கள் எல்லோரையும் கொன்று ஒழித்ததால்..... “சோறு கொண்டு வாங்கய்யா?என்று சொல்வதற்குகூட ஆட்கள் இல்லாமல் வெட்டவெளியாய் இருந்தது.

சோர்ந்து போயி ஒரு இடத்துல உட்கார்ந்து இருந்தான் “இவன் அருகில் வந்து ஒரு காக்கா கத்தியது.

இந்தா....நானே. சோத்துக்கு வழியில்லாம உட்காந்து  இருக்கேன். உனக்கு எங்கிட்டு சோறு போடுவேன். காக்காவுக்கு சோறு வேணுமாமுல்ல, போ,.போ... கத்தினான்.

உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது, அந்த வேர்வைகளை பார்த்தபடியே“
பசியெடுத்த காக்கைக்கு சோறு போடமுடியாத இவன் ஒரு “டோக்” என்றான்
மறுவினாடியே டோக்கும் செத்தான்.

அவன் உடலைச் சுற்றி ஒரே காக்கக்கூட்டம். ஓரே காக்கா சத்தம். அந்த சத்தமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது..

(அந்தச் காக்கா சத்தத்தினால் என் துாக்கம் கலைந்தது.
 விழித்து  பார்த்தபோதுநன்றாக விடிந்து வெயிலும்  மத்தியான வெயிலு மாதிரி சுட்டெரித்தது.. காக்கைகள் சத்தமும் குறைவதாகஇல்லை. ஒரு காக்கா செத்து போச்சாம்அதான் எல்லா காக்கா துக்கம் விசாரிச்சுகிட்டு இருக்குதுக)


1 கருத்து:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...