நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
எஜமானர்களுக்காக
அதிகாரிகளால் ஏவப்
படும் ஏவல் நாய்
நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
ஏவி விட்டால் கடித்து
குதற வேண்டும்
அவர்கள்...............
தாயாக....தந்தையாக.....
சகோதர......சகோதரியாக...
அன்புத் தோழனாக.......
அப்பாவி மக்களாக....
இருந்தாலென்ன........
நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
மக்கள்......................
நீரின்றி தவித்தாலென்ன
கரண்ட் இன்றி புழுங்கிலாலென்ன
பட்டினியால் மாண்டாலென்ன
அனுஉலை வெடித்து செத்தாலென்ன
கதிர் வீச்சால் வெந்து துடித்தாலென்ன
நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
மக்களை காப்பது என் வேலையல்ல
எஜமானர்களை காப்பதே என்வேலை
மக்களை விரைந்து சென்று மீட்பது
என் வேலை இல்லை.போராடும்
மக்களை விரைவாகஅடித்து
விரட்டுவதே என்வேலை
துணையாய் இருப்பது என்வேலையல்ல
எஜமானர்களுக்கும் அவர்தம்
பரிவாரங்களுக்கு துணையாய்
இருப்பதே என்வேலை......
நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
நாங்கள் கும்பலாய் வந்தால்
உரிமைகள் மறுக்கப்படும்
கூட்டமாய் வந்தால்.....
உண்மைகள் மறைக்கப்படும்
படையாய் வந்தால் உங்கள்
உயிர் பறிக்கப்படும்.
நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்
எஜமானர்கள் மனம் குளிர்ந்தால்
சலுகைகளும் பதக்கங்களும் கிடைக்கும்
அதிகாரிகள் மகிழ்ந்தால்
ஏவல் கூடும் எங்களுக்கு
அதிகாரம் குவியும்...............
இனி............
நானென்ன சொல்ல
நானொரு அதிகாரம் படைத்த
எஜமானர்களின் ஏவல் நாய்....
நல்ல கருத்து.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு நன்றி!
நீக்கு