ஞாயிறு 22 2012

ஏப்ரல்-22.இந்த மண்னில் சொர்க்கத்தைப் படைத்த மாபெரும் புரட்சி தலைவரின் பிறந்தநாள்.


உலகத்திலுள்ள தொழிலாளர்கள்.விவசாயிகளின் உள்ளங்களில்
விடுதலையைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தவரும் பரந்துபட்ட
மக்களின் நேசதக்குரியவரும் உலக பாட்டாளிவர்க்கத்தின்
ஆசானும் மாபெரும் புரட்சித்தலைவருமான தோழர் லெனின்
பிறந்தநாள்விழா.இந்நாளை சுரண்டப்பட்ட.அடக்கி ஒடுக்கப்பட்ட
மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று கொண்டாட வேண்டிய
நாள்.

தோழர் லெனினை நேசிப்போம்.அவரை கற்றறிவோம். தோழர்
லெனின் எப்படி போதித்தாரோ!..அப்படியே! பன்னாட்டு கொள்ளை
யர்களை,உள்நாட்டு கொடுங்கோலர்களை,திரித்து புரட்டும்
எத்தர்களை எதிர்த்து போராடி தோற்க்கடிப்போம்.

தோழர் லெனின் நமக்கு எப்படி வழிகாட்டினாரோ!அந்த வழியில்
இந்தியமண்ணில் புதியஜனநாயத்தை,புதிய கலாசாரத்தை
படைப்போம்.

“ சிறிய காரியங்களை செய்ய ஒரு போதும் மறக்காமல் இருப்போம்
சிறிய காரியங்களிலிருந்தே.பெரிய காரியங்கள கட்டியமைக்கப்
படுகின்றன”-என்ற லெனின் ஆனையை. லெனின் பிறந்தநாள்
வாழ்த்தாக கொண்டு செயலாற்றுவோம்.

வாழ்க!தோழர் லெனின்! ஓங்குக! தோழர் லெனின் புகழ்!
இந்தமண்ணில் சொர்க்கத்தை படைத்தவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...