செவ்வாய் 01 2012

“மே” “மே” என கதறும் மேன்மக்கள்......

மேன்மக்கள்-1
இந்தியாவில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக
விளங்கவேண்டும் என்ற லடசிய ப(ய)ணத்துக்கு உதிரத்தை வியர்வை
ஆக்கி உழைக்கும் தொழிலாளர்கள் தங்கள் ஒது்துழைப்பை நல்கவேண்டும்


மேன்மக்கள்-2
நாட்டிலும்,தமிழகத்திலும் அமைதி,வளர்ச்சி,முன்னேற்றம் 
,தொழிற்சங்கவரலாற்றை திரும்பி பார்க்க வைக்க எதிர்காலத்தில் 
உலக தரத்தக்குஇணையாக வேலைத்திறனை அதிகரித்துக்கொள்ள
 இந்நாள் ஏற்ப்படுததட்டும்.

மேன்மக்கள்-3
1969-முதல் ”மே”க்கு தொழிலாளர்க்கு தனி அமைச்சகம்.1969-ல் விபிசிங்
பிரதமராக இருந்தபோது அவர்மூலமாக.நாடு முழுவதுக்கும் “மே” க்கு
ஊதியத்துடன் விடுமுறை.1971-ல் தொழிலாளர் நலநிதி.அதை 
கொள்ளையடிக்க தொழிலாளர்நலவாரியம். ஒப்பந்த தொழிலாளர்
வாரியம்.தனிச்சட்டம்.1973-ல்தொழிலாளர்கல்வி நிலையம்,1990-ல்
நேப்பியர் பூங்காவுக்கு “மே” பூங்கான்னு பெயர் மாற்றம்.போன்ற
 திட்டங்களை செயல் படுத்தியது. திமுக ஆட்சியிலேதான்.

மேன்மக்கள்-4

8மணி நேர வேலை என்று கட்டுப்பாடு விதிக்கக்கோரி வீதிக்கு வந்த
போதுஅநீதியான அடக்குமுறைகளை ஏவி அவர்களை ரத்த சகதியில்
புரளள செய்தது ஆதிக்கபுரி.அந்த அடக்கு முறையை பாட்டாளி வர்க்கம்
புரட்டி போட்ட நாள்.இந்நாள்.பன்னாட்டு வணிகம்.சூதாடிகளுக்கு
 உரிமைஆனதாக மாறிவரும் போக்கை மாற்றி ஒப்பற்ற நிலையை
 நோக்கி வையகத்தை நகர்த்தும் பணியில் நம்மை ஒப்படைத்துக்
கொள்வோம்

மேன்மக்கள்-5
உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் உழைப்பு என்பது 
பொதுவுடமையாகும்அந்த உழைப்புக்கு உயர்வு தருவது“மே” 
விழாவாகும்.ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவது
என்பது எல்லோருக்கும் உழைப்பதற்க்கான வாய்ப்பை அளிப்ப
தன் மூலமே முடியும் உழைப்பாளர்களின் திறமையை உடமை
யாளர்கள் போற்றவும்.உடமையானவர்கள் உருவாக்கும் தொழில்
வாய்ப்பகளை உழைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளவும். சீரான
நிலைமையை காண்பதற்கு இந்த”மே”  பயன்படட்டும்.
மேன்மக்கள்-6
நாட்டின் இறையாண்மையும் சுயசார்பையும் பாதுகாக்க வேண்டிய 
பொருப்பு தொழிலாளர்களின் தோள்களிலே சுமத்தப்பட்டுள்ளது. 
சமூக நீதி எனும் விழுமியங்களை காக்க போராடுவொம்.
தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைத்துக்
கொள்ள தொடர்ச்சியான போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

மேன்மக்கள்-7
இயற்கை சூழல் காக்க படவேண்டும்.இயற்கை அழிவை தடுப்பதன்
மூலம் பூமண்டல அழிவை தடுக்க இயலும் எனவே,சமதர்ம சமுதாயம்
மலர தொழிலாளி வர்க்கம் அரசியல் தலமை ஏற்க முன்வரவேண்டும்

குறிப்பு .இன்னும் நிறைய மேன்மக்கள் “மே......மே.......மே...” என்
கதறியிருக்கிறார்கள். வாசகர்களின் பொருமையைக கருதி இத்துடன்
முடித்துக்கொள்ளப்படுகிறது.


 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...