பக்கங்கள்

Saturday, May 05, 2012

இரு கல்.......... பல கூத்து.

தமிழ் மாதமான சித்திரை நாட்களில் வெயிலுக்கும் வியர்வைக்கும்
கூத்துகளுக்கும் தமிழகத்தில் பஞ்சமே இருக்காது.என்ற வகையில்
தமிழகத்தின் இரண்டாவது மாநகரமும் ஒலக அதியங்களில் ஒன்றாக
இணையத்தில் ஒட்டு போடுங்கள் என்று ஓட்டு பிச்சை கேட்டு அதன்
மூலமாக ஒலக அதிசியமாகக்பட்ட மீனாட்சி கோயிலில் வருடத்துக்கு
ஒருமுறையாக இரு கல்லுக்கு நடக்கும் கூத்தும் ஒலக அதிசியமாக
தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது.
மதுரை

மீனாட்சி என்ற கல்லுக்கும்.சுந்தரேஸ்வரர் என்று பெயர்சூட்டிய
கல்லுக்கும் இரு ஆண்பட்டர்களால் நடக்கும் கூத்தை பார்ப்பதற்கு
முன்பு இலவசமாக இருந்தது. கூத்தைப்பார்க்க கூட்டமும் அதிக
மானதால்.டோக்கன் வேறு போட்டு கல்லாகட்ட ஆரம்பித்து
விட்டார்கள்.
இருகல்

விஞ்ஞானத்தால் உலகம் சுருங்கிவிட்டதோ இல்லையோ, மூட
 நம்பிக்கை மட்டும் விஞ்ஞானத்தையே மிஞ்சி உலகப்புகழ் பெரும்
வகையில் முன்னெறிக்கொண்டு வருகிறது.

மாங்கல்யபூசை,கோமம்,பாலியபூசை,காப்பு கட்டு இன்னும்
என்னென்ன மடத்தனங்கள் இருக்கிறதோ, அத்தனையும்
அரங்கேற்றம் நடைபெறுகிறது. இந்த அரங்கேற்றதுக்கு தோதுவாக
 முன்னர் ஒரு காலத்தில் நடந்ததாக பலவித புருடா கதைகளும்
 பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த இருகல்லுக்கு நடத்தும் கூத்துக்காக பரப்படும் கதைகளும்
 பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்துவருகின்றன..

தாய் தந்தையின் கல்யாணத்திற்க்காக மகன் தன் ரெண்டு
பொண்டாட்டிடன் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம்படை
வீட்டிலிருந்து வருகிறாராம். இதோடு இந்த கூத்துக்கு வரும்
வைணவக்கடவுளான கள்ளன் வந்து ஆற்றில் இறங்கும் கூத்தையும்
சேர்த்து வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக்கி ஒரே
கூத்தாக்கி விட்டனர்.

கல்யாண கூத்தக்கு வரும் கள்ளனை கைது செய் என்று முன்னொரு
காலத்தில் வீரமணியின் திராவிடர்கழகம் போஸ்டர் ஒட்டி
கூத்தின் மூடநம்பிக்கையை எதிர்த்தார்கள். வருடா வருடம்
வரும் கூடநம்பிக்கை கூத்தின் எழுச்சியால் அவர்களும்
 சோர்ந்து போய் விட்டார்கள்.

தனியயார்மயம்.தாராளளமயத்தின் புன்னியத்தால் இருகல்
கல்யாணமும் அதைத் தொடர்ந்த பல கூத்துகளும் வெள்ளிவிழா
கடந்து சென்சூரியும் கடந்து சென்று கொணடே இருக்கிறது.

மதம் என்ற போதை தெளியாத வரை.தெளிய வைக்காதவரை
 எவ்வளவுதான் வெயிலும் வியர்வையும் பஞசமும் பசியும்
பெருகி ஆறாக ஓடினாலும். இரு கல்லும் ...பல கூத்தும்
தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.
No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com