பக்கங்கள்

Friday, August 17, 2012

மூக்கு இருந்தா................. சளி இருக்குமாம்..............


தந்தைமார்கள் தினத்தில் பேப்பருடன் இணைப்பாக வந்த புத்தகத்தில்
பிரபலங்களான சின்மா நடிகர்கள் மற்றும் சின்ன தல.பெரிய தலைக
 தங்களுடைய தந்தைமார்களைப் பற்றி சொல்லியிருந்ததை படித்துவிட்டு
என் நண்பர் ஒருவர் அவருடைய தந்தையைப் பற்றி என்னிடம் கூறி
விட்டு என் தந்தையைப் பற்றி கூறுமாறு கேட்டார்.

நான்,, என் தந்தையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.அவருடைய
முகம் கூட எனக்கு தெரியாது.என் தந்தை என்னுடைய சிறு வயதிலே
துபாய் ஆகிவிட்டார் என்றேன்.(துபாய் என்றால் இறந்து விட்டார்அர்த்தம்)
அதனால் என் தந்தையைப்பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை என்றேன்.

நண்பரோ, விடாமல் எப்படி இறந்தார் என்று உன் அம்மா சொல்லி
இருப்பாங்கள்ல... அதச் சொல்லு............என்றார்.

கண்மாயில் மடை திறக்கும்போது ,முனி அடித்து இறந்தவிட்டார்
என்றேன்.

நாணும் நண்பரும் பேசிக் கொண்டு இருப்பதை பின்னால் இருந்த ஒருவர்
 சிரித்தார்......யார்ர....... சிரிக்கிரார்.......இருவரும் திரும்பி பார்த்தபோது்......
கடையில்  எங்கள மாதிரி டீ குடிக்க வந்தவர்.

நண்பர்,அவரைப்பார்த்து ..“ எதுக்கு சார்”, சிரிச்சிங்க......என்றார்.

கையிலிருந்த டீயை ஒரு மொடக்கு, குடித்துவிட்டு சொன்னார்.

சுடுகாட்டிலேயும், கண்மாயுலேயும் வீடுகள கட்டி அவனவன் ஜெகஜோதியாய்
இருக்குறானுக............ இப்போ.விண்வெளியில பிளாட் போடுவதற்கு ரெடியா
இருக்கானுங்க........நீங்க என்னாடான்னா...............எங்க அப்பாவே  முனி
அடிச்சிருச்சுன்னு .........உளரிகிட்டு இருக்கிங்க........

சார் அம்பது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுசார்....... நா....சின்ன பயலா
இருந்தபோது இந்த டீக்கடையெல்லாம்  வெளிக்கு போற இடம் சார்..............

அப்ப......இப்ப..எப்ப......... இருந்தாலும் என்னப்பா.................. முனியாவது
பேயாவது............ உளராதிங்கப்பா.................

“ சாமி இருக்குல்ல சார்......................

“ சாமி. இருக்கு, ஆனா முனி,பேயி,பிசாசு..அதெல்லாம் இல்ல”.........

நாங்க, மூவரும் பேசிக்கிட்டு இருந்ததை கவனிச்சுகிட்டு இருந்த
டீ... கடைக்காரரு.......அதெப்படி பேய்.பிசாசு இல்லேங்குறிங்க.... கேள்வி......
கேட்டுவிட்டு.........பேயையும்.முனியையும் பார்த்ததையும் அதனிட
மிருந்து தப்பித்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.

நண்பருக்கு அவர்களுடைய கோதாவில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு
கிடைக்காததால்,என்னை இழுத்துக் கொண்டு  நகர்ந்தார்.

மறுநாள் காலையில், நண்பர்  பேப்பருடன் வந்தார். காதில் கிசு
கிசுத்தார். காதில் விழவில்லை முழித்தபோது,பேப்பரை காட்டினார்.

 “வாய் பேச்சு முற்றி...டீக் கடை அடித்து நொறுக்கபட்டதில் இரண்டு
பேர் காயம், நாண்கு பேர் கைது!..”..............
..

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com