வெள்ளி 14 2012

கழுவுகிற மீனில்..நழுவுகிற மீன்கள்...........


கூடங்குளம் அணுஉலையில் யுரோனியம் எரி பொருள் நிரப்புவதற்கு தடை
இல்லை என்று உச்சி மனறமும் கை விரித்து விட்டது.

மனுதாரரின் தரப்பு வாதம்.
அணுஉலை அமைப்பதற்கு கூடங்குளம்  பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு
உள்ளது.அணு உலை செயல்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
 நிபுணர் குழுவின் பாதுகாப்பு பரிந்துரைகளில் 17ல் 6 பரிந்துரைகள் மட்டுமே
நிறைவேற்றப்பட்டள்ளன. இந்நிலையில் அணுஉலையில் யுரோனியம் நிரப்பு
வதை தடை செய்ய வேண்டும்.எங்கள் எதிர்ப்பு அணுஉலைக்கு எதிரானது
அல்ல...........

அரசு தரப்பு அட்டர்னி ஜெனரல்கள் சொல்லும் வாதம்.
அணு உலை மிகவும் பத்திரமானது. அனைத்து பாதுகாப்பு எற்ப்பாடுகளையும்
மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ள பிறகே,எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்
பட்டது. எரிபொருள் நிரப்பினாலும் அது செயல்படுவதற்கு இரண்டு மாதம்
ஆகும்.

உச்சி மன்றம் சொல்லும் காரணம்.

நாங்கள் அணுஉலைக்கு எதிரானவர்கள் அல்ல.அதே சமயம் நாங்கள்
மனுதாரருக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களுமல்ல. ஆனால் அணு
சக்தி ஒழுங்கு வாரியம் அறிவுறுத்திய பரிந்துரைகள் அனைத்தும் பின்பற்றப்
பட்டுள்ளனவா என்பதும் தெரியவேண்டும். இதோடு சென்னை உயிர் நீதி
மனறம் அளித்துள்ள தீர்ப்பையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதோடு
இந்த வழக்கை ஆரம்பம் முதல் விசாரிக்க வேண்டியுள்ளது. அணுஉலை
பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை  மத்திய  அணுசக்தி குழுவின் பரிந்
துரைகளின் அமுலாக்கம் குறித்த ஆவணங்களை அடுத்த விசாரணை நடை
பெறும் 20ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்


அம்மாடியோவ்,.............கழுத்தை சுற்றி மூக்கை தொடுகின்ற, கதையாவுல
இருக்கு..........இதைத்தான் கழுவுற மீனுல.....நழுவுற மீனுன்னு சொல்லுவாங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...